ஸ்லோகம் #26: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 26]
தாபஸோத்தம பா3தராயண ரூபவனுபமசித் ஸுக2மாயா
பாத3மௌளிய நோடி3 பரவஷராகி3 மெய்மரெதரு |
தாபஸர மத்4யத3ல்லி பொளெயுவ ரூபவிது3 மானஸதி3 நெலெஸிஹ
ஸ்ரீபதியெந்த3ரிது விஸ்மராத3ராக்ஷணதி3 ||26
பாதராயண - ஸ்ரீவேதவ்யாசரின்; அனுபம - ஒப்பற்ற; சித்ஸுக - சித்ஸுக; ரூபவனு - ரூபத்தை; தாபஸோத்தம - ஞானிகளில் சிறந்தவரான ஸ்ரீமதாசார்யர்; ஆபாதமௌளிய நோடி - பாதங்களிலிருந்து தலை வரை பார்த்து; பரவஷராகி - பரவசம் அடைந்து; மெய்மரெதரு - மெய்மறந்தார்; தாபஸர மத்யதல்லி - ஞானிகளின் நடுவில் பொளெயுவ ரூபவிது - ஒளிரும் ரூபமான இவர்; மானஸதி நெலெஸிஹ - நம் மனதில் நிலைத்திருக்கும்; ஸ்ரீபதியெந்தரிது - ஸ்ரீபதியே என்று அறிந்து; ஆக்ஷணதி - அந்த நொடியில்; விஸ்மிதராதரு - மெய் மறந்தார்.
ஸ்ரீமதாசார்யர் தரிசிக்கும் ஸ்ரீவேதவ்யாஸரின் தோற்றத்தின் வர்ணனையை இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
மத்வ விஜய 7-16ம் ஸ்லோகத்தில் ஸ்ரீமதாசார்யர், ஸ்ரீவேதவ்யாஸரை சந்திக்கும் இந்த விஷயம் வருகிறது.
முனி மண்டல மத்ய வர்த்தின்
த்ரிஜகன்மண்டல மண்டனாயிதம் |
இஹ ஸத்யவதீ ஸுதம் ஹரிம்
பதிபூர்ண ப்ரமதி: ஸமைக்ஷ ||7-16
நிஜ ஹ்ருத் கமலேதி நிர்மலே
ஸததம் ஸாது நிஷாமயன்னபி |
அவலோக்ய புன: புனர்னவம் தமஸௌ
விஸ்மித இத்யசிந்தயத் ||7-17
முனிவர்களுக்கு நடுவில், மூன்று உலகத்திற்கும் அலங்காரரான சத்யவதியின் மகனான, சிறந்த இருக்கையில் அமர்ந்திருந்த வேதவியாசரை, பூர்ணப்ரமதியான ஆசார்யர் கண்டார். எப்போதும் இதய-கமலத்தில் இறைவனைக் காணும் ஆசார்யர், வேதவியாசரை ஒரு புத்தம்புதிய மனிதரைக் காண்பதுபோல கண்டு வியப்படைந்தார்.
ஸ்ரீவேதவ்யாஸரின் அகணித குணங்களை மத்வவிஜயகாரர், 7-24 ஸ்லோகத்தின் வரை மிகவும் அற்புதமாக விளக்கியுள்ளார்.
அகணய்ய குணை: சுபூரிதம் பரிபூர்ணகணிதாத்ம சத்குணை: | (7-24)
பரிபூர்ண-அனந்த-மங்களகர நற்குணங்களால் நிரம்பிய ஞானானந்த ஸ்வரூபனை, வேதவியாசரின் பரம மங்களகரமான அழகான உடலைக் கண்டு தன்யனானேன் - என்று நினைத்தார் மத்வர்.
அடுத்த ஸ்லோகத்தில், ஸ்ரீமத்வரின் மற்றும் ஸ்ரீவேதவ்யாஸரின் சந்திப்பினை விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment