Friday, April 1, 2022

ஸ்லோகம் #38: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #38: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 38]

தி3விஜெ 3ங்கெ3 தா3டி1 ஷிஷ்யர நிவஹதிந்3தொ33கூ3டி3 3ருதிர

லிவர கொல்லலு ந்ருபன தூ3தர 3ந்த3ரெது3ரனலி |

விவித3 யுகுதிக3ளிந்த3 தடெ3யுத ஸவினுடி3 கா3ம்பீ4ர்யதி3ந்த3லி

யவன நரபதியிந்த3 பொந்தி33ரர்த்த4ராஜ்யவனு ||38 

திவிஜெ - தேவலோகத்திலிருந்து பிறந்தவளான; கங்கெய தாடி - கங்கையை தாண்டி; ஷிஷ்யர நிவஹதிந்தொடகூடி - சிஷ்யர்களின் குழுவினருடன் சேர்ந்து; பருதிரலிவர - வந்து கொண்டிருக்கும் இவரை; கொல்லலு - கொல்வதற்கு; ந்ருபன தூதர - அரசனின் தூதர்கள்; பந்தரெதுரனலி - எதிரில் வந்தார்கள்; விவித - பற்பல; யுகுதிகளிந்த - தந்திரங்களால் (வகைகளில்); தடெயுத - அவர்களை தடுத்து; ஸவினுடிய - இனிமையான பேச்சுக்களால்; காம்பீர்யதிந்தலி - மிகவும் கம்பீரத்துடன்; யவன - வேறொரு (இஸ்லாமிய); நரபதியிந்த - அரசனிடமிருந்து; அர்த்த ராஜ்யவனு - பாதி ராஜ்ஜியத்தை; பொந்திதரு - பெற்றார். 

ஸ்ரீமதாசார்யரின் பயணத்தில் அவர் நடத்திக் காட்டிய மகிமைகளை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

தேவலோகத்திலிருந்து பிறந்தவளான கங்கையைத் தாண்டி, தனது சிஷ்யர்களின் குழுவினருடன் சேர்ந்து வந்து கொண்டிருக்கும் இவரைக் கொல்வதற்கு, அரசனின் தூதர்கள் எதிரில் வந்தார்கள். பற்பல தந்திரங்களால் அவர்களைத் தடுத்து, தனது இனிமையான பேச்சுக்களால் மிகவும் கம்பீரத்துடன், அந்த இஸ்லாமிய அரசனிடமிருந்து பாதி ராஜ்ஜியத்தைப் பெற்றார். 

மத்வ விஜயம் பத்தாம் சர்க்க விஷயங்கள் தொடர்கின்றன. 

வடக்கு நோக்கி தன் சிஷ்யர்களுடன் பயணத்தை முன்னெடுத்த ஆசார்யர், படகுகளே இல்லாத கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தார். சிஷ்யர்களை தமக்குப் பின்னால் வரிசையாக கைபிடித்துக் கொள்ளுமாறு சொல்லி, யாருடைய உதவியும் இன்றி கங்கையை அனாயாசமாகக் கடந்தார். அந்தபக்கம் இருந்த இஸ்லாமிய அரசனின் சேவகர்கள் : 

வாரயத வாரயத வைரி சுஹ்ருதோமூன் மாரயத மாரயத பாரகமனாத் ப்ராக் |

ஆபதத ஆலபத இத்யவததுச்சை: த்வரக ராஜ புருஷானுசித வாசா ||10-10 - 

யாரோ எதிரி அணியினர் நம்மிடத்திற்கு வந்துவிட்டனர். வேகமாக வாருங்கள். அவர்களைக் கொல்லுங்கள்’ - என்று கூவத் தொடங்கினான். அந்த சேவகனைப் பார்த்து, ஸ்ரீமத்வர் - ‘ முட்டாளே! நீரில் இறங்கும் சாகசத்தை செய்யாதீர்கள். அதிக ஆட்கள் இருக்கும் உங்களுக்கு, சிலரே இருக்கும் எங்களைப் பார்த்து ஏன் பயம்? உங்கள் அரசனைப் பார்க்கவே வந்திருக்கிறோம்என்று அவர்கள் மொழியிலேயே பதிலளித்தார். 

ஒரு பாம்பாட்டி கருட மந்திரத்தை ஜெபித்து, பாம்புகளால் தனக்கு எந்தப் பிரச்னையும் வராதிருக்கச் செய்வதுபோல, கருடரைவிட சிறந்தவரான மத்வர், அந்த ராஜனின் சேவகர்களை தடுத்து, தம் சிஷ்யர்களை மரண பயத்திலிருந்து காத்தார். 

நிர்விகாரசரிதோsபி பரீத: க்ரூர கிங்கர ஸஹஸ்ர தயேன |

வ்ரஜன்னுதலஸஜ்ஜகதீஷ: ஸிம்ஹராடிவ ஸ்ருகால ஸமூஹே ||10-13 

நரிகளின் கூட்டத்தில் சிங்கம் தைரியமாக முன்னேறுவதைப்போல, மத்வரும் நடந்தார். சிறந்ததும் அழகானதுமான மத்வரின் உடற்கட்டினைப் பார்த்து ராஜன்நற்புத்தியைக் கொண்ட மகானுபாவரே! யமதூதர்களைப் போல இருக்கும், பயங்கரமான எனது சேவகர்களிடமிருந்து தப்பினீர். படகுகளே இல்லாமல் கங்கையை எப்படிக் கடந்தீர்?’ என்று கேட்டான். 

யோஸௌ தேவோ விஸ்வதீப: ப்ரதீப்த: குர்ம: சர்வம் தத்பரானுக்ரஹேண!

யாமஸ்தாவத் தூர்ணமாஷாமுதீசீம் இத்யாத்யம் தத்பாஷயா சித்ரவாக்யம் || (10-17) 

மொத்த உலகத்திற்கே ஒளி கொடுக்கும் சூரியனின் உள்ளிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் விசேஷ அருளினால் அனைத்தையும் செய்கிறோம். இப்போது வடநாட்டிற்குச் செல்கிறோம்என்று அரசனின் மொழியிலேயே அவன் வியக்கும்படி பதிலளித்தார். 

காம்பீர்யம் த்ருதிமுரு வீர்யமார்ய பாவம்

தேஜோsக்ர்யம் கிரமபி தேஷ கால யுக்தாம் |

ராஜாsஸ்ய ஸ்புடமுப லப்ய விஸ்மிதோsஸ்மை

ராஜ்யார்த்தம் ஸபதி ஸமர்ப்பயாம்பபூவ || 10-18 

ஸ்ரீமத்வாசார்யரின் காம்பீர்யம், தைரியம், சாமர்த்தியம், அறிவு, பேச்சு ஆகியவற்றைக் கண்டு வியந்த அந்த ராஜன், தனது அரசில் பாதியையே கொடுக்க முயன்றான். மத்வரை எதிரி என்று நினைத்து கொல்ல நினைத்தனர் அரசனின் சேவகர்கள். ஆனால் அரசனோ தனது அரசில் பாதியையே பரிசாக அளிக்கிறான். அவர்களை தன வலிமையால் வீழ்த்தும் வல்லமை பெற்றிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை தன் சிஷ்யர்களுக்குக் காட்டுவதற்காக இப்படி செய்தார். அவருக்கு வேண்டியதைக் கொடுக்கிறேன் என்று அரசன் சொன்னாலும், சிறுவிஷயங்களில் ஆசை கொள்ளாத மத்வர், அதை மறுத்து முன்னே பயணித்தார். 

இரண்டாம் முறையான பதரி பயணத்தின் மகிமைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment