ஸ்லோகம் #31: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 31]
எரடு3 ஹரிரூபக3ள ப3ளியலி பரமஹருஷாம்பு4தி3யலிருதிரெ
தொ3ரகதீ3ஸுக2வெம்பு3த3ரித1ரு மூரு லோகத3லி |
அரியதஞ்ஞானிக3ளு
ரசிஸித3 து3ருள பா4ஷ்யவ
க2ண்டி3ஸுவுத3கெ
தெரளு பு4வனகெ த3க்ஷணதி3 நீனெந்த3 லோகபதி ||31
எரடு ஹரிரூபகள பளியலி - வேதவ்யாஸ நாராயண என்னும் இரு ஹரி ரூபங்களின் அருகில்; பரமஹருஷாம்புதியலி - மிகவும் மகிழ்ச்சிக்கடலில்; இருதிரெ - இருந்தால்; மூரு லோகதலி - மூன்று உலகங்களில்; அதிஸுக - உண்மையான மகிழ்ச்சி; தொரகது - கிடைக்காது; என்புதரிதரு - என்பதை அறிந்தார்; லோகபதி - உலகநாயகனான ஸ்ரீமன் நாராயணன்; அரியதஞ்ஞானிகளு - ஒன்றும் தெரியாத அஞ்ஞானிகள்; ரசிஸித - இயற்றிய; துருள பாஷ்யவ - கெட்ட அர்த்தங்களைக் கொண்ட பாஷ்யங்களை; கண்டிஸுவுதக்கெ - கண்டிப்பதற்காக; தக்ஷணதி - உடனடியாக; புவனக்கெ - உலகிற்கு; நீனெந்த - நீங்கள். தெரளு - கிளம்புங்கள்; எந்த - என்றார்.
ஸ்ரீமத்வாசார்யருக்கு, ஸ்ரீமன் நாராயணன் இட்ட ஆணையை, ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.
வேதவ்யாஸ, நாராயண என்னும் இரு ஹரி ரூபங்களின் நடுவில், மிகவும் மகிழ்ச்சிக் கடலில் இருந்ததைப் போல அமர்ந்திருந்தார். இதைப் போன்ற உண்மையான மகிழ்ச்சி மூன்று உலகங்களிலும் கிடைக்காது என்பதை அறிந்தார். உலக நாயகனான ஸ்ரீமன் நாராயணன், ‘ஒன்றும் தெரியாத அஞ்ஞானிகள் இயற்றிய, கெட்ட அர்த்தங்களைக் கொண்ட பாஷ்யங்களை கண்டிப்பதற்காக, உடனடியாக நீங்கள் உலகிற்கு கிளம்புங்கள்’ என்றார்.
இந்த விஷயம் மத்வ விஜயத்தில் 8-42 ஸ்லோகத்திலிருந்து வந்திருக்கிறது.
இதி சிந்தயன்னவிரளாந்தரோ ஹரிம்
ப்ரணானாம ஸ ப்ரணயமாத்ருதோsமுனா |
அஜிதௌ பரஸ்பர ஸபாஜிதௌ ஸ தௌ
நிகஷா நிஷீததி புரோபவேஷினௌ || 8-42
இவ்வாறு சிந்தித்தவாறு, ஸ்ரீபூர்ணப்ரக்ஞர், ஸ்ரீமன் நாராயணன் மற்றும் ஸ்ரீவேதவ்யாஸர் இருவருக்கும் இடையே மிகவும் பக்தி மரியாதைகளுடன் அமர்ந்திருந்தார்.
ஸ்ருணு தேவ கார்யமவதார்ய தைர்யவத்
யதுதீர்யமாணமிதமார்ய ஸம்மதம் |
பவிதாsன்ய துஷ்கரதரம் விதாய
தத் தருணம் தவாவ தரணம் மஹா பலம் ||8-44
மிகுந்த பணிவு கொண்ட, ஏகாந்த பக்தரான ஆசார்யரிடம் நாராயணன் - ‘மத்வாசாரியரே ! யாராலும் செய்யமுடியாத செயல்களை செய்து முடித்தால், தங்களின் அவதார நோக்கம் நிறைவேறும். அசுரர்கள் துர்பாஷ்யங்களை இயற்றி, தத்வஞானத்தை மறக்கடித்தனர். பிரம்மசூத்ரங்களின் உண்மையான பொருள் மறைந்திருக்கிறது. சஜ்ஜனர்களுக்கு உண்மையான ஞானத்தைக் கொடுப்பதற்காக, பிரம்மசூத்ரத்திற்கு பாஷ்யத்தை விரைவாக எழுதுவீர். வேதபுராணங்களின் உண்மையான பொருளை ஆராய்ந்து அவற்றை பரப்புவீர்’ - என்றார்.
ஸ்ரீமன் நாராயணனின் ஆணையை தொடர்ந்து அடுத்த ஸ்லோகத்திலும் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment