ஸ்லோகம் #36: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 36]
குமததொ3ளு மதிலீனரச்யுத ப்ரமதிக3ள மதிரோக3 தொலகி3ஸி
விமலமதியனு கருணிஸலு ப3லு ஷாஷ்வதவதா3ய்து
|
அமிதஸுந்த3ரமூர்த்தி கோ3குல ரமணனனு ஸ்தா2பிஸுவ யக்3ஞவ
க்ரமதி3 நடெ3ஸலனுக்3ஞ்யெயித்த1ரு ||36
குமததொளு - மாயாவாத மத தத்வங்களில்; மதிலீன - மனம் மயங்கியிருந்த; அச்யுத ப்ரமதிகள - அச்யுதப்ரேக்ஷரின்; மதிரோக - அஞ்ஞானங்களை; தொலகிஸி - போக்கி (நீக்கி); விமலமதியனு - தெளிவான அறிவை; கருணிஸலு - அருளினார்; பலு ஷாஷ்வதவதாய்து - அந்த ஞானம் அவரில் நிரந்தரமாக தங்கியது. அமிதஸுந்தரமூர்த்தி - மிகவும் அழகான மூர்த்தியான; கோகுல ரமணனு - ஸ்ரீகிருஷ்ணனை; ஸ்தாபிஸுவ - நிறுவும்; யக்ஞவ - வேள்வியை; க்ரமதி - முறையே; நடெஸலனுக்யெயித்தரு - செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.
ஸ்ரீமதாசார்யரின் மகிமைகளை தொடர்ந்து இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
மாயாவாத மத தத்வங்களில் மனம் மயங்கியிருந்த அச்யுத ப்ரேக்ஷரின் அஞ்ஞானங்களை நீக்கி, தெளிவான அறிவை அருளினார் ஸ்ரீமதாசார்யர். அந்த ஞானம் அவரில் நிரந்தரமாக தங்கியது. மிகவும் அழகான மூர்த்தியான ஸ்ரீகிருஷ்ணனை நிறுவும் வேள்வியை முறையே செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.
ஸ்ரீமத்வர், அச்யுதப்ரேக்ஷரின் அஞ்ஞானங்களைப் போக்கிய விஷயம், மத்வ விஜயம் ஸ்லோகம் 9-31லிருந்து சொல்லப்பட்டுள்ளது.
தனது பயணத்தில் மத்வர் மக்களுக்கு தத்வோபதேசம் செய்தவாறு, ரஜதபீடபுரத்திற்கு வந்தார். மூத்த யதிகள் மற்றும் அச்யுதப்ரேக்ஷர் ஆசார்யரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். அனந்தேஸ்வரரை மற்றும் குருகளை ஆசார்யர் நமஸ்கரித்தார். ஆசார்யர் முன்னரே அனுப்பியிருந்த பிரம்மசூத்ர பாஷ்யத்தை குருகள் பார்த்திருந்தார். தமது கிரந்தத்தின் மூலம் குருகளின் மனதில் இருந்த அனைத்து அஞ்ஞானத்தையும் போக்கியிருந்தார் ஆசார்யர்.
நிஷ்களங்கம்வ சந்த்ரமண்டலம் புண்டரீகமிவ புல்லதாம் கதம் |
வாரி ஷாரதமிவ ப்ரஸாதவத் சித்தமுச்யுத மதேர்ப்ருஷம் பபௌ ||9-36
ஆசார்யரின் பாஷ்யத்தைப் படித்த அச்யுதப்ரேக்ஷரின் மனம், எவ்வித களங்கமும் அற்ற சந்திரனைப் போல, அன்றலர்ந்த தாமரை மலரைப் போல, தெளிவான தண்ணீரைப் போல சுத்தமாக ஆனது.
ஆனனந்த ச ஹி மத்வ சாஸ்திரமாகர்ணயன் குஸமயாக்ரஹீ புரா |
மோஹ பீத லவணோதகோ முஹு: ப்ராக் பிபாஸுரம்ருதம் பிபன்னிவ || 9-37
சித்தாந்தத்தின் மகிமையை அறிவது - உப்பு நீரைக் குடித்தபிறகு சுத்தமான நீரைக் குடித்து வாய் கொப்பளிப்பதைப் போல இருந்தது. மத்வ சாஸ்திரத்தின் சிறப்பினைக் கண்ட அச்யுதப்ரேக்ஷர் மற்றும் மூத்த யதிகள், இதனை மக்களிடம் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.
உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணனின் பிரதிஷ்டை
நன்வனன்ய ஷரணாத்மனாம் ஸதாம் ஸித்தி விக்ன முக தோஷ பேஷஜம் |
ஐச்சதச்சல தயோதயாதயம் ரூபபீட புரக: கதாசன || 9-40
முக்காலும் உணர்ந்தவரான ஸ்ரீமதாசார்யர், பக்தர்களுக்கு அருள்வதற்காக ரஜதபீடபுரத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று நினைத்து, மேற்கு கடற்கரைக்குச் சென்றார். அங்கு குளித்து, ஜப தபங்களை முடித்தார். படகிலிருந்து கிடைத்த கோபிசந்தனக் கட்டியை உடைத்து அதிலிருந்த முத்து கிருஷ்ணனை, மத்வ சரோவரத்தில் அபிஷேகம் செய்து, அதில் ஸ்ரீகிருஷ்ணனின் விசேஷ சன்னிதானத்தை உண்டுபண்ணி, அங்கு பிரதிஷ்டை செய்தார்.
’வந்தே வந்த்யம்’ என்று ஸ்ரீஹரியை போற்றியவாறு ஸ்ரீமதாசார்யர் கடற்கரைக்குச் சென்றார். துவாரகையிலிருந்து இவருக்காகவே வந்த கிருஷ்ணனைக் கண்டு ‘தேவகி நந்தன’ என்றவாறு பாடி, ‘த்வாதச ஸ்தோத்திரம்’ என்னும் ஸ்தோத்திரத்தை இயற்றினார். ’சித்திவிக்ன முக தோஷ பேஷஜம் |’ (9-40) சஜ்ஜனர்களை கடைத்தேற்றவும், மோட்சத்தின் பாதைக்கான தடைகளை போக்குவதற்காகவும், அழகான கடெகோலு கிருஷ்ணனை விதிபூர்வகமாக பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீமதாசார்யரின் இரண்டாவது பதரி யாத்திரையின்போது அவர் செய்த அற்புதங்களை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
இத்துடன் மத்வ விஜயம் ஒன்பதாவது சர்க்க விஷயங்கள் முடிவடைந்தன. அடுத்த ஸ்லோகத்திலிருந்து பத்தாம் சர்க்க ஸாரம் விளக்கப்பட்டுள்ளது.
***
No comments:
Post a Comment