ஸ்லோகம் #21: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 21]
ச2லதி3 ஸபெ4யலி பு3த4ஜனங்க3ளு ஹலவு வித4 ப்ரஷ்னெக3ள மாட3லு
ஸுலப4வாது3த்தரக3ளித்தரு திளியப3யஸித3ரு |
ஹலவு வித4த3ர்த்த2க3ளவரு ஸ்ரீ நிலய நாமத3
ஸாஸிரக3ளிகெ3
அலவபோ3த4ரு பேளலதி விஸ்மயதி3 நமிஸித3ரு ||21
சலதி - வழியில்; ஸபெயலி - சபைகளில்; புதஜனங்களு - கற்றறிந்த மக்கள்; ஹலவு வித - பல வித; ப்ரஷ்னெகள மாடலு - கேள்விகளைக் கேட்க; ஸுலபவாத - மிகவும் சுலபமாக; உத்தரகளித்தரு - விடைகளை அளித்தார்; ஸ்ரீ நிலய - ஸ்ரீவிஷ்ணுவின்; நாமத ஸாஸிகளிகெ - சஹஸ்ரநாமத்திற்கு; ஹலவுவித - பலவித - அர்த்தகளவரு - அர்த்தங்களை அவர்கள்; திளியபயஸிதரு - கேட்க விரும்பினர்; அலவபோதரு - ஸ்ரீமதானந்ததீர்த்தர்; பேளலு - அதனை கூற; விஸ்மயதி - மனம் மயங்கி; நமிஸிதரு - வணங்கினர்.
ஸ்ரீமதாசார்யரின் பயணத்தில் நடந்த அற்புதங்களை தொடர்கிறார் ஸ்ரீவிஷ்ணு பிரஸன்ன தீர்த்தர்.
ஸ்ரீமதாசார்யர் தமது பயணத்தில், கற்றறிந்த மக்கள், பல வித கேள்விகளைக் கேட்க, அவற்றிற்கு மிகவும் சுலபமாக விடைகளை அளித்தார். ஸ்ரீவிஷ்ணுவின் சஹஸ்ர நாமத்திற்கு பலவித அர்த்தங்களை அவர்கள் கேட்க விரும்பினர். ஸ்ரீமதானந்ததீர்த்தர் அதனை கூற, அவர்கள் மனம் மயங்கி, அவரை விழுந்து வணங்கினர்.
மத்வ விஜயம் ஆறாம் சர்க்கம் இங்கு தொடங்குகிறது.
ஐதரேயமத கிஞ்சன் ஸூக்தம் ஸூசயன் ஸதஸி தத்ர கரிஷ்ட: |
ஸ்ரோதுமிச்சதி ஸபா பகவத்ப்ய: ஸூக்த பாவமிதி தாவதுவாச ||6-1
பயஸ்வினி நதிக்கரையில் ஒரு ஆலயத்தின் மண்டபத்தில் வீற்றிருந்த ஆசார்யரை நோக்கி ஒரு பண்டிதர், ஐதரேயத்தின் ஒரு சூக்தத்தை விளக்கவேண்டுமென்று கேட்டார். ஆசார்யர், மிகத் தெளிவாக, சரியான உச்சரிப்பில், அனைத்து லட்சணங்களுடன் அந்த வேத சூக்தத்தைக் கூறி, அதன் பொருளையும் கூறினார். ஆசார்யரின் சூக்த உச்சரிப்பு, தேவகுருவான பிருஹஸ்பத்யாசார்யரின் சூக்த உச்சரிப்பையும் விட சிறந்ததாக இருந்தது.
அங்கிருந்த பண்டிதர்கள் அதற்கு வேறொரு பொருளினைக் கூற, ‘நீங்கள் கூறியதும் சரியே’ என்றார்.
ஸ்யாத் ததேத்தமபி சம்பவிதார்த்த: த்ர்யர்ததாம் ஸ்ருதிஷு வித்த தஷார்த்தம் |
பாரதம் நனு ஷதார்த்தமபி ஸ்யாத் வைஷ்ணவம் பத சஹஸ்ர தயம் ஹி || (6-4)
வேதங்களுக்கு மூன்று அர்த்தங்கள், மகாபாரதத்திற்கு பத்து, விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு பெயருக்கும் நூறு அர்த்தங்கள் உள்ளன என்று சொல்லி, அதற்கு ஸ்காந்த புராணத்தின் உதாரணத்தைக் கூறினார். இதையே பாவப்ரகாசிகையில்,
த்ரயோர்த்தா: சர்வவேதேஷு தஷார்த்தா: சர்வபாரதீ |
விஷ்ணோ: சஹஸ்ரநாமாபி நிரந்தரஷதார்த்தகம் || இதி வசனாத் || (பா.ப்ர)
என்று எழுதியிருக்கிறார்.
’விஷ்வ’ சொல்லின் பொருள்
அப்போது அங்கிருந்த பண்டிதர்கள், விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு பெயருக்குமான நூறு பொருளை ஆசார்யரால் சொல்ல முடியாது, அவரை வென்றுவிடலாம் என்று எண்ணி, அதனை தங்களுக்குச் சொல்லுமாறு கேட்டனர். ஆசார்யர் ‘வர்ணயாமி’ (சொல்கிறேன்) என்று, அதை அவர்கள் அப்படியே திரும்பச் சொல்லவேண்டும் என்றார்.
ப்ரத்யய ப்ரக்ருதி சங்கம பங்கீ ஷப்தசாஸ்திர விஹிதாம் ப்ரதிதர்ஷ்ய |
சுத்ததீ: ஸ்ருதி ஷிர: ஷத சித்தான் அப்யதாத சபதி விஷ்வ பதார்த்தான் || (6-7)
இலக்கணத்திற்கு ஒப்பி, வேத புராணங்களில் சொல்லியவாறு, ‘விஷ்வ’ என்னும் சொல்லிற்கு நூறு அர்த்தங்களை சொல்லத் துவங்கியதும் (சுமார் 50க்கும் மேற்பட்ட அர்த்தத்தை கூறியதும்), அங்கிருந்த பாரதம் முதலான கிரந்தங்களில் வல்லவர்களான பண்டிதர்கள், ஆசார்யர் கூறுவதை பின்பற்ற முடியாமல் தவித்தனர். அவரின் முக-கமலத்திலிருந்து பிரவாகமாக வந்த சொற்களைக் கேட்டு திக்பிரமை பிடித்து அமர்ந்தனர். அதனை திரும்பச் சொல்ல முடியாததை எண்ணி வருந்தினர். ‘ஆசார்ய மத்வர் சர்வக்ஞர், தேவதைகளைவிட சிறந்த திறன் படைத்தவர்’ - ‘தேவதாஸ்வசுலபா ப்ரதிபா தே மானுஷேஷு சபலேஷு கதா கா’| (6-10) - என்று ஆசார்யரை புகழ்ந்தனர். அவரிடம் மன்னிப்பு கேட்டவாறு விழுந்து வணங்கினர்.
மத்வ விஜய ஆறாம் சர்க்கத்தைப் பற்றியும், இந்த சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றியும் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார்.
தத்ர தத்ர விசித்ராணி சரித்ராணி ப்ரத3ர்ஷயன் |
சரன் க்ஷேத்ரேஷு ஸர்வேஷு ஹிமவந்தம் த3த3ர்ஷ ஸ: ||7||
நாடு முழுவதும் திக்விஜயம் செய்தவாறு, அனேக சபைகளில் தம் அற்புத மகிமைகளைக் காட்டினார் ஸ்ரீமதாசார்யர். ஒரு சபையில் ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ர நாமத்தில் வரும், ‘விஷ்வ’ என்னும் சொல்லிற்கு 100 அர்த்தங்கள் உள்ளன என்று சொல்லி, தம் சர்வக்ஞத்வத்தை வெளிப்படுத்தினார். அடுத்து இன்னொரு சந்தர்ப்பத்தில், தம்முடைய முக்காலத்தையும் அறியும் ஞானத்தை வெளிப்படுத்தினார். இப்படியாக, சஞ்சாரத்தில், பதரி க்ஷேத்திரத்திற்கு வந்து, தாம் இயற்றிய கீதா பாஷ்யத்தை ஸ்ரீமன் நாராயணனுக்கு காணிக்கையாக கொடுத்தார்.
விசார: ஸாத4னௌக4ஸ்ய ஞேயரூப ப்ரபோ3த4னம் |
உபாஸாயாமதிஷயோ தா3ர்ட்4யம் ப4க்திர்ஹரௌ கு3ரௌ ||19||
ஆறாம் சர்க்கம் படிப்பதால் வரும் பலன் : சாதனைகளைப் பற்றிய ஞானம் (அறிவு)
ஸ்ரீமதாசார்யரின் மகிமைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment