Wednesday, March 2, 2022

ஸ்லோகம் #8: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #8: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 8]

ம்ருது3ள கலபா4ஷணதி3 ஸ்வஜனகெ முத3வனீயுதலொந்து3 தி3

வைதி33னு வனவனு வ்ருஷப4 பா3லவ பிடி3து3 ஸந்தஸதி3 |

பெத3ரிஸித3 ருணகொட்ட த4னிகன ஹ்ருத3ய கரகு3வ தெரதி3 ஸுந்த3

வத3ன த3ர்ஷனவித்த வாயுகுமார ரக்‌ஷிஸலி ||8 

ம்ருதுள - அழகான / கொஞ்சும்; கலபாஷணதி - மழலை மொழியில்; ஸ்வஜனகெ - தன் குடும்பத்தவர்க்கு; முதவனீயுத - மகிழ்ச்சியைக் கொடுத்தான்; ஒந்து தின - ஒரு நாள்; வ்ருஷப பாலவ பிடிது - எருதின் வாலினைப் பிடித்துக் கொண்டு; ஸந்தஸதி - மகிழ்ச்சியுடன்; வனவனு - காட்டினை நோக்கி; ஐதிதனு - சென்றான்; பெதரிஸித - கோபத்துடன் மிரட்டிய; ருணகொட்ட - கடன் கொடுத்த; தனிகன - செல்வந்தனின்; ஹ்ருதய கரகுவ - இதயம் உருகுமாறு; ஸுந்தர வதன - தன் இன்முகத்தினை; தர்ஷனவித்த - தரிசனம் கொடுத்த; வாயுகுமார - வாயுகுமாரர்; ரக்‌ஷிஸலி - நம்மை காக்கட்டும். 

குழந்தை வாசுதேவனின் பால லீலைகளை ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார். 

அழகான கொஞ்சும் மழலை மொழியில், வாசுதேவன் தன் குடும்பத்தவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தான். ஒரு நாள், எருதின் வாலைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் காட்டிற்குச் சென்றான். கோபத்துடன் மிரட்டிய கடன் கொடுத்த செல்வந்தனின் இதயம் உருகுமாறு, தன் இன்முகத்தினை தரிசனம் அளித்த வாயுகுமாரர், நம்மை காக்கட்டும். 

தேவாதி ஸத்பிரனு பாலிதயாssதரேண

தேவ்யாssத்மனேவ விலஸத் பதயா நிதாந்தம் |

அவ்யக்தயா ப்ரதமதோ வதனேsஸ்ய வாண்யா

ஷாலீனயேவ புவனார்ச்சிதயா விஜஹ்ரே || 2-43 

உலகத்தின் செயல்கள் யாரினால் நடைபெறுகிறதோ அத்தகைய வாயுதேவர், வாசுதேவனாக ஒரு சாதாரண குழந்தையைப் போல தன் மழலைப் பேச்சினைத் துவக்கினார். பிஞ்சுக் கால்களால் நடந்தார். மெதுவாக எழுந்து நின்றார். நடக்கத் துவங்கினார். 

புச்சாந்தமச்சமவ லம்ப்ய கதா சிதேஷ:

ப்ராதர்வ்ரஜாத்வ வ்ரஜத ஏவ நிஜர்ஷபஸ்ய |

ப்ராயாத் ப்ரியஸ்ய ஸஹஸா ஸ்வ ஜனைரத்ருஷ்டோ

நானா வனேஷு சரதஷ்சரதஸ்த்ருணானி ||2-45 

ஒரு நாள் காலை வேளை. மத்யகேஹ பட்டரின் எருது, மேய்வதற்குக் கிளம்பியது. இந்தச் சிறுவன் அதன் வாலினைப் பிடித்து, யாரும் பார்க்காதபோது அதனுடனே புறப்பட்டான். இதை அறியாத பெற்றோர், உறவினர் நண்பர்கள் அனைவரும், பட்டரின் ஒரு வயதுக் குழந்தையை காணவில்லை என்று வருத்தத்துடன் தேடத் துவங்கினர். குழந்தையை எருதுடன் காட்டில் பார்த்தேன் என்று ஒருவர் சொன்னதை, மாலையில் திரும்பி வந்த குழந்தையைக் கண்டதும் நம்பினர். 

லீலா கரேண ஸ கரேண ஸு கோமலேன பீஜாந்தராணி கில கானி சிதாஷு தஸ்மை |

ஸ்மித்வாsர்பகோsபிமத நிஷ்கபதே யதாsதாத் ஆதத்த தானி தனிகோ பஹுமான பூர்வம் ||2-51 

ஒரு நாள், மத்யகேஹ பட்டருக்கு எருதினை விற்ற வியாபாரி, அதற்கான பணத்தைப் பெறவேண்டி அவர் வீட்டிற்கு வந்தான். அப்போது விளையாடிவிட்டு திரும்பிய வாசுதேவன், தந்தையை உணவு உண்பதற்கு அழைத்தான். வியாபாரிக்கு பணம் கொடுக்கும்வரை தான் உண்பதில்லை என்று கூறி, வாசுதேவனை உணவுண்ணச் சொன்னார் பட்டர். அந்த வியாபாரிக்குக் கொடுக்கவேண்டிய பணத்திற்கு பதிலாக, தன் கை நிறைய புளியங்கொட்டைகளை எடுத்துக் கொடுத்தான் வாசுதேவன். அந்த வியாபாரியும் மிகவும் மகிழ்ச்சியுடன் அதையே பெற்றுச் சென்றான். 

இத்தகைய வாயுகுமாரர், நம்மை காக்கட்டும் என்று சொல்லி, சிறுவன் வாசுதேவனின் பாலலீலைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

இத்துடன் மத்வவிஜயத்தின் இரண்டாம் சர்க்க விஷயங்கள் முடிந்தன. 

***

No comments:

Post a Comment