Tuesday, April 12, 2022

ஸ்லோகம் #49: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #49: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 49]

பரமபதி 4குதரனுத்33ரிஸலிகெ நரபதிய ப்ரார்த்த2னெய தந்தி3

புருஷனோர்வன நுடி3 லாலிஸி தெரளித3ரு முத3தி3 |

4ரெய ரவி ஸஞ்சரிப தெரத3லி ஸரிது3 பஷ்சிம ப்ராந்தத3ல்லிஹ

ஸ்மரனவல்லப4னாலயவ ஸேரித3ரு கு3ருவரரு ||49 

பகுதரனு - பக்தர்களை; உத்தரிஸலிகெ - மேம்படுத்துவதற்காக; நரபதிய - அரசனின்; பிரார்த்தன்யெ தந்திஹ - வேண்டுகோளை கொண்டு வந்த; புருஷனோர்வன - சிஷ்யரின்; நுடிய லாலிஸி - பேச்சுக்கேற்ப; முததி தெரளிதரு - மகிழ்ச்சியுடன் அங்கு சென்றார்; தரெய ரவி - ஒளிபொருந்திய சூரியன்; ஸஞ்சரிப தெரதலி - சஞ்சரிக்கும் விதத்தில்; ஸரிது - சஞ்சாரம் செய்து; பஷ்சிம பிராந்ததல்லிஹ - மேற்கு திசையில் இருக்கும்; ஸ்மரனவல்லபன - மதனேஸ்வரனின்; ஆலயவ - ஆலயத்திற்கு; குருவரரு - ஸ்ரீமதாசார்யர்; ஸேரிதரு - வந்து அடைந்தார். 

மத்வ விஜய பதிமூன்றாம் சர்க்க விஷயத்தை இங்கு சொல்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

பக்தர்களை மேம்படுத்துவதற்காக, அரசனின் (ஜயசிம்ம) வேண்டுகோளைக் கொண்டு வந்த சிஷ்யரின் பேச்சுக்கேற்ப, ஆசார்யர் மகிழ்ச்சியுடன் அங்கு சென்றார். ஒளிபொருந்திய சூரியன், சஞ்சரிக்கும் விதத்தில் சஞ்சாரம் செய்து, மேற்கு திசையில் இருக்கும் மதனேஸ்வரனின் ஆலயத்திற்கு ஸ்ரீமதாசார்யர் வந்து அடைந்தார். 

மத்வ விஜய 13-1 ஸ்லோகத்திலிருந்து இந்த சம்பவம் வர்ணிக்கப்பட்டுள்ளது. 

ப்ருத்ரு தர்ஷனமுத்திம் க்ருதார்த்த ப்ருதிவீ ப்ருத் ப்ரணதிம் க்ருஹீதவந்தம் |

நிஜ சிஷ்ய முதேs ஸஹ்ரமாப்தம் புருஷ: கஸ்சிதுபாயயௌ கதாசித் ||13-1 

ஸ்ரீமத்வாசார்யர் ப்ராக்ர்யவாட கிராமத்தில் தமது சாதுர்மாசத்தை முடித்து, பத்மதீர்த்தரிடமிருந்து திரும்பப் பெற்ற கிரந்தங்களை கிராமத்து தலைவனிடம் ஒப்படைத்து, சிஷ்யரின் வேண்டுகோளுக்கிணங்க சஹ்யாத்ரி கிராமத்திற்கு வந்தார். ஜயசிம்மனின் அழைப்பையும் ஏற்றார். 

அத மாகவதீமபாஸ்ய காஷ்டாம் வ்ரஜதா ப்ரைதித தேஜஸா ப்ரதீசீம் |

பரிஷோதயதா ஸ்வபாத சங்காத் ப்ருதிவீம் ப்ராக்ஞ திவாகரேண ரேஜே || 13-3 

தம் நடைப்பயணத்தால் பூமியை பவித்ரமாக்கியவாறு, கங்கையைப் போல பிரவாகித்து வந்தார். மாயாவதிகளை வாதத்தில் வீழ்த்தி, சஜ்ஜனர்களுக்கும், தம்மில் பக்தி உள்ளவர்களுக்கும் அருளினார். 

ஸமயேன கதோsமஹீயாஸsஸௌ விஷயம் ஸ்தம்ப பதோப ஸர்ஜனாக்யம் |

மதனாதிபதே: ஸுதாம தாம ப்ரவிவேஷாகில லோக வந்தனீயம் || 13-9 

தக்க காலத்தில், ஸ்ரீமதாசார்யர் கபீனாடு மதனேஸ்வர ஆலயத்திற்கு வந்தார். 

மதனேஸ்வர ஆலயத்தில் ஸ்ரீமதாசார்யர் செய்த அற்புதங்களை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

No comments:

Post a Comment