Wednesday, March 9, 2022

ஸ்லோகம் #15: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #15: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[ஸ்லோகம் 15]

கு3ருவரேண்யர கரஸரோஜதி3 பரம ஹம்ஸாஸ்ரமவ பொந்து3

கரெத3ராத1கெ34ரெஸுரரு வரநியகமக3ள ததிய |

ஹருஷத3லி வர பூர்ணபோ3தா4பி43தி3 கு3ணக3ளனரிது ஜீவர

வரவர பரிமித மாத்ர ப்ரணவ ஜபாதி4காரிக3ளு ||15 

குருவரேண்யர - தனது குருகளின்; கரஸரோஜதி - திருக்கரங்களால்; பரம ஹம்ஸாஸ்ரமவ - யதி ஆசிரமத்தை; பொந்துத - பெற்று; ஹருஷதலி - மகிழ்ச்சியுடன்; கரெதராதகெ - அவரை அழைத்து; வரநியமகள ததிய - சிறந்த வேதராசிகளில் சொல்லப்பட்டிருக்கும் விதிகளின்படி; தரெஸுரரு - விஷ்ணுவின் தேவதைகள்; வர - வணங்குபவருக்கு; ஜீவரவரவர - (காலம் காலமாக) ஜீவர்கள் அவரவர்களின்; பரிமித மாத்ர - தகுதிக்கேற்ப மட்டுமே சொல்லும்; ப்ரணவ - பிரணவ மந்திரத்தை; பூர்ணபோதாபிததி - பூர்ணபோத என்று பெயர் சூட்டி; ஜபாதிகாரிகளு - பிரணவ மந்திரத்திற்கு ஜபாதிகாரிகள் ஆனவருக்கு உபதேசித்தார். 

வாசுதேவன் சன்யாச ஆசிரமத்தை ஏற்கும் படலத்தை விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

தனது குருகளின் திருக்கரங்களால், யதி ஆசிரமத்தைப் பெறுகிறார் வாசுதேவன். குருவானவர், விஷ்ணுவின் தேவதைகளே வணங்குபவரான அவரை மகிழ்ச்சியுடன் அழைத்து, சிறந்த வேதராசிகளில் சொல்லப்பட்டிருக்கும் விதிகளின்படி, காலம்காலமாக ஜீவர்கள் அவரவர்களின் தகுதிக்கேற்ப மட்டுமே சொல்லும் பிரணவ மந்திரத்தை, பூர்ணபோத என்னும் பெயரைச் சூட்டி, பிரணவ மந்திரத்திற்கு ஜபாதிகாரிகள் ஆனவருக்கு உபதேசித்தார். 

வாசுதேவன் பூர்ணப்ரக்ஞர் ஆன சுபமுஹூர்த்தத்தை மத்வ விஜயம் 4-33ம் ஸ்லோகத்தில் பார்க்கலாம். 

குணானு ரூபோன்னதி பூர்ணபோத இத்யமுஷ்ய நாம த்விஜவ்ருந்த வந்தித: |

உதாஹரத்பூரி யஷாஹி கேவலம் ந மன்னவர்ண: ஸ ச மன்ன வர்ணக: ||4-33 

வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் விதிகளை அனுசரித்து, பொருத்தமான பெயரான, பூர்ணபோத (பூர்ணப்ரக்ஞ) என்னும் பெயரை, அச்யுதப்ரேக்‌ஷர் வைத்தார். 

நிரங்கராகம் முகராக வர்ஜிதம் விபூஷணம் விஷ்டப பூஷணாயிதம் |

அமும் த்ருதாஷாடமவேக்‌ஷ்ய மேனிரே ஸ்வபாவ ஷோபானுபமேபி ஜந்தவ: || (4-34) 

அனைத்து தேவதைகளாலும் வணங்கப்படும் பூர்ணப்ரக்ஞர், தமது குருகளை சாஷ்டாங்கமாக வணங்கினார். சரியான நியமத்தை பின்பற்றுவது பற்றி உலகத்திற்கு எடுத்துக் காட்டினார். 

வாசுதேவன் சன்யாச ஆசிரமத்தை ஏற்கும் படலத்தை தொடர்ந்து அடுத்த ஸ்லோகத்திலும் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

No comments:

Post a Comment