ஸ்லோகம் #20: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 20]
மங்க3ளாங்க3ன
சரணகெரகு3த அங்கு3டத3 ஜாட2ர ப்ரபா4வதி3
துங்க3கத3லீனிகரகள பு4ஞ்சிஸுத பி4க்ஷெயலி
|
அங்க3ஸரஸிஜநாப4ஸ்ரீ
ரங்க3ரமணன நமிஸி பூ4ஸுர
ஸங்க3தி3ந்தா3த3ரவ படெ3யுத மெரெத3 ஸபெ4க3ளலி ||20
மங்களாங்கன - விஷ்ணுமங்களத்தின் தலைவனான விஷ்ணுவை; சரணகெரகுத - வணங்கியவாறு; அங்குடத - கட்டைவிரல் அளவிலான; ஜாடர - ஜடராக்னியின்; ப்ரபாவதி - உதவியினால்; பிக்ஷெயலி - பக்தர் அளித்த பிக்ஷையில்; துங்ககதலீ நிகரகள - மலை வாழைப்பழக் குலையை; புஞ்சிஸுத - உண்டார்; ஸரஸிஜநாப; அனந்தபத்மனாபனை; அங்க - பயணத்தில் தொடர்ச்சியாக; ஸ்ரீரங்கரமணன - ஸ்ரீரங்கநாதனை; நமிஸி - வணங்கி; பூஸுர - பிராமணர்களின்; ஸங்கதிந்த - சங்கத்தினால் (சந்திப்பினால்); ஆதரவ படெயுத - (அவர்களிடமிருந்து) மரியாதைகளை பெற்றவாறு; ஸபெகளலி - சபைகளில்; மெரெத - சஞ்சரித்தார்.
விஷ்ணுமங்களத்தில் ஸ்ரீமதானந்த தீர்த்தர் நடத்திக்காட்டிய மகிமைகளை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
விஷ்ணுமங்களத்தின் தலைவனான விஷ்ணுவை வணங்கியவாறு, பக்தர் அளித்த பிக்ஷையில், கட்டைவிரல் அளவிலான ஜடராக்னியின் உதவியினால், மலை வாழைப்பழக் குலையை ஸ்ரீமதானந்த தீர்த்தர் உண்டார். பிறகு, தனது பயணத்தில் தொடர்ச்சியாக, அனந்தபத்மனாபனை, ஸ்ரீரங்கநாதனை வணங்கி, பிராமணர்களின் சங்கத்தினால், அவர்களிடமிருந்து மரியாதைகளை பெற்றவாறு, சபைகளில் சஞ்சரித்தார்.
விஷ்ணுமங்களத்தில் பக்தர் அளித்த பிக்ஷை சம்பவம், மத்வ விஜயத்தில் 5-31 ஸ்லோகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
பிக்ஷா ப்ரதாத்ராsத்ர பரீக்ஷிதும் முஹ:
தத்தே ப்ரபுக்தே
கதளீ பலோச்சயே |
அனேன
நிர்யத்னமவார்ய விஸ்மய:
தமார்யவர்யம் விஜனேsவதத் குரு: || 5-31
ஒரு கிருகஸ்தர் ஸ்ரீமதாசார்யரை சோதிப்பதற்காக, உணவிற்குப் பிறகு ஒரு குலை வாழைப்பழத்தை வைத்து, அதனை உண்ணச் சொன்னார். 200க்கும் அதிகமான பழங்களை, அனாயாசமாக தின்றும், வயிறு மெலிந்து இருந்ததைக் கண்ட அச்யுதப்ரேக்ஷர் வியப்புடன் இதன் பின்னணி என்னவென்று கேட்க, ஸ்ரீமதாசார்யர், ‘அங்குஷ்ட மாத்ரம் ஜடரப்ரதிஷ்டிதம் ஜாஜ்வல்யமானம் மம ஜாத வேதசம் |’ (5-33) கட்டைவிரல் அளவிற்கான ஒரு நெருப்பு என் வயிற்றில் இருக்கிறது. இது உலகத்தையே சுட வல்லது என்று தம் ஸ்வரூபத்தை குருவிற்கு ரகசியமாக தெரிவித்தார். (ஆசார்யரின் முந்தைய அவதாரமான பீமாவதாரத்திலும் ஒரு வண்டி உணவினைத் தின்றார் என்று மகாபாரதம் சொல்கிறது).
தத: க்ரமேண
ப்ரசலன்னுபேயிவான்
அவந்ததேந்தீவர
ஸுந்தரச்சவிம் |
அம்போஜனாபம் ஸ
புஜங்க ஷாயினம்
ஸ்ரீவல்லபம் ஸ்ரீமதனந்த ஸத்புரே || 5-36
பிறகு ஸ்ரீமதாசார்யர், திருவனந்தபுரத்தில் இருந்த பல தீர்த்தங்களில் குளித்து, கன்யாகுமரிக்குச் சென்று, அங்கும் குளித்து பின் தனுஷ்கோடிக்குச் சென்றார்.
ஷ்ருங்கார
ஸிந்தும் ஸ புஜங்க ஷாயினம்
ஸ்ரீரங்கவாஸம்
க்ருதமங்கலம் ஸதாம் |
அமந்த தீர்தேவம
வந்ததாssகத:
கவேர கன்யாஹிம வாயு ஸேவிதம் ||5-47
பிறகு ஸ்ரீரங்கத்திற்கு வந்த ஸ்ரீமதாசார்யர், அங்கு பவித்ரமான காவேரி நதிக்கரையில் வீற்றிருக்கும், மங்களங்களை அருள்பவனான ரங்கனாதனை வணங்கினார்.
மத்வ விஜயத்தின் ஐந்தாம் சர்க்கம் இத்துடன் முடிந்தது. அடுத்த ஸ்லோகத்திலிருந்து ஆறாம் சர்க்கத்தின் விஷயங்களை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment