ஸ்லோகம் #45: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 45]
ப்ரசுரமதி கேஸரிதீபரி ரசிஸுதிரெ வ்யாக்யானக3ர்ஜனெ
ருசிஸலாக3தெ3
மாயினரிக3ளு
நடு3கி3த3வு
ப4யதி3 |
ஷுசிய நடெ3னுடி3ஷூன்ய து3ர்ஜன நிகர சோளஜத்3வீபபுரிக3ள
ப4ஜிஸித3ரு ரக்ஷிஸலு மாயாவாத3 ஸரணியனு ||45
ப்ரசுரமதி - அபாரமான மதியைக் கொண்ட; கேஸரிது - ஸ்ரீமதானந்த தீர்த்தர்; ஈபரி - இப்படியாக; வ்யாக்யான கர்ஜனெ - பாஷ்யம் இயற்றுதல், பிரசாரம் செய்வது ஆகியன; ருசிஸலாகதெ - கண்டிக்க திறனற்ற; மாயினரிகளு - மாயாவாதிகள்; பயதி - பயத்தில்; நடுகிதவு - நடுங்கினர்; ஷுசிய நடெனுடிஷூன்ய - சுத்தமான நடவடிக்கைகள் இல்லாதவர்கள்; துர்ஜன நிகர - துர்ஜனர்களின் கூட்டம்; சோளஜ த்வீப புரிகள - சோள தேசத்தின் பத்மதீர்த்த மற்றும் புண்டரிகபுரிகளை; மாயாவாத ஸரணியனு - மாயாவாத கூட்டத்தை; ரக்ஷிஸலு - காக்குமாறு; பஜிஸிதரு - வேண்டினர்.
மத்வ விஜயத்தின் பன்னிரெண்டாம் சர்க்க விஷயங்கள் இங்கு தொடங்குகின்றன.
அபாரமான மதியைக் கொண்ட ஸ்ரீமதானந்த தீர்த்தர், இப்படியாக பாஷ்யம் இயற்றுதல், பிரசாரம் செய்தல் ஆகியவற்றை தொடர்ந்தார். இவற்றை கண்டிக்க திறனற்ற மாயாவாதிகள், பயத்தில் நடுங்கினர். சுத்தமான நடவடிக்கைகள் இல்லாத, துர்ஜனர்களின் கூட்டம், சோள தேசத்தின் பத்மதீர்த்த மற்றும் புண்டரீகபுரிகளை அழைத்து, மாயாவாதிகளை காக்குமாறு வேண்டினர்.
தத்ரானந்த ஸ்வாந்த வேதாந்தி சிம்ஹே முக்யாவியாக்யா நிஸ்வனே ஜ்ரும்பமாணே |
சத்யோமாத்யாத் வாதி தந்தீந்த்ரபீமே பேஜே க்ஷோபோ மாயிகோமாயு யூதை: || (12-1)
பிரம்மசூத்ர பாஷ்யத்தை இயற்றுதல் மற்றும் சித்தாந்தத்தை அனைத்து இடங்களிலும் சிறப்பாக பிரச்சாரம் செய்வது, ரஜதபீடபுரத்தில் தம் சிஷ்யர்களுக்கு தத்வோபதேசத்தை விளக்குவது என ஆசார்யர் ஜொலித்துக் கொண்டிருந்தார். ஆசார்யரின் சித்தாந்தத்தை கண்டிக்க திறனற்ற மாயாவாதிகள் கலக்கமடைந்தனர். பொறாமையில் வெந்த அந்த மாயாவதிகள், சோள தேசத்திலிருந்த பத்மதீர்த்த மற்றும் புண்டரிகபுரி ஆகியோரிடம் சர்வக்ஞரான மத்வாசார்யரை வாதத்தில் எப்படி வெல்வது என்று ஆலோசித்தனர்.
ஸம்பூயாமி சோளஜ த்வீபிபுர்யோ பார்ஷ்வே பாபா மந்த்ரயாமாஸுருக்ரா: |
ஸாஸூயா பூபூஷணே வாயுதேவே மூடா யத்வத்தார்த்தராஷ்ட்ராந்திகே ப்ராக் || 12-2
அந்த மாயாவாதிகள் மற்றும் இந்த பத்மதீர்த்த மற்றும் புண்டரிகபுரி அனைவரும் சேர்ந்து மந்திராலோசனை செய்தனர். திருதராஷ்டிரனின் மக்களான துரியோதனனிடம் அரசகுமாரர்கள் வந்து ஆலோசனை கேட்டது போல இந்த காட்சி இருந்தது.
ஸ்ரீமத் ஸுமத்வ விஜய ப்ரமேய மாலிகா என்னும் தனது கிருதியில் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், மத்வ விஜயத்தின் பன்னிரெண்டாம் சர்க்கத்தின் சுருக்கத்தையும், இந்த சர்க்கத்தை படிப்பதால் வரும் பயனையும் இவ்வாறு சொல்கிறார்.
ப3ஹுபத்3ரவத3ம் மாயிமண்ட3லம்
ஸ்வீயமண்ட3லே
|
க2ண்ட3யித்வாsக2ண்ட3ஷக்திர் விரேசேsக2ண்ட3ராஜவத் ||13||
மாயிகள் தங்களுடைய குழுவில் பல்வேறு விதமாக ஆலோசித்து, ஆசார்யருக்கு உபத்திரவங்களைக் கொடுக்க முயன்றபோது, ஆசார்யர், அகண்டராஜன் (சந்திரன்) தன்னுடைய பரிபூர்ண சக்தியினால் எதிரிகளை தோற்கடிப்பதைப் போல, ஆசார்யர் இந்த மாயிகளை வாதத்தில் முழுமையாக தோற்கடித்து, ஒளிர்ந்தார்.
அபேக்ஷிதாகி2லாவாப்திர் மோக்ஷ சாஸ்த்ர ஸுலோலதா |
விக்4னனாஷ: ஸாத4னானாம் ஸ்வீயமாஹாத்ம்ய போ3த4னம் ||20||
பன்னிரெண்டாம் சர்க்கம் : சாதனை மார்க்கத்தில் வரும் தடைகள் அகலுதல்
பத்மதீர்த்த மற்றும் புண்டரிகபுரி உடனான ஸ்ரீமதாசார்யரின் வாதத்தை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment