ஸ்லோகம் #54: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 54]
ஸகலமங்க3லதா3த ஸுஜனகெ ஸுக2வ லேஷவ கொட3னு கு1னகெ1
சகிதராத3ரு நோட3லீதன
மத்4யமத3 ஜனரு |
அகி2ல ஸமயதி3 ஸ்னானஜபதப ஸுக2மயத3 ஷாஸ்த்ரக3ள ப்ரவசன
விகஸவாத3து3 ஸுஜன நிகரகெ ஸாது4கர்மக3ளு ||54
ஸுஜனகெ - சஜ்ஜனர்களுக்கு; ஸகலமங்கலதாத - அனைத்து மங்களங்களையும் கொடுக்கிறார்; குனகெ - துஷ்டர்களுக்கு; ஸுகவ லேஷவ கொடலு - சுகம் கொடுப்பதில்லை (அதிகப்படியான த்வேஷத்தை கொடுக்கிறார்); நோடலீதன - இவரைக் கண்ட; மத்யமத ஜனரு - மத்யஸ்தர்கள் - சகிதராதரு - வியப்படைந்தனர்; அகில ஸமயதி - முழு நேரமும் (எப்போதும்); ஸ்னானஜபதப - ஸ்னானம், ஜபம், தபம்; ஸுகமயத ஷாஸ்த்ரகள பிரவசன - சுகத்தைக் கொடுப்பதான பிரவசனங்கள்; ஸாதுகர்மகளு - இந்த ஸாதுவின் செயல்கள்; ஸுஜன நிகரகெ - சஜ்ஜனர்களின் கூட்டத்திற்கு; விகலவாதது - மகிழ்ச்சியைக் கொடுத்தன.
ஸ்ரீமதாசார்யரின் தினப்படி நடவடிக்கைகளை இந்த ஸ்லோகத்திலிருந்து விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
ஸ்ரீமதாசார்யர், சஜ்ஜனர்களுக்கு அனைத்து மங்களங்களையும் கொடுக்கிறார். துஷ்டர்களுக்கு சுகம் கொடுப்பதில்லை (அதிகப்படியான த்வேஷத்தை கொடுக்கிறார்). இவரைக் கண்ட மத்யஸ்தர்கள் வியப்படைந்தனர். முழு நேரமும் (எப்போதும்) ஸ்னான, ஜப, தப, சுகத்தைக் கொடுப்பதான பிரவசனங்கள் என இந்த ஸாதுவின் செயல்கள், சஜ்ஜனர்களின் கூட்டத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.
மத்வ விஜய 14-6 ஸ்லோகத்தின் அர்த்தத்தையே இந்த ஸ்லோகம் விளக்குகிறது.
அகிலகல குலானாம் வர்தயன் த்வேஷதோஷம்
விதததபி நராணாம் கௌதுகம் மத்யமானாம் |
ஸ்வகதி ஸமுசிதானாம் பூதிதாயி ஷுபானாம்
பஹள ஹ்ருதிஹ நின்யே ஷர்வரீ: காஸ்சிதேவம் || 14-6
பூர்ணப்ரக்ஞர், தம்மிடம் பக்தி கொண்ட சஜ்ஜனர்களுக்கு ஞானபக்தி ஐஸ்வர்யங்களை வழங்கியவாறும், எதிரிகளல்லாத மத்யஸ்தர்களுக்கு வியப்பை உண்டுபண்ணியும், துஷ்டர்களுக்கு அதிகப்படியான த்வேஷத்தையும் கொடுத்து விஷ்ணுமங்களத்தில் நாட்களை கழித்தார்.
ஸ்ரீமதாசார்யரின் அனுஷ்டான கிரமங்களை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment