ஸ்லோகம் #30: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 30]
த2ளத2ளிஸுதிஹ தூ4மவர்ஜித ஜ்வலனத3ந்திஹ தாபஸாக்ருதி
குளிதிருவுத3னு
நோடி3 நயன விகாஸ பொந்தி3த3ரு |
ஹொளியிதாக்ஷண ஈத நிக3மாவளிய ரக்ஷிஸிதா3தனெம்பு3து3
ஹலவு வித4த3வதாரக3ள சிந்திஸுத நமிஸித3ரு ||30
தளதளிஸுதிஹ - பளபளக்கும்படியான; தூமவர்ஜித ஜ்வலனதந்திஹ - புகையற்ற தூய்மையான நெருப்பைப் போன்றதான; தாபஸாக்ருதி - ஒரு சிறந்த உருவம்; குளிதிருவுதனு நோடி - அமர்ந்திருப்பதைக் கண்டு; நயன விகாஸ பொந்திதரு - கண்கள் பவித்ரத்தை அடைந்தார். ஹொளெயிதாக்ஷண - பார்த்த அந்த நொடியில்; ஈத - இவரே; நிகமாவளிய ரக்ஷிஸிதாத - வேத ராசிகளை காத்தவன்; எம்புது - என்பதை; ஹலவு விதத - பற்பல விதமான; அவதாரகள - அவதாரங்களை; சிந்திஸுத - சிந்தித்தவாறு; நமிஸிதரு - வணங்கினார்.
நாராயண ஆசிரமத்தில் ஸ்ரீமன் நாராயணனை ஸ்ரீமதாசார்யர் தரிசித்த விதத்தை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
பளபளக்கும்படியான, புகையற்ற தூய்மையான நெருப்பைப் போன்றதான, ஒரு சிறந்த உருவம் அமர்ந்திருப்பதைக் கண்டு, ஸ்ரீமதாசார்யர் கண்கள் பவித்ரத்தை அடைந்தார். பார்த்த அந்த நொடியில், இவரே வேத ராசிகளைக் காத்தவர் என்பதை பற்பல விதமான அவதாரங்களை சிந்தித்தவாறு வணங்கினார்.
ஸ்ரீமதாசார்யர், ஸ்ரீமன் நாராயணனை தரிசிப்பதை மத்வ விஜயத்தில் 8-7 ஸ்லோகம் முதல் 8-11 வரை பார்க்கலாம்.
நயனத்வயேன நலின ப்ரபா முஷா பரிபுல்லதா விலஸிதேன விஸ்மயாத் ||
தமவேக்ஷ்ய தர்ம ஜமதர்ம துர்லபம் மனசேதி பூரிதர மானசோஸ்மரத் || (8-9)
நாராயணாஸ்ரமத்தில் மகா தேஜஸ்ஸினைக் கொண்ட நாராயணன் நார்மடியை உடுத்தி, ஜடாதாரியாக இருந்தார். ஸ்வ-ரமணனானாலும் தவம் மேற்கொண்டிருந்தவரைக் கண்டார். அபாரமான தேஜஸ் கொண்ட, யமதர்மனின் மகனான அவதரித்து வந்த நாராயணன், புண்ணியம் செய்யாதவர்களால் அடைய முடியாதவராக இருந்தார். இவரைக் கண்ட ஆசார்யர் இப்படி நினைத்தார். 14 உலகங்களின் அழிவு, காத்தல், படைத்தலுக்குக் காரணமானவர் இவரே. மூன்றுவித ஜீவர்களின் தகுதிக்கேற்ப கதியைக் கொடுப்பவர் இவரே. படைத்தல் முதலான அஷ்ட-கர்த்ருத்வத்திற்கு காரணமான நாராயணன் இந்த உலகத்திற்கே தலைவன். புராணபுருஷன், அனந்த நற்குணங்களைப் படைத்தவன், தோஷங்கள் அற்றவன், ஸ்வதந்திரன். தன் உண்மையான பக்தர்களைக் காப்பாற்றவேண்டி அனைத்து காலங்களிலும் பற்பல ரூபங்களை எடுத்து அவதரிக்கிறார்.
அடுத்து நாராயண பண்டிதாசார்யர், பகவந்தனின் தசாவதார மற்றும் வேறு பல ரூபங்களின் வர்ணனையை ஸ்லோகம் 8-13 முதல் 8-42 வரை செய்திருக்கிறார். இவை மிகவும் கவித்துவ பூர்ணமாகவும், ஆன்மிக தத்வங்களை விளக்கும் வகையிலும் அமைந்துள்ளன. மேலும், ஒரே ஸ்லோகத்தில் இரு அவதார விளக்கங்களை கவி தருகிறார். ஸ்லேஷ அலங்கார நடையில், ஒரு வார்த்தைக்குள் இரு அர்த்தங்கள் பொருந்துமாறு ஸ்லோகங்கள் அமைப்பது நாராயண பண்டிதரின் தனிச்சிறப்பு ஆகும்.
இவை அனைத்திற்கும் முகுடமாக, ஸ்லோகம் 8-41 அமைந்துள்ளது எனலாம்.
பரமாத்மனே சததமேக ரூபிணே தசரூபிணே ஷதசஹஸ்ர ரூபிணே |
அவிகாரிணே ஸ்புடமனந்த ரூபிணே சுகசித் சமஸ்ததனவே நமோ நம: || (8-41)
வேதவியாசனாக, ஆத்ம என்னும் பெயரைக் கொண்டு, ஒன்று பத்து ஆயிர ரூபங்களைக் கொண்டவன். எண்ணிக்கையற்ற ரூபங்களைக் கொண்டவன். அழகானவன். சச்சிதானந்த மயனானவன். தோஷங்கள் அற்றவன். அற்புத மகிமைகளைக் கொண்ட பரப்பிரம்மனான உனக்கு பற்பல நமஸ்காரங்கள். இப்படி வணங்கியவாறு, ஸ்வகதபேதவிவர்ஜிதரான வியாச நாராயணரை மறுபடி மறுபடி பூர்ணப்ரக்ஞர் நமஸ்கரித்தார்.
ஸ்ரீமத்வாசார்யருக்கு, ஸ்ரீமன் நாராயணன் இட்ட ஆணையை, ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.
***
No comments:
Post a Comment