ஸ்லோகம் #62: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 62]
தீ3பவாரலு பாட2ஸமயதி3
தாபஸரு தம்மங்க்4ரியுகு3ரின
தீபத3லி பெ3ளகி3த3ரு
ப்ரவசனகெ3ய்த3ரொந்து3தி3ன |
ஸ்தாபிஸி2த3ரதி1 தொ3ட்ட3ஷிலெய ஸ்வரூப ப3லத3லி துங்கெ3யலி ஸூ
ர்யோபராக3தி3 ஸ்னானகெ3ய்யலு ஜலதி4கெ3ய்தி3த3ரு ||62
பாடஸமயதி - சிஷ்யர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில்; தீபவாரலு - தீபம் அணைந்துவிட; தாபஸரு - ஞானியான ஸ்ரீமதாசார்யர்; தம்மங்க்ரியுகுரின - தன் கால் கட்டைவிரல் நகத்தின்; தீபதலி - தீபத்தில்; பெளகிதரு - ஒளி கொடுத்தார்; பிரவசனகெய்தரு - பிரவசனம் செய்தார்; ஒந்துதின - ஒரு நாள்; துங்கெயலி - துங்கபத்ரா நதிக்கரையில்; ஸ்வரூப பலதலி - தன் ஸ்வரூப பலத்தினால்; அதி தொட்ட ஷிலெய - மிகப்பெரிய பாறையை; ஸ்தாபிஸிதரு - நிறுவினார்; ஸூர்யோபராகதி - சூர்ய கிரகணத்தன்று; ஸ்னானகெய்யலு - பர்வ கால ஸ்னானம் செய்வதற்கு; ஜலதிகெய்திதரு - கடலில் இறங்கினார்.
ஸ்ரீமதாசார்யரின் மகிமைகளை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
சிஷ்யர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில், தீபம் அணைந்துவிட, ஞானியான ஸ்ரீமதாசார்யர், தன் கால் கட்டைவிரல் நகத்தின் தீபத்தில் ஒளி கொடுத்து, அந்த ஒளியில் பிரவசனம் செய்தார். ஒரு நாள் துங்கபத்ரா நதிக்கரையில், தன் ஸ்வரூப பலத்தினால், மிகப்பெரிய பாறையை நிறுவினார். சூர்ய கிரகணத்தன்று பர்வ கால ஸ்னானம் செய்வதற்கு கடலில் இறங்கினார்.
கால் நகத்திலிருந்து ஒளி
வ்யாக்யாதா நிஷி ஸ கதாசன ப்ரதீபே
ஸம்ஷாந்தே புனரபி வாசயாம்பபூவ |
சிஷ்யான் ஸ்வான் புரு கருணாம்புதிர் நிஜாங்க்ரே:
அங்குஷ்ட ஸ்புட நகராந்த ரோசிஷைவ ||16-6
ஒரு முறை இரவு வேளையில், ஆசார்யர் சிஷ்யர்களுக்கு பாடம் எடுக்கையில் தீபம் அணைந்து போயிற்று. கருணைக்கடலான ஸ்ரீமதாசார்யர் தம் காலின் கட்டைவிரலின் நகத்தின் நுனியிலிருந்து வெளிச்சத்தை தருவித்தார். அந்த வெளிச்சத்திலேயே பாடத்தை நடத்தியும் முடித்தார். கல்வியின் அபிமானியான பாரதிதேவியின் கணவருக்கு இது ஒன்றும் ஆச்சரியமில்லையே.
பீமனின் நினைவு (16-7, 8, 9 ஸ்லோகங்கள்)
நித்யே தாம் கிரிமிவ வானரி க்ருதாத்மா
லீலாவத் கர கமலேன ஸோsமலேன |
தத்ராபி ந்யதித தயாsஸ்ய ஸூச்யதேலம்
தத் துங்காம் நனு நிகஷாsதுனாபி கர்ம || 16-9
சர்வக்ஞரான ஸ்ரீமத்வாசார்யர் பயணத்தில் பத்ரா நதிக்கரைக்கு வந்தார். அங்கு வெள்ளத்தை தடுக்க ஒரு தடுப்பு வைக்கவேண்டுமென்று ஒரு பெரிய பாறையைத் தூக்கிய பலர், அதை தூக்கமுடியாமல் நடுவில் இறக்கிவைத்தனர். அதைக் கண்ட ஆசார்யர், ‘மக்களின் நலனுக்காக இந்த பாறையை ஏன் சரியான இடத்தில் வைக்கவில்லை?’ என்று கேட்டார். அவர்களோ ‘யதிஸ்ரேஷ்டரே! இது பீமசேனனால் மட்டுமே முடியும் வேலையாகும்’ என்றனர். ஆசார்யர் ‘லீலாவத்கரகமலேன சோSதுலேன’ அனாயாசமாக, அந்த பெரிய பாறையை தன் ஒரே கையில் தூக்கி, வைக்கவேண்டிய சரியான இடத்தில் வைத்தார். இந்த பாறையை இன்றும் பார்க்கமுடியும். மக்களுக்கு ஸ்ரீமத்வரின் உதவியாக செயலாகும் இது.
இந்த பாறைக்கு ‘பீமனகல்லு’ என்று பெயர். 20அடி நீளம். 16 அடி அகலம். 10 அடி உயரமான பாறை. சுமார் 50 டன் எடை இருக்கும். அதன் மேல் மத்வாசார்யரின் படம் வரைந்து ‘ஸ்ரீமத்வாசார்யர் ஒரே கையினால் தூக்கி நிறுத்தியது’ என்று எழுதினர். இதை இன்றும் சிக்மங்களூர் ஜில்லா மூடுகெரெ தாலுகா மாவினகெரெ கிராமம் அம்புதீர்த்தத்தின் அருகில் காணலாம். அப்போது ஸ்ரீமதாசார்யரின் வயது 74 இருக்கலாம்.
ஸ்ரீமதாசார்யரின் மேலும் சில மகிமைகளை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment