ஸ்லோகம் #47: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 47]
கெ3லிது3
ஷார்த்தூ3லாக்2ய விது3ஷன அலவமதி வேத3க3ள நிகரகெ
ஸுலப4த3லி வ்யாக்2யான தோரித3
ஸுஸ்வரக3ளிந்த3
|
ப3ளிக நீ பேளெனலு ஸ்வரக3ள திளியதெ3லெ ஷார்த்தூ3ல பேளலு
குளித ஜனரபஹாஸதி3ந்த3தி1 நாசித3னு து3ருள ||47
அலவமதி - ஸ்ரீமதாசார்யர்; வேதகள நிகரகெ - வேத சமூகத்திற்கு; ஸுலபதலி - மிகவும் சுலபமாக; ஸுஸ்வரகளிந்த - தெளிவான ஸ்வரங்களுடன்; வ்யாக்யான தோரித - வியாக்யானங்களை விளக்கினார்; ஷார்த்தூலாக்ய - புலியின் பெயரைத் தாங்கிய, ஆனால் நரியைப் போன்றதான ; விதுஷன - அந்த பண்டிதனை; கெலிது - வென்றார்; பளிக - பிறகு; நீ பேளெனலு - இதையே நீ சொல் என; ஸ்வரகள திளியதெலெ - ஸ்வரங்கள் அறியாமலேயே; ஷார்தூல பேளலு - அந்த பண்டிதன் கூற; குளித - அங்கு அமர்ந்திருந்த; ஜனரு - மக்கள்; அபஹாஸதிந்த - கேலியாக சிரிக்க; துருள - அந்த மந்தமதி கொண்டவன் ; அதி நாசிதனு - மிகவும் வெட்கப்பட்டான்.
ஸ்ரீமதாசார்யர், புண்டரிகபுரியை வென்ற விஷயத்தை இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
ஸ்ரீமதாசார்யர், வேத சமூகத்திற்கு மிகவும் சுலபமாக, தெளிவான ஸ்வரங்களுடன் வியாக்யானங்களை விளக்கினார். புலியின் பெயரைத் தாங்கிய ஆனால் நரியைப் போன்றதான அந்த பண்டிதனை, வென்றார். பிறகு, இதையே நீ சொல் என, ஸ்வரங்கள் அறியாமலேயே அந்த பண்டிதன் கூற, அங்கு அமர்ந்திருந்த மக்கள் கேலியாக சிரிக்க, அந்த மந்தமதி கொண்டவன், மிகவும் வெட்கப்பட்டான்.
மத்வ விஜயத்தில் 12-34 ஸ்லோகத்திலிருந்து இந்த விஷயம் சொல்லப்பட்டுள்ளது.
காம்பீர்யாத்யை: யுக்தமௌதார்ய கார்யை: நானா நாத ஷ்லாக்யமுச்சாரணம் தத் |
சீக்ஷா சிக்ஷா லக்ஷணானாம் ஹி லக்ஷ்யம் மான்யம் மன்யே தன்ய புத்தேரதுல்யம் || (12-34)
ஆசார்யரின் கம்பீர உச்சாடனங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. சபையில் கூடியிருந்த பிராமணர்கள், ஸ்ரீமதாசார்யரின் வேத உச்சாடனங்கள் மற்றும் வியாக்யானங்களைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
அடுத்து புண்டரிகபுரியை வேத வியாக்யானம் செய்வதற்கு அழைத்தனர். புண்டரிகபுரியோ, முதல் ஸ்லோகத்திலேயே தவறாக உச்சாடனம் செய்து, அனைவரின் சிரிப்புக்கு ஆளாகி, வாதத்தில் தோற்றான். சபையினரிடம் அவமானமடைந்தான். இங்கு நாராயண பண்டிதர், வேதாபிமானியான சரஸ்வதி, கருடாதிகளே பூர்ணபிரக்ஞரின் வேத உச்சாடனம், வியாக்யானங்களை வர்ணிக்க வல்லவர்கள். நம்மால் இது சாத்தியமே இல்லை என்கிறார்.
ஷார்தூலாக்யாம் ப்ராப்ய ஸம்பாவித: ப்ராக் லோகே தூர்த்தோ மாயி கோமாயுரேஷ: |
வாதித்வீபி த்வம்ஸினம் மத்வஸிம்ஹம் ப்ராப்தோ ஹீத்தம் ஷப்தசேஷோ பபூவ ||12-41
மாயாவத நரியானவர், பண்டித புலியாக தன்னை நினைத்துக் கொண்டு, வேதாந்த சிங்கத்தைப் போல இருக்கும் ஸ்ரீமதாசார்யரிடம் வாதம் செய்ய வந்தார். தன்னை எதிர்க்கும் அனைத்து பண்டித புலிகளையும் சுலபமாக வெல்லும் திறனைக் கொண்ட ஆசார்யர், இவரையும் வெல்ல, தன் பட்டத்தை/புகழை இழந்து வெறும் புண்டரிக என்னும் பெயரைக் கொண்டு மட்டுமே இருந்தார். (இது டீகாசார்யரின் தத்வோத்யோத கிரந்தத்தின் டீகைக்கேற்ப உள்ள அர்த்தம் ஆகும்).
பத்மதீர்த்த மற்றும் அவனது நண்பனான சங்கராசார்யர் செய்த கெட்ட செயல்களைப் பற்றி, அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
****
No comments:
Post a Comment