ஸ்லோகம் #60: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 60]
விவித4 ஸம்ஸாரிக நோவு ஸவிது3 வரவைராக்3ய பொந்து3த
ஸுவினயதி3 ப்ரார்த்தி2ஸித3
ஸஹஜன யதிவரன மாடி3
|
பு4விகெ3பூ4ஷண பத3மனாப4ரு கவிவரரு யதிவரரனேகரு
ப்ரவஹிஸிதரனுதி3னதி3 த4ரெயலி ஞானப4குதியனு ||60
விவித - பற்பல வகைகளான; ஸம்ஸாரிக நோவு ஸவிது - சம்சார பந்தங்களை விட்டு; வரவைராக்ய பொந்துத - சிறந்த வைராக்கியத்தை அடைந்தவாறு; ஸுவினயதி - மிகவும் பக்தி, மரியாதையுடன்; பிரார்த்திஸித - பிரார்த்தனை செய்த; ஸஹஜன - பண்டிதனை ; புவிகெபூஷண - ஸ்ரீமதாசார்யர்; யதிவரன - யதி ஆசிரமத்தைக் கொடுத்து; பதுமனாபரு - பத்மனாப தீர்த்தர்; மாடி - செய்தார்; கவிவரரு - கற்றறிந்த கிருஹஸ்தர்கள்; யதிவரர் - பல யதிகள்; அனேகர் - என பலர்; தரெயலி - இந்த நாட்டில்; ஞானபகுதியனு - ஞான பக்திகளை; அனுதினதி - தினந்தோறும்; ப்ரவஹிஸிதரு - பரவச் செய்தனர்.
ஷோபன பட்டர், ஸ்ரீபத்மனாப தீர்த்தர் ஆகும் படலத்தை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
பற்பல வகைகளான சம்சார பந்தங்களை விட்டு சிறந்த வைராக்கியத்தை அடைந்தவாறு, மிகவும் பக்தி மரியாதையுடன் பிரார்த்தனை செய்த பண்டிதனை, ஸ்ரீமதாசார்யர் யதி ஆசிரமத்தைக் கொடுத்து, பத்மனாப தீர்த்தர் என செய்தார். கற்றறிந்த கிருஹஸ்தர்கள், பல யதிகள் என பலர், இந்த நாட்டில் ஞான பக்திகளை தினந்தோறும் பரவச் செய்தனர்.
மத்வ விஜய 15-120 ஸ்லோகத்தில் ஷோபன பட்டர், ஸ்ரீபத்மனாப தீர்த்தர் ஆகும் விஷயம் வந்திருக்கிறது.
ஆக்ருஷ்டோsஸ்ய குணைர்வாப்தை: யோ கோதாயா உபாயயௌ |
ஸ பத்மனாப தீர்த்தாக்ய: சிஷ்யோsன்யோsபூத் ஸு சேதஸ: || 15-120
கோதாவரி நதிக்கரையிலிருந்து வந்த பண்டிதர், அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்த, ஷோபன பட்டர், அன்றைய பண்டிதர்களில் சிறந்தவர் ஆவார். ஸ்ரீமதாசார்யரின் நற்குணங்களுக்கு ஈர்க்கப்பட்டார். அவர் மூலமாக சூத்ர பாஷ்யத்தை ஒருமுறை கேட்டார். அவரில் மாற்றம் ஏற்பட்டது. மத்வ சாஸ்திரங்களை ஒப்பி, இதர மதங்களை நிராகரித்து, மத்வ சாஸ்திரங்களை தகுந்த ஆதாரங்களுடன் பிரசாரம் செய்யத் துவங்கினார். ஆசார்யரிடம் சன்யாசம் பெற்று, முதல் சிஷ்யராகி, பத்பனாப தீர்த்தர் என்று அழைக்கப்பட்டார்.
ஸ்ருத்யா மத்யா ஸதா பக்த்யா விரக்த்யா நித்ய ஸேவயா |
யஸ்மை பிரஸன்ன: ப்ராஜ்யேக்ஷ: ஸத்யோ வித்யாம் ததௌ ஷுபாம் || 15-121
இவரிடமிருந்த குருபக்தி, சித்தாந்த அறிவு, நினைவுத்திறன், தவ வலிமை ஆகியவற்றைக் கண்ட ஸ்ரீமதாசார்யர் மகிழ்ந்து, வேதாந்த கல்வியை உபதேசம் செய்தார். சிம்மத்தைப் போலிருந்த பத்பனாப தீர்த்தர், சித்தாந்தத்தை பிரசாரம் செய்தவாறு, துர்மதங்களை கண்டிக்கத் துவங்கினார்.
மத்வ ப்ரசிஷ்யா பஹவ: சிஷ்யா ஏஷாம் முஹுஸ்ததா |
அலஞ்சக்ருரலம் ப்ருத்வீம் ஸர்வே ஸத்குண பூஷணா: || 15-132
மேலும் பல பக்தர்கள், கிருஹஸ்தர்கள் ஸ்ரீமதாசார்யரின் சாஸ்திரங்களில் ஈர்ப்பு கொண்டு, பாடங்களைப் படித்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் விஷ்ணுபக்தி வளருமாறு செய்தார் ஆசார்யர். மகிழ்ச்சியை, இஹபரங்களில் சுகத்தைக் கொடுத்து, இறுதியில் மோட்சத்தையே கொடுக்கும் சித்தாந்தத்தை போதித்தார்.
இத்துடன் மத்வ விஜய பதினைந்தாம் சர்க்க விஷயங்கள் முடிந்தன. அடுத்த ஸ்லோகத்தில் மத்வ விஜய கடைசி சர்க்கமான பதினாறாம் சர்க்க விஷயங்களை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment