Thursday, March 31, 2022

ஸ்லோகம் #37: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #37: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 37]

ஒந்து3 தி3 மார்க்க33லி 3ருதிரெ நிந்த்3 நரபதி நெலவனகி3யலு

நந்தி3தீர்த்தரிகி3த்தனாக்3ஞெய ஒந்த3னரியதெ3லெ |

ஹிந்தி3னனுப4வஷூன்யரிகெ3 ஹேகெ3ந்து3 தோரலு பூ4மியகி3யுதெ

நிந்த3னான்ருப விவஷனாத3னு முந்தெ3 ஸாகி33ரு ||37 

ஒந்து தின மார்க்கதலி - ஒரு நாள் ஸ்ரீமதாசார்யர் பயணத்தில்; பருதிரெ - இருந்தபோது; நிந்த்ய நரபதி - இழிவான அரசன் (ஈஸ்வரதேவ); ஒந்தனரியதெலெ - (அவர் யார்) என்று எதுவும் அறியாமலேயே;  நெலவனகியலு - (கிணறுக்காக) பூமியை தோண்டுமாறு; நந்திதீர்த்தரிகெ - ஆனந்ததீர்த்தருக்கு; ஆக்ஞெய - ஆணையை; இத்தனு - இட்டான்; ஹிந்தினனுபவ ஷூன்யரிகெ - இதுவரை இப்படிப்பட்ட வேலையை அறியாதவர்களுக்கு; ஹேகெந்து தோரலு - எப்படி என்று செய்து காட்டு என்று சொல்ல; பூமியகியுதே - பூமியை தோண்டியவாறே; நிந்தனான்ருப - அந்த அரசன் நின்றான்; விவஷனாதனு - மயங்கினான்; முந்தே ஸாகிதரு - ஸ்ரீமதாசார்யர் முன்னே நடந்தார். 

ஸ்ரீமதாசார்யரின் இரண்டாவது பதரி யாத்திரையின்போது அவர் செய்த அற்புதங்களை இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்  ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

ஒரு நாள் ஸ்ரீமதாசார்யர், தனது பயணத்தில் இருந்தபோது, இழிவான அரசன் (ஈஸ்வரதேவ), ஆசார்யர் யார் என்று தெரியாமலேயே, கிணறுக்காக பூமியை தோண்டுமாறு ஆனந்ததீர்த்தருக்கு ஆணையிட்டான். இதுவரை இப்படிப்பட்ட வேலையை செய்யாதவர்கள் ஆகையால், எப்படி செய்வது என்று நீ செய்து காட்டு என்று சொல்ல, அந்த அரசனும் பூமியை தோண்டியவாறே மயங்கி நின்றான். ஸ்ரீமதாசார்யர் முன்னே நடந்தார். 

மத்வ விஜய பத்தாம் சர்க்க விஷயங்கள் துவங்குகின்றன. 

க்வசிதீஷ்வர தேவமேஷ பூபம் கனனம் பாந்த ஜனம் விதாபயந்தம் |

ஸ்வமபி ப்ரதி சோதயந்தமூசே க்ரியயா நோsகுஷலான் ப்ரபோதயேதி ||10-4 

ஈஸ்வரதேவ என்னும் அரசன், தனது நாட்டிற்கு வரும் பயணிகளை, ஏரி/கிணறுக்காக மண்ணை வெட்டி உதவுமாறு கேட்பான். அந்த அரசின் வழியே பத்ரிக்குச் செல்லவிருந்த மத்வரைப் பார்த்து அந்த அரசன்நீங்கள் இந்த குழி தோண்டும் வேலையை செய்துவிட்டு, முன்னர் செல்லுங்கள்என்றான். அதற்கு மத்வர்நமக்கு இந்த வேலை தெரியாது. ஒருமுறை நீ அதை செய்துகாட்டுஎன்றார். 

ப்ரகாரம் ப்ரகடீகர்தும ஆரப்ய விரராம நோ |

மஹீயோ மதி மாஹாத்ம்யாத் வைவஷ்யேன கனனம் கல: ||10-5 

சரி என்று வேலையைத் தொடங்கிய ஈஸ்வரதேவ, அதையே தொடர்ச்சியாக செய்துகொண்டே இருந்தான். ஆசார்யரும் அவனை அப்படியே விட்டு, முன்னர் பயணத்தைத் தொடர்ந்தார். 

நானெனேனா நேனானேனோ நூனேன நனு நுன்னா: |

நானானா நோ நூனம் நானேனானூனனாsனுன்ன: ||10-6 

அனைத்து ஜீவராசிகளையும் நடத்தும் வாயுதேவரின் மூன்றாவது அவதாரமான மத்வாசார்யர், ஈஸ்வரதேவனை குழி தோண்டும் வேலையில் ஈடுபடுத்தியதில் வியப்பொன்றும் இல்லை. பிராணனையும், மனதையும் அவரே கட்டுப்படுத்துகிறார் அல்லவா? 

ஸ்ரீமத் ஸுமத்வ விஜய ப்ரமேய மாலிகா என்னும் தனது கிருதியில் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், மத்வ விஜயத்தின் பத்தாம் சர்க்கத்தின் சுருக்கத்தையும், இந்த சர்க்கத்தை படிப்பதால் வரும் பயனையும் இவ்வாறு சொல்கிறார். 

யதா2 ஹரே: கதா2லாப: ஸுகா2 க்ருதினாம் ததா2 |

ஸ்வஸ்யாபீதி விசித்ராணி சாரித்ராணி சகார : ||11|| 

ஸ்ரீஹரியின் அற்புத சரித்திரங்களை பக்தியுடன் கேட்கும் சஜ்ஜனர்களுக்கு சுகமயமான மோட்சம் எப்படி கிடைக்கிறதோ, அதைப்போலவே, தம்முடைய அமானுஷ சரித்திரங்கள் மோட்சத்திற்குக் காரணம் ஆகின்றன என்பதைக் காட்டுவதற்காக, ஒரு அரசனையே பூமியைத் தோண்டுவதற்கு செய்த செயல்; அவனின் மொழியிலேயே அவனிடம் பேசியது; புலி ரூபத்தினால் வந்த தைத்யனைக் கொன்றது; உணவிற்குப் பிறகு ஆயிரக்கணக்கில் வாழைப்பழம் தின்று, 30 குடம் பால் குடித்தது; உலர்ந்த மரத்தினை காய்க்க வைத்தது; என அற்புத மகிமைகளை செய்து காட்டினார். 

அபேக்ஷிதாகி2லாவாப்திர் மோக் சாஸ்த்ர ஸுலோலதா |

விக்4னனாஷ: ஸாத4னானாம் ஸ்வீயமாஹாத்ம்ய போ34னம் ||20|| 

பத்தாம் சர்க்கம் : விரும்பியவை நிறைவேறுதல்

ஸ்ரீமதாசார்யரின் பயணத்தில் அவர் நடத்திக் காட்டிய மகிமைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.

***


No comments:

Post a Comment