ஸ்லோகம் #50: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 50]
நிஷியனாமந்தி3ரதி3
களெயுத பஸரிஸலு ஜயஸிம்ஹராஜனு
ஹஸன ப4குதிய ப4ரதி3 ப3ந்தெ3து3ரினலி நமிஸித3னு |
அஸமதேஜர த3ருஷனதி3 பரவஷரு ஸாஸிர ஜனரு ப3ருதிரெ
ஸுஸமயதி3 ஸ்ரீவிஷ்ணுமங்க3ள ப3ளிகெ3 ஸாரித3ரு ||50
நிஷியனாமந்திரதி - மதனேஸ்வரனின் ஆலயத்தில்; பஸரிஸலு - தங்கியிருந்து; களெயுத - காலத்தை கழித்தார்; ஹஸன பகுதிய பரதி - புன்னகையுடன், அதிகமான பக்தியுடன்; பந்து - வந்து; ஜயஸிம்ஹராஜனு - ஜயசிம்ம அரசன்; எதுரினலு நமிஸிதனு - எதிரில் நின்று வணங்கினான்; அஸமதேஜர - ஒப்பற்ற தேஜஸ் கொண்டவரின்; தருஷனதி - தரிசனத்தால்; ஸாஸிர ஜனரு - ஆயிரக்கணக்கான மக்கள்; பருதிரெ - வந்து கொண்டிருக்க; பரவஷரு - பரசவம் அடைந்தனர்; ஸுஸமயதி - தக்க காலத்தில்; ஸ்ரீவிஷ்ணுமங்கள - ஸ்ரீவிஷ்ணு மங்களத்தின்; பளிகெ - சமீபத்தில்; ஸாரிதரு - வந்தார்;
மதனேஸ்வர ஆலயத்தில் ஸ்ரீமதாசார்யர் செய்த அற்புதங்களை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
ஸ்ரீமதாசார்யர், சிறிது காலம், மதனேஸ்வரனின் ஆலயத்தில் தங்கியிருந்தார். புன்னகையுடன், அதிகமான பக்தியுடன் வந்து ஜயசிம்ம ராஜன், ஆசார்யரின் எதிரில் நின்று வணங்கினான். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்க ஒப்பற்ற தேஜஸ் கொண்டவரின் தரிசனத்தால், பரவசம் அடைந்தனர். தக்க காலத்தில் ஸ்ரீவிஷ்ணு மங்களத்தின் அருகில் ஆசார்யர் வந்தார்.
இந்த விஷயங்கள் மத்வ விஜயத்தில் 13-20 ஸ்லோகத்திலிருந்து சொல்லப்பட்டுள்ளது.
ஸ்ரீமதாசார்யரின் பயணம் என்றால், அது ஸ்ரீஹரியின் ரதயாத்திரை. அதில் உடனிருந்தவர்களே தன்யர். சிஷ்யர்களில் சன்யாசி, கிருஹஸ்தர், ப்ரம்மசாரிகள் என அனைவரும் இருந்தனர். அவரவர்களின் ஆசிரம தர்மங்களை பின்பற்றினர்.
பரிவார ஜனா ந மார்க துக்கம் ப்ரயயு: பூருஷ ரத்னமீக்ஷ்யமாண: |
இதி நாத்புதமஸ்ய ஹி ப்ரயாந்தி ஸ்ம்ருதி மாத்ராத் பவினோ பவாபவர்கம் || (13-20)
ஆசார்யருக்கு சோர்வு என்பதே இல்லை. ஆனந்ததீர்த்தரை பார்ப்பவர்களுக்கு பிரச்னைகள் இல்லை. அவரை நினைப்பவர்களுக்கு, சம்சாரம் என்னும் துக்கம் நாசமடைகிறது என்றால் அவரது தரிசனத்தால் மோட்சத்தையே பெறுகிறார்கள் என்பதில் ஆச்சரியம் என்ன?
இதற்குள் ஆசார்யர் வரும் செய்தி ஜயசிம்மனுக்கு கிடைத்தது. உடனடியாக அவரை சந்திக்கவேண்டி புறப்பட்டான். தன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆயிற்று என்று நினைத்தான். ’சஹ கைஸ்சன பூ சுரைரவாப்த: த்ரிஜகத் பூஜ்ய பதாந்திகே நனாம ||’ (13-22). சைன்யத்தை தூரத்தில் நிறுத்தி, மூன்று உலகத்தவரும் வணங்கும்படியான ஆசார்யரின் பாதம் பணிந்தான். பணிவு, பக்தி நிரம்பிய மனதுடன் ஆசார்யரை வரவேற்றான். விஷ்ணுமங்கள ஆலயத்திற்கு அருகில் வந்தனர். பல கிராமங்களிலிருந்து அரசனைக் காண வந்த மக்கள், ஸ்ரீபூர்ணப்ரக்ஞரை கண்டவுடன் மெய்மறந்து அவரையே பார்த்து நின்றனர். ஸ்ரீமதானந்த தீர்த்தரால் இயற்றப்பட்ட ஹரிஸ்தோத்திரம் (த்வாதச ஸ்தோத்திரம் முதலான) படித்தவாறு, அழகான குரல்களில் பாடியவாறு, சிலர் நடனமாடியவாறும் வந்தனர்.
ஸ்ரீமதாசார்யரின் தோற்ற வர்ணனையை அடுத்த ஸ்லோகத்தில் விவரமாக கூறுகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment