ஸ்லோகம் #43: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 43]
துங்கமதிக3ள ஷாஸ்த்ரக3ள
வ்யாஸங்கமாடு3வ
ஸுஜனனிகரகெ
மங்க3ளாங்க3னு கொடு3வ தன்னய ஷாஷ்வதத3 பத3வ |
அங்க3னெயரொட3கூ3டி3
து3க்க2த3 ஸங்க3வில்லதெ3
ப்ரதிக்ஷணக3ளலி
ப4ங்க3பா4ரத3 ஸுக2க3ளனுப4விஸுவரு முகுதியலி ||43
துங்கமதிகள - சர்வக்ஞரானவரின்; ஷாஸ்த்ரகள - சாஸ்திரங்களை; வ்யாஸங்கமாடுவ - படிக்கும்; ஸுஜன நிகரகெ - சஜ்ஜனர்களின் குழுவிற்கு; மங்களாங்கனு - ஸ்ரீஹரி; தன்னய - தன்னுடைய; ஷாஷ்வதத பதவ - நிரந்தரமான இருப்பிடத்தை; கொடுவ - கொடுக்கிறான்; துக்கத ஸங்கவில்லதெ - சிறிதும்கூட துக்கம் இல்லாமல்; அங்கனெயரொடகூடி - தத்தம் மனைவியர்களுடன்; ப்ரதிக்ஷணகளலி - ஒவ்வொரு நொடியிலும் (எப்போதும்); பங்கபாரத - குறைவில்லாத; ஸுககளனு - சுகங்களை; முகுதியலி - முக்தியில்; அனுபவிஸுவரு - அனுபவிப்பார்கள்.
மத்வ சாஸ்திரங்களை கேட்கும் பலன்களை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
சர்வக்ஞரானவரின் சாஸ்திரங்களை படிக்கும் சஜ்ஜனர்களின் குழுவிற்கு, ஸ்ரீஹரி தன்னுடைய நிரந்தரமான இருப்பிடத்தை கொடுக்கிறான். சிறிதும்கூட துக்கம் இல்லாமல், தத்தம் மனைவியர்களுடன், ஒவ்வொரு நொடியிலும் (எப்போதும்) குறைவில்லாத சுகங்களை அவர்கள் முக்தியில் அனுபவிப்பார்கள்.
மத்வ விஜயத்தில் இந்த விஷயம் (வைகுண்ட வர்ணனை), ஸ்லோகம் 11-7லிருந்து தொடங்குகிறது.
பரமாகமார்த்த வர ஷாஸ்த்ரமிதம் பஜதாமமானவ கலாரசிதம் |
வ்ரஜதாமஹோ பரம வைஷ்ணவதாம் ரதயே ஸ்வ லோகமஜிதோ திஷதி ||11-7
பக்தியுடன் மத்வ சாஸ்திரங்களைப் படிப்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, வணங்கும் பரம வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீஹரி அவர்கள் வசிப்பதற்கு தன்னுடைய வைகுண்டத்தையே அளிக்கிறான்.
அனுபூயதே ஸுகமனந்த ஸகை: ஸகலைரலம் மதிபதம் ஸததம் |
அபி தாரதம்ய ஸஹிதை: ஸ்வகுரு ப்ரவணை: பரஸ்பரமுரு ப்ரணயை: ||11-24
அங்கு அனைவரும் பகவந்தனின் உறவினர்களே. அங்கு தாரதம்யம் இருந்தாலும், அனைவரும் எப்போதும் முழுமையான சுகத்தையே அனுபவிக்கின்றனர். ஒருவரையொருவர் மிகவும் அன்புடன் பார்த்துக் கொள்கின்றனர். மூத்தவர்களை மரியாதையுடன் நடத்துகின்றனர்.
இந்த வைகுண்ட வர்ணனை படலத்தை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment