ஸ்லோகம் #23: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 23]
ஸதிய ஸபெ4யலி ஸீரெ ஸெளெத3தி க2தியபடி3ஸித3 து3ருள த3னுஜர
ததிய ஸவருவ கோ4ரதீ3க்ஷெய ப3ந்த4னத3 தெரதி3 |
ஷ்ருதிததியு மாயாக்2யவாத3த3 சிதெயலிருதிரெ ஸுஜனஷரணரு
தி3திஸுதர நாஷனத3 கங்கணகட்டிரு க்ஷணதி3 ||23
ஸபெயலி - சபையில்; ஸதிய ஸீரெ ஸெளெது - மனைவியின் புடவையை இழுத்து; அதி கதியபடிஸித - மிகவும் அவமானப்படுத்திய; துருள தனுஜர ததிய - கெட்டவர்களான அசுரர்களின் கூட்டத்தை; ஸவருவ - அவர்களை அழிப்பேன் என்று செய்த; கோரதீக்ஷ்ணெய - சபதத்தைப் போல; மாயாக்யவாதத - தவறான மாயாவாத பாஷ்யங்களால்; ஸ்ருதிததிய - வேத உலகமானது; சிதெயலிருதிரெ - அழியும் நிலையில் இருப்பதால்; ஸுஜன ஷரணரு - சஜ்ஜனர்களால் வணங்கப்படும் ஸ்ரீமதாசார்யர்; திதிஸுதர நாஷனத - (அத்தகைய) அசுரர்களை அழிக்கப்போவதாக (கண்டனம் செய்வதாக); க்ஷணதி - உடனே; கங்கணகட்டிதரு - சபதம் செய்தார்.
ஸ்ரீமதாசார்யரின் மகிமைகளை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
முன்னர் சபையில் தனது மனைவியான திரௌபதியின் புடவையை இழுத்து, மிகவும் அவமானப்படுத்திய, கெட்டவர்களான அசுரர்களின் கூட்டத்தை அழிப்பேன் என்று சபதம் செய்ததைப் போல, தவறான மாயாவாத பாஷ்யங்களால் வேத உலகமானது அழியும் நிலையில் இருப்பதால், சஜ்ஜனர்களால் வணங்கப்படும் ஸ்ரீமதாசார்யர், அத்தகைய அசுரர்களை கண்டனம் செய்வதாக இப்போது சபதம் செய்தார்.
மத்வ விஜயத்தில், ஸ்ரீமதாசார்யரின் இந்த மகிமை 6-24 முதல் 6-31 ஸ்லோகங்கள் வரை விளக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு ஸ்லோகங்களையும் ஒன்றாக சேர்த்து படிக்க வேண்டும். இவை இரண்டு அர்த்தங்களை கொடுப்பதாக உள்ளன. ஒன்று. வேதங்களையும் இன்னொரு அர்த்தம் திரௌபதியையும் குறிக்கிறது.
பூஸுர ப்ரவர புத்தி ஸம்ருத்தி
வ்யக்த யுக்த வபுஷம் ருசிராங்கீம் |
ஸூத்ர தீப்த மணி மாலிகயாsலம்
பூஷிதாம் புவன பூஷண பூஷண பூதாம் ||6-24
வேதிஜாமிவ புர பரதாக்ர்ய:
ஸ ஸ்வயம் ஸ்ருதி ததிம் கலு த்ருஷ்டா |
புஷ்ட புத்திரகரோத் கருணாப்தி:
துஷ்ட பக்ஷ தமனஸ்திர ஸந்தாம் ||6-31
திரௌபதிதேவிக்கு துர்யோதனனின் சபையில் துச்சாததனால் ஏற்பட்ட அவமானத்திற்கு அவர்கள் அனைவரையும் தான் அழிப்பேன் என்று பீமசேனர் சபதம் செய்ததைப்போல, ஆசார்ய மத்வர், மிகவும் பவித்ரமான வேத உலகத்திற்கு, தவறான பாஷ்யங்களால் ஏற்படும் அநியாய, அபசாரங்களைக் கண்டு, அவற்றை இயற்றிய துஷ்ட பரம்பரையை தாம் கண்டனம் செய்யப்போவதாக சபதம் செய்தார்.
வேதசமூகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றவராக, பிரம்மசூத்ர பாஷ்யத்தை இயற்ற நிச்சயித்து, சூத்ரகாரரின் அனுமதியைப் பெறவேண்டி, பத்ரிக்குச் செல்ல தீர்மானித்தார். நீண்ட பயணத்தை மேற்கொள்பவர்கள், உறவினர்களுக்குப் பயன்படும்படி செல்வங்களை விட்டுச் செல்வதுபோல, ஆசார்யரும், என்றும் நாசமாகாத, உத்தமமான, இஷ்டார்த்தங்களை கொடுக்கக்கூடிய, ஸ்ரீபகவத்கீதா பாஷ்யத்தை இயற்றி அச்யுதப்ரேக்ஷருக்கும், உடனிருந்த மூத்த யதிகளுக்கும் கொடுத்தார். ’ஹரிகீதா பாஷ்யமேவ விரசய்ய ததாதாத்’ | (6-32). துஷ்ட சித்தாந்தங்களை நிராகரிக்க, பிரம்மசூத்ரத்திற்கு சரியான, வேதவியாசருக்கு பிடித்தமான, பாஷ்யத்தை இயற்றத் தீர்மானித்தார்.
ஸ்ரீமதாசார்யரின் பதரிகாசிரம பயணத்தை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
****
No comments:
Post a Comment