ஸ்லோகம் #33: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 33]
ஹோக3லாக்3ஞெயனித்த யது3ஸுதனாகி3
ஜனிஸித3 ஹரிகெ3 ஷிரவனு
பா3கி3 ஸகலவ ஷ்ரவணகெ3ய்த3ரு ஷ்ருதிபதிக3ளிந்த3 |
போகி3ப3ரலப்பணெய படெ3த3ரு வேக3த3லி தா3டி1த3ரு
கி3ரிக3ள
பூ4க3ஸுரதரு நோடி3 ஷிஷ்யரு நீகி3த3ரு க்லேஷ ||33
ஹோகலாக்ஞெயனித்த - சென்று வருமாறு ஆணையிட்ட; யதுஸுதனாகி ஜனிஸித - யது குலத்தில் பிறந்தவரான; ஹரிகெ - ஸ்ரீஹரிக்கு; ஷிரவனு பாகி - தலை வணங்கி; ஷ்ருதிபதிகளிந்த - ஸ்ரீவேதவ்யாஸரிடமிருந்து; ஸகலவ - அனைத்தையும்; ஷ்ரவணகெய்தரு - கேட்டு அறிந்தார்; போகிபரலப்பணெய - சென்று வருகிறேன் என்று அவரிடம் ஆணையை; படெதரு - பெற்றார்; வேகதலி - வேகமாக; கிரிகள தாடிதரு - மலைகளைத் தாண்டினார்; பூகஸுரதரு - பூமிக்கு வந்த கல்பவ்ருக்ஷத்தை (ஸௌகந்திகா); நோடி - தரிசித்து; சிஷ்யரு - சிஷ்யர்கள்; க்லேஷ - தங்கள் துக்கத்தினை; நீகிதரு - நீங்கினர்.
இந்த ஸ்லோகத்திலிருந்து ஒன்பதாம் சர்க்கத்தின் விஷயங்களை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
சென்று வருமாறு ஆணையிட்ட, யது குலத்தில் பிறந்தவரான ஸ்ரீஹரிக்கு தலை வணங்கி, பின், ஸ்ரீவேதவ்யாஸரிடமிருந்து அனைத்தையும் கேட்டு அறிந்தார். பின், அவரிடமிருந்தும், சென்று வருகிறேன் என்று அவரின் ஆணையைப் பெற்றார். வேகமாக மலைகளைத் தாண்டினார். பூமிக்கு வந்த கல்பவ்ருக்ஷத்தை தரிசித்து சிஷ்யர்கள், தங்கள் துக்கங்களை போக்கிக் கொண்டனர்.
மத்வ விஜயம் 9-1 ஸ்லோகத்தில் இந்த விஷயம் வருகிறது.
சோதயந்தமத கந்துமாதராத்
தத்ர தர்ம ஜமஜம் ப்ரணம்ய ஸ: |
ஸௌக்ய தீர்த்த கவிலோக நாயகோ
வேத நாயக புரஸ்ஸரோ யயௌ ||9-1
பின், கற்றவர்களில் சிறந்தவரான ஆனந்ததீர்த்தர், பிறப்பு இல்லாத ஸ்ரீமன் நாராயணனை வணங்கி, ஸ்ரீவேதவ்யாஸருடன் அவருடைய இருப்பிடத்திற்கு திரும்பினார்.
ஆஸ்ரமாந்தரமவாப்ய கிருஷ்ணத: ஸ்ராவ்யபேஷ ஸகலம் ச ஷுஷ்ருவான் |
சித்த வ்ருத்திமனு வ்ருத்திமான் குரோ: ஸாத்யவேத்ய கமனோன் முகோsபவத் ||9-2
வ்யாஸ ஆசிரமத்திற்கு வந்தபிறகு, வாசிஷ்ட கிருஷ்ணரான ஸ்ரீவேதவ்யாஸரின் உபதேசங்களை கேட்டு அறிந்தார். பின் தன் இருப்பிடத்திற்கு திரும்ப ஆயத்தமானார்.
வீரத்ருஷ்டி க்ருதஸிம்ஹ விப்ரம:
ஷாந்த த்ருஷ்டி க்ருத ஷாந்த ஸம்மத: |
தத்ரதத்ர பதி பத்ய விப்ரம:
பர்வதாதவ ததார ஸர்வ தீ: ||9-5
இமாலய மலைகளிலிருந்து பூர்ணப்ரக்ஞர் இறங்கி வரும் காட்சியானது, காட்டு விலங்குகளுக்கு ஒரு வீரமான சிங்கத்தைப் போலவும்; கனிவானவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியூட்டும் உருவத்தைக் கொண்டவராக தெரிந்தார்.
வானரேந்திர இவ தீர்ண வாரிதி:
வாஸுதேவ இவ ரத்ன ராஜவான் |
பீமஸேன இவ ஸூன வர்ய ஹ்ருத்
நிர்வ்ருத்திம் ஸ்வஜன மானினாய ஸ: ||9-6
திரும்பி வந்த ஆசார்யர், தமது சிஷ்யர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தார். கடலைத் தாண்டி வந்த ஹனுமனைப் போல; ஸ்யமந்தகமணி கொண்டு வந்த வாசுதேவனைப் போல; ஸௌகந்திகா புஷ்பத்தை கொண்டு வந்த பீமஸேனனைப் போல காட்சியளித்தார்.
ஸ்ரீமதாசார்யர், பிரம்மஸூத்ர பாஷ்யத்தை இயற்றும் அற்புத செயலை, அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment