ஸ்லோகம் #12: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
****
[ஸ்லோகம் 12]
பா3லலீலெக3ளல்லி
ப3ஹுதர காலவனு களெயுத வினோத3தி3
பா3லனொப்3ப3ன சிரதனத3
யாதனெய பரிஹரிஸி |
ஆலயகெ தெரளுவ மொத3லு கு3ணஷாலி
கு3ருவனு நமிஸி தன்ன க்ரு
பாலவதி3 பரலோக ஸாத4க ஹரி
ப4குதியித்த ||12
பாலலீலெகளல்லி - தன்னுடைய பால லீலைகளில்; பஹுதர - இப்படியான பல; காலவனு களெயுத - காலங்களை கழித்தவாறு; பாலனொப்பன - தன் நண்பன் ஒருவனின்; சிரதனத யாதனெய - நீண்ட காலமாக இருந்த பிரச்னையை; வினோததி - மிகவும் சாதாரணமாக; பரிஹரிஸி - பரிகரித்து; ஆலயகெ தெரளுவ மொதலு - தான் குருகுலத்திற்கு புறப்படும் முன்னர்; குணஷாலி குருவனு நமிஸி - குணசாலியான குருகளை வணங்கி; தன்ன க்ருபாலவதி - தன் கருணையால்; பரலோக ஸாதக - பரலோகத்திற்கு சாதனமான; ஹரி பகுதியித்த - விஷ்ணு பக்தியை வளர்த்தான்.
சிறுவன் வாசுதேவனின் மகிமைகளை ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் மேலும் இந்த ஸ்லோகத்தில் தொடர்கிறார்.
தன்னுடைய பால லீலைகளில், இப்படியான பல காலங்களை கழித்தவாறு, தன் நண்பன் ஒருவனின் நீண்ட காலமாக இருந்த பிரச்னையை, மிகவும் சாதாரணமாக பரிகரித்தான் வாசுதேவன். தான் குருகுலத்திற்கு புறப்படும் முன்னர், குணசாலியான குருகளை வணங்கி, தன் கருணையால், பரலோக ஸாதனமான விஷ்ணு பக்தியை வளர்த்தான்.
தன் நண்பனின் பிரச்னையை வாசுதேவன் தீர்த்து வைத்த மகிமை, மத்வ விஜயத்தில் 3-53 ஸ்லோகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
ப்ரியவயஸ்ய ஷிரோ
குரு வேதனாம்
அஷமயத் ஸஹஜாமபி
துஸ்ஸஹாம் |
ஸ விபினே விஜனே
முக வாயுனா
ஸ்ரவண கோசரிதேன கதா சன ||3-53
ஒரு முறை வாசுதேவன், குருவின் மகனுடன் காட்டிற்குச் சென்றிருந்தான். நண்பனுக்கு பிறப்பிலிருந்தே இருந்த தலைவலி அப்போது மிகவும் கடுமையாயிற்று. அப்போது வாசுதேவன் தன் நண்பனின் காதுகளில் தன் வாயை வைத்து ஊதினான். உடனடியாக அந்த தலைவலி பிரச்னை தீர்ந்துபோனது. பிறகு அது வரவேயில்லை. இப்படியாக தன் குருவின் மகனுக்கு அருளினார்.
சாக்ஷாததோப நிஷதோ
விபுரைதரெய்யா:
பாடச்சலேன
விஜனேர்தரசம் ப்ருவாண: |
அத்யாபகாய விததார
விமோக்ஷ பீஜம்
கோவிந்த பக்திமுசிதாம் குருதக்ஷிணாம் ஸ: | (3-55)
ஒருமுறை தன் குருவினிடம் ஐதரேய உபநிஷத் படிக்கும் சந்தர்ப்பத்தில், தனிமையில், மிகச் சிறந்த, மோட்சத்திற்கான வழியான, சிறப்பு அர்த்தங்களைக் கூறி விஷ்ணுபக்தியினை அவரிடம் வளர்த்தார். இதுவே சிறுவன் குருவிற்கு அளித்த குருதட்சிணை ஆகும். பிறகு தேவதைகள் வாசுதேவனை ‘ஸ்வாமி, துஷ்டர்களை திருத்துங்கள், ஸ்ரீஹரியின் குணங்களை தெரியப்படுத்துங்கள், சஜ்ஜனர்களை காப்பாற்றுங்கள்’ என்று வேண்ட, மூன்று உலகத்திற்கும் குருவான இவர், தம் குருவினிடமிருந்து ஒப்புதல் பெற்று, குருகுலத்திலிருந்து புறப்பட்டார்.
இத்துடன் மத்வ விஜயத்தின் மூன்றாம் சர்க்கத்தின் விஷயங்கள் முடிவடைந்தன. அடுத்த ஸ்லோகத்திலிருந்து நான்காம் சர்க்கத்தின் விஷயங்களை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment