Sunday, March 13, 2022

ஸ்லோகம் #19: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #19: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[ஸ்லோகம் 19]

அகு3ணனீஷ்வர ஈஷஜீவரு விக3தபே43ரு ஜக3தி3ந்தெனிது1

பொக3ளுதிஹ மாயிக3ள பா4ஷ்யத3 தோ3ஷக3ள தோரி |

ஸுக3ம ஸூத்ரார்த்த23ள விவரிஸி ஸ்வகு3ருஸஹிததி3 ஹொரடு த3க்‌ஷிண

தி33னு ஸஞ்சரிஸுத ப3ந்த3ரு விஷ்ணுமங்க3ளகெ ||19 

அகுணனீஷ்வர - ஈஷ்வரன் நிர்குணன்; ஈஷஜீவரு - ஈஷ ஜீவர்கள்; விகதபேதரு - பேதம் இல்லாதவர்கள்; ஜகதிந்தெனிது - உலகம் பொய் என்று; பொகளுதிஹ - (என்று) தவறாக வாதிட்ட; மாயிகள - மாயாவாதிகளின்; பாஷ்யத தோஷகள - பாஷ்யத்தில் உள்ள தோஷங்களை; தோரி - எடுத்துக் காட்டி; ஸுகம - சரியான (தெளிவான) ; ஸூத்ரார்த்தகள - ஸூத்திர அர்த்தங்களை; விவரிஸி - விவரித்து; ஸ்வகுருஸஹிததி - தன்னுடைய குருவுடன்; தக்‌ஷிண திகனு - தெற்கு திசை நோக்கி; ஹொரடு - புறப்பட்டு; ஸஞ்சரிஸுத - சஞ்சாரம் செய்தவாறு; விஷ்ணுமங்களக்கெ - விஷ்ணுமங்களத்திற்கு; பந்தரு - வந்தார்; 

ஸ்ரீமதானந்ததீர்த்தரின் வாதத் திறமைகளை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

ஈஷ்வரன் நிர்குணன், ஈஷ ஜீவர்கள் பேதம் இல்லாதவர்கள், உலகம் பொய் என்று தவறாக வாதிட்ட மாயாவாதிகளின் பாஷ்யத்தில் உள்ள தோஷங்களை எடுத்துக்காட்டி, அதன் தெளிவான ஸூத்திர அர்த்தங்களை விவரித்து, தன்னுடைய குருவுடன், தெற்கு திசை நோக்கி புறப்பட்டு சஞ்சாரம் செய்தவாறு, விஷ்ணுமங்களத்திற்கு வந்தார் ஸ்ரீமதானந்த தீர்த்தர். 

ஸ்ரீமதாசார்யரினால் பிரம்மசூத்ர பாஷ்யத்தின் உபதேசம் - மத்வ விஜயத்தில் 5-17 ஸ்லோகத்திலிருந்து துவங்குகிறது. 

வ்யாக்யான் கதா சின்மணிமத் வினிர்மிதம்

பாஷ்யம் ஜனைஸ்தர்க்க விஷாரதைர்வ்ருத: |

உவாச வசம் பரிஹாஸ ஹாஸவான்

ஸம்மோத தீர்த்த: ஸுரமோத தானினீம் || 5-17 

வியாசரினால் இயற்றப்பட்ட பிரம்மசூத்ரத்தின் பொருளுக்கும், சங்கராசாரியர் இயற்றிய பிரம்மசூத்ர பாஷ்யம் சொல்லும் விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லாததைக் கண்ட ஸ்ரீமதாசாரியர், அதனை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தார். மான்யோன் வயோன்யோன்யமஹோ ந த்ருஷ்யதே’ (5-18) - அந்த பாஷ்யத்தின் குறைகளை சஜ்ஜனர்களுக்கு நிரூபித்துக் காட்டினார். 

ஸ்ரீவியாசரினால் இயற்றப்பட்ட பிரம்மசூத்ரத்தில், விஷ்ணு சர்வோத்தமத்வம், தோஷங்கள் இன்மை, உலகம் உண்மை, ஜீவ-ஈச பேதம் ஆகியவை விளக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சங்கராசார்யரின் பாஷ்யத்தில், பிரம்மன் நிர்குணன், அருவம், ஜீவ-ஈசரில் வேறுபாடு இன்மை, உலகம் பொய் ஆகியவற்றை உரைத்துள்ளார். இவை வேதங்களுக்கும், வேதவியாசருக்கும் சம்மதம் இல்லாதவை என்று சொல்லி, அதிலிருந்த குறைகளை எடுத்துக் காட்டினார். இந்தக் குறைகளுக்கு அங்கிருந்த பண்டிதர்களால் பதிலளிக்க முடியவில்லை. 

ஆகையால், சூத்ரத்திற்கு எதிரான விஷயங்களை தமது பாஷ்யத்தில் எழுதினால் அதை எப்படி ஆதாரமாகக் கொள்ளமுடியும் என்று, அதிலிருந்த குறைகளை ஸ்ரீமதாசார்யர் எடுத்துச் சொன்னபோது, அச்யுதப்ரேக்‌ஷர் மற்றும் அங்கிருந்த பண்டிதர்கள் அனைவரும் வியாசரின் சூத்திரங்களுக்கு உண்மையான பொருளைத் தரக்கூடிய பாஷ்யத்தை இயற்றுமாறு ஸ்ரீமதாசார்யரை வேண்டினர். அப்போதே ஸ்ரீமதாசார்யர், வேத புராணங்களின் அடிப்படையில், வியாசருக்கு சம்மதமான, ஸ்ரீஹரியின் சர்வோத்தமத்வம், தோஷங்கள் இன்மை, உலகம் உண்மை, ஜீவ-ஈச பேதம் ஆகிய விஷயங்களை சரளமாக விளக்கினார். இதுவே பின்னர் அவர் இயற்றப்போகும் சூத்ர பாஷ்யத்திற்கு முன்னுரையாயிற்று. 

ஜ்யேஷ்யன் கதாசித் கிலகால பாலிதாம்

திஷம் ப்ரயாதோsச்யுத புத்தினா ஸஹ |

ஸமக்ர தீர்மண்டித விஷ்ணு மங்களம்

விஷ்ணும் ஜகன்மங்கள மானனாம ஸ: || 5-30 

பிறகு மத்வாசார்யர், அச்யுதப்ரேக்‌ஷருடன் தெற்கு திசையில் பயணப்பட்டு விஷ்ணுமங்களத்திற்கு தலைவனான விஷ்ணுவை பக்தியுடன் வணங்கினார். 

விஷ்ணுமங்களத்தில் ஸ்ரீமதானந்த தீர்த்தர் நடத்திக்காட்டிய மகிமைகளை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment