ஸ்லோகம் #22: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 22]
ஒந்து3 தி3ன ஸத3ஸினபா1லா எந்தி3ருவ பத3த3ர்த்த2வனு ப3லு
ஸுந்த3ராங்கி3யளெந்து3 நுடி3த3ரு நம்பி3கெயு ப3ரலு |
முந்தெ3 ப3ரலிஹ விப்ரவரனனு ஸந்தி4ஸுத கேளிரித3ரர்த்த2வ
நெந்து3 ஸர்வக்3ஞதெய ஜனரொளு ப்ரகடபடி3ஸித3ரு ||22
ஒந்து தின - ஒரு நாள்; ஸதஸின - சபையினர் கேட்ட; அபாலா எந்திருவ பததர்த்தவனு - அபாலா என்னும் சொல்லின் அர்த்தத்தை; பலு ஸுந்தராங்கி - இள வயதுப் பெண்; எந்து நுடிதரு - என்று கூறினார். நம்பிகெயு பரலு - மேலும் நம்பிக்கை இல்லையெனில்; முந்தெ பரலிஹ - இன்னும் சிறிது நேரத்தில் வரவிருக்கும்; விப்ரவரனனு - ஒரு பிராமணனை; ஸந்திஸுத கேளிரிதரர்த்தவ - சந்தித்து அவரிடம் இதன் அர்த்தத்தை கேளுங்கள்; எந்து - என்று; ஸர்வக்ஞதெய - தன் சர்வக்ஞத்வத்தை; ஜனரொளு - மக்களிடம்; ப்ரகடபடிஸிதரு - வெளிப்படுத்தினார்.
ஸ்ரீமதாசார்யரின் மகிமைகளை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
ஒரு நாள், சபையினர் கேட்ட அபாலா என்னும் சொல்லின் அர்த்தத்தை, இள வயதுப் பெண் என்று கூறினார் ஸ்ரீமதாசார்யர். என் மேல் நம்பிக்கை இல்லையெனில், இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வரவிருக்கும் ஒரு பிராமணனிடம், இதன் அர்த்தத்தை கேளுங்கள் என்று, தன் சர்வக்ஞத்வத்தை மக்களிடம் வெளிப்படுத்தினார்.
மத்வ விஜயத்தில் - அபாலா சொல்லின் பொருளை விளக்கும் சந்தர்ப்பம் - 6-18 முதல் 6-21 வரையிலான ஸ்லோகங்களில் உள்ளது.
ஷ்வித்ரிணீ பவதி தத் பத வாச்யே
த்யாக்ரஹேண வததோsவிதுஷோத்ர |
கஷ்சிதேஷ்யதி விபஷ்சிதிஹைனம்
ப்ருச்சதேத்யய மகச்சததோத்தவா || 6-18
யத் யதேவ ஸபதி ப்ரக்ருதம் ஸ்யாத்
தத் ததேஷ யதவேதகிலம் ச |
ஸர்வதா ஸதஸி ஸர்வ புதானாம்
ஸர்வவித் யதிரிதி ப்ரதிதோsபூத் || 6-21
இன்னொரு சபையில் வேறொரு சூக்தார்த்தத்தை விளக்கும் சந்தர்ப்பத்தில் ஆசார்யர், ‘அபாலா’ என்னும் சொல்லிற்கு ‘இள வயதுப்பெண்’ என்று பொருள் கூறினார். ஆனால் அங்கிருந்த பண்டிதர்கள், அபாலா என்றால் குஷ்டரோகி என்று சொல்ல, ஆசார்யர் - இங்கு இப்போது ஒரு புருஷர் வருவார். அவரிடம் இதற்கான விளக்கத்தைக் கேளுங்கள் - என்றார். அதே போல் அப்போது அங்கு வந்தவரிடம் கேட்க - அவரும் அதையே (இள வயதுப்பெண்) சரியான பதிலாகக் கூறினார். ’சர்வவித் யதிரிதி ப்ரதிதோபூத்’ (6-21) - ஸ்ரீமதாசார்யர் சர்வக்ஞர், வேதங்களை அறிந்தவர், முக்காலும் உணர்ந்தவர்’ என்று அந்த தேசத்து பண்டிதர்கள் அனைவரும் ஆசார்யரை கொண்டாடினர். ஆசார்யரின் கீர்த்தி முழு நிலவைப் போல் பிரகாசித்தது. உலகத்தின் ஒரே ஒரு சர்வக்ஞாசாரியர் என்று பெயர் பெற்றார்.
ஸ்ரீமதாசார்யரின் மகிமைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment