Wednesday, April 27, 2022

ஸ்லோகம் #64: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #64: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 64]

வ்ருஷலனோர்வனு கொல்லப3ருதிரெ ஹொஸரவிய தெரத3லி விஸ்மய

வெஸகி33ரு ஸ்ரீகிருஷ்ணன ஸுதா4ர்ணவவ ரசிஸித3ரு |

ப்ரஸரிஸிது1 ஸத்கீர்த்தி ஜக33லி ரஸத3 கு3ணகா3னத3லி தி3விஜரு

குஸுமக3 ஸுரிமளெகெ3ய்த3ரு நந்தி3 முனிவரகெ3 ||64 

வ்ருஷலனோர்வனு - கிராம அதிகாரி ஒருவன்; கொல்லபருதிரெ - கொல்ல வரும்போது; ஹொஸரவிய தெரதலி - உதயசூரியனைப் போல ஒளிர்ந்து; விஸ்மயவெஸகிதரு - அவனை மயக்கினார்; ஸ்ரீகிருஷ்ண ஸுதார்ணவவ - ஸ்ரீகிருஷ்ணாம்ருத மஹார்ணவத்தை; ரசிஸிதரு - இயற்றினார்; ஜகதலி - உலகில்; ஸத்கீர்த்தி - நற்புகழ்; ப்ரஸரிஸிது - பரவியது; ரஸத - மகிமைகளின்; குணகானதலி - குணங்களை (பாடினர்); திவிஜரு - தேவதைகள்; நந்தி முனிவரகெ - ஸ்ரீமதாசார்யர் மேல்; குஸூமகள - பூக்களின்; ஸுரிமளெகெய்தரு - மழை பொழிந்தனர்; 

ஸ்ரீமதாசார்யர் நம் கண்களிலிருந்து மறைந்த சந்தர்ப்பத்தை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

கிராம அதிகாரி ஒருவன் தன்னை கொல்ல வரும்போது, ஸ்ரீமதாசார்யர் உதயசூரியனைப் போல ஒளிர்ந்து அவனை மயக்கினார். ஸ்ரீகிருஷ்ணாம்ருத மஹார்ணவத்தை இயற்றினார். உலகில் இவரது நற்புகழ் பரவியது. அனைவரும் இவரின் குணங்களைப் பாடினர். தேவதைகள் ஸ்ரீமதாசார்யர் மேல் பூக்களின் மழை பொழிந்தனர். 

மத்வ விஜய 16-39ம் ஸ்லோகத்திலிருந்து துவங்கி, முடிவு வரையிலான விஷயங்களின் ஸாரமே இந்த ஸ்லோகத்தில் உள்ளது. 

துர்மந்த்ரை: கலபடலை: ப்ரசோத்யமானோ

க்ராமேஷோ வ்ருஷள பதி: ப்ரஹர்துமேனம் |

ஸம்ப்ராப்தஸ்தத உத யாந்தமீக்ஷமாண:

ப்ரோத்யந்தம் ரவிமிவ விஸ்மிதோ நனாம || 16-39 

ஆசார்யரின் புகழை விரும்பாத சில துஷ்டர்கள் அவரைக் கொல்ல முயன்று, அதில் தோற்று, பின் கிராம அதிகாரிகளிடம் துர்போதனை செய்தனர். சிறிது யோசித்த அவன், பின் ஆசார்யரைக் கொல்வதற்கு வந்து, அவரின் மகிமைகளை அறிந்து, தான் செய்தது தவறென்று உணர்ந்து, அவர் காலில் விழுந்தான். ஆசார்யரின் தரிசனமே ஒருவரின் மனதை எப்படி திருத்துகிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. 

பயணத்தில் முன்னர், கொக்கட என்னும் கோயில் இருக்கும் கிராமத்திற்கு வந்தார் ஆசார்யர். இடெபடித்தாய என்னும் பிராமண பக்தன். அவனின் பக்திக்கு மெச்சிய ஸ்ரீமதாசார்யர், அவனது நன்மைக்காக உத்தம கிரந்தமானகிருஷ்ணாம்ருத மஹார்ணவம்என்னும் கிரந்தத்தை இயற்றினார். ‘ஸ்ரீகிருஷ்ணாம்ருத பரமார்ண வாபிதானாம் சக்ரே சத்வசன ததிம் ஸ்வபக்த பூத்யை: ||’ (16-40) 

நிஸ்த்வானாம் கதிபய புக்தி யுக்த பக்தம் பக்தானாம் வ்யதித சதுர்குணம் தயாளு: |

பூங்க்தே ஸ்ம த்ரிதஷ நரோப போக்யமன்னம் ஸ்ருப்ரீத்யை தன வதாம் ப்ருஹத் ப்ரபோத: || (16-47) 

இப்படி அறியவேண்டியவர்களுக்கு ஞானத்தையும், ஏழையாக வந்தவர்களுக்கு செல்வத்தையும், உலகத்தை காப்பவரான வாயுதேவரின் அவதாரமான ஸ்ரீமத்வாசார்யர் மோட்சத்திற்கான வழியைக் காட்டி சஜ்ஜனர்களுக்கு மகிழ்ச்சியளித்தார். ஆசார்யர் காட்டிய மகிமைகள், அவருக்கு சாதாரணமாக இருந்தாலும் பக்தர்களுக்கு பக்தி அளிப்பதாக இருந்தது. ஜகத்குருவான ஆசார்ய மத்வரின் நிரந்தர சிந்தனை, அவரது கிரந்தங்களின் பாடம், புராணம் - ‘கமனாசன சங்கதாதி லீலா: ஸ்ம்ருதி மாத்ரேண பவாபவர்க தாத்ரீ: |’ (13-42) - ஆகியவை மோட்சத்தைக் கொடுப்பதாக இருக்கிறது. நாராயண பண்டிதர்மனோவிஷுத்யை சரிதானுவாத:’ அதாவது பவித்ரமான, ஞானபக்திகளை வளர்க்கும், மகிழ்ச்சியைக் கொடுக்கும் கதையினை நினைவுபடுத்துகிறார். 

கீர்வாணை: விஜய மஹோத்சவஸ்ய பூஜாம்

குர்வாணைரவிரள சம்விதஸ்ததானீம் |

விஸ்மேரைர் முனினிகரூப தேவயுக்தை:

சுஸ்மேரைரத தமவேக்ஷிதம் ப்ரஜக்மே || (16-52) 

பூலோகத்தின் மிகச்சிறந்த க்ஷேத்திரமான அனந்தாசனனின் திவ்ய சன்னிதியில், உத்தம நற்குணங்களைக் கொண்ட சிஷ்யர்களுடன் வீற்றிருந்த, மங்களகீர்த்தியினால் ஒளிரும், எண்ணற்ற நற்குணங்களைக் கொண்டவரான, ஞானபக்தி வைராக்கியத்தை பெற்றிருப்பவர்களில் முதல்வரான, ஆனந்தத்தைக் கொடுக்கும் சாஸ்திரங்களை இயற்றிய, ஐதரேய உபநிஷத் பாஷ்ய பாடத்தை சிஷ்யர்களுக்கு எடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீமதாசார்யரை காண்பதற்கு, சுரர்கள் வானத்திலிருந்து வணங்கினர். ஸ்ரீபூர்ணப்ரக்ஞரைக் கண்டு சுரோத்தமர்கள் பணிவுடன் போற்றி வணங்கினர். 

நமஸ்தே ப்ராணேஷ ப்ரணத விபவாயாவனிமகா:

நம: ஸ்வாமின் ராமப்ரியதம ஹனுமன் குருகுண |

நமஸ்துப்யம் பீமப்ரபல க்ருஷ்ணேஷ்ட பகவன்

நம: ஸ்ரீமன் மத்வ ப்ரதிஷ சத்ருஷன் நோ ஜயஜய || (16-57) 

பரமகுருகளான ஸ்ரீமன்மத்வாசார்யரே | நீங்கள் நற்-சாஸ்திரங்களால் துர்-சாஸ்திரங்கள் என்னும் இருட்டினைப் போக்கினீர்கள். ஸ்ரீ நாராயணின் நற்குணங்களை சஜ்ஜனர்களுக்கு தெரியவைத்தீர்கள். ஜீவோத்தமரான நீங்கள் எங்களுக்கு அருளுங்கள்என்றனர். ஸ்ரீராமசந்திரனுக்கு ப்ரியமான ஹனுமந்த தேவருக்கு வணக்கங்கள். ஸ்ரீகிருஷ்ணனுக்கு இஷ்டமான பீமசேனதேவருக்கு வணக்கம். ஸ்ரீவேதவியாசரின் ப்ரியத்திற்கு ஆளான ஸ்ரீமத்வாசார்யருக்கு வணக்கங்கள். நமக்கு ஞானத்தை கொடுப்பவராக, துஷ்டர்களை அழிப்பவராக ஜெயித்தீர்கள். இப்படி வணங்கியவாறு பிரம்ம ருத்ராதி தேவதைகள் பூர்ணப்ரக்ஞரின் விஜய மஹோத்ஸவத்தை காண்பதற்காக குடும்பத்துடன் வந்தனர். இங்கு பண்டிதர், ஸ்ரீமதாசார்யரின் திவ்ய உருவத்தைக் கொண்டாடியிருக்கிறார். 

ஸ்ரீமந்தம் சசிவதனம் குசேஷயாக்ஷம் கம்பீர ஸ்வரமதி திவ்ய லக்ஷணாட்யம் |

பஷ்யந்த: ஸ்வகுருமதார்சிசன் க்ருதார்த்த வாண்யாதம் ஹரிரதிபூர்ண காமமேதி || (16-55) 

வானில் காட்சியளித்த ருத்ர, இந்த்ராதி தேவதைகள் குருகளான மத்வாசார்யரின் மஹாவிஜயோத்ஸவத்தை பாராட்டியவாறு, ஜயஜய என்றவாறு, ‘ஷரணம் குரோ கருணயாSபி நோ பவே |’ (16-56) - அஞ்ஞானத்தைப் போக்கி, சுஞ்ஞானத்தைக் கொடுத்து, முகுந்தனைக் காட்டுங்கள். தங்களுடைய கருணையும், அருளும் இருக்கட்டும் என்று வேண்டினர். ஸ்ரீவாயுதேவரின் மூன்றாவது அவதாரத்தை மனதார கொண்டாடி ஜயஜய என்றனர். 

இதி நிகதிதவந்தஸ்தத்ர விருந்தாரகேந்த்ர குருவிஜய மஹந்தம் லாளயந்தோ மஹாந்தம் |

வவ்ருஷுரகில த்ருஷ்யம் புஷ்பவாரம் சுகந்தம் ஹரிதயித வரிஷ்டை ஸ்ரீமதானந்த தீர்த்தே || (16-58) 

அனைவரும் பார்த்திருக்கையில், ஸ்ரீநாராயணரின் அன்பிற்குப் பாத்திரரான ஸ்ரீமதானந்ததீர்த்த பகவத்பாதரின் மேல் தேவலோகத்து நறுமணம் நிறைந்த புஷ்பவிருஷ்டி ஆனது. அங்கிருந்த பார்வையிலிருந்து மறைந்த ஆசார்யர், ஸ்ரீவேதவியாசருடன் பதரியில் தங்கினாலும், ரஜதபீடபுரத்திலும், அவரது கிரந்தங்களிலும் எப்போதும் நிலைத்திருக்கிறார். 

அடுத்த, கடைசி ஸ்லோகத்தில், இந்த கிருதியின் மங்களத்தை செய்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.


***

1 comment:

  1. Very very valuable article Tamil translation very simple dhanyavad
    Rajharaog

    ReplyDelete