ஸ்லோகம் #63: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 63]
ஜலதி4யலி மஜ்ஜனவ கெ3ய்த3ரு திளிஸித3ரு ஷ்ருதிததிக3ளர்த்த2வ
ச2லதி3
கண்ட2வ
பிடி3த3 து3ருளன நெலகெ1
கெட3ஹித3ரு
ஹலவு வித3தை3ஷ்வர்யக3ள தா ப3ளிய
ஜனரிகெ3 தோரித3ரு ஸுர
நிலயவைப4வக3ளனு ஜீர்ணோத்3தா4ர மாடி3த3ரு ||63
ஜலதியலி - கடலில்; மஜ்ஜனவ கெய்தரு - ஸ்னானம் செய்தார்; ஷ்ருதிததிகளர்த்தவ - ரிக்வேதத்தின் ஐதரேய ஸூக்தங்களின் அர்த்தங்களை; திளிஸிதரு - பாடத் துவங்கினார்; சலதி - அழுத்தமாக; கண்டவ - கழுத்தினை; பிடித - பிடித்த; துருளன - கெட்டவனை; நெலகெ கெடஹிதரு - நிலத்தில் தள்ளினார்; தா பளிய - தன்னிடம் இருந்த; ஹலவு விதத - பல விதமான; ஐஷ்வர்யகள - மகிமைகளை; ஜனரிகெ தோரிதரு - மக்களுக்கு காட்டினார்; ஸுரநிலய - பாரந்தி என்னும் ஹரியின் கோயிலை; ஜீர்ணோத்தார மாடிதரு - சீரமைத்து மறுபடி பூஜைக்கு ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீமதாசார்யரின் மேலும் சில மகிமைகளை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
ஸ்ரீமதாசார்யர் கடலில் ஸ்னானம் செய்தார். ரிக்வேதத்தின் ஐதரேய ஸூக்தங்களின் அர்த்தங்களை பாடத் துவங்கினார். தன் கழுத்தை அழுத்தமாக பிடித்த ஒருவனை நிலத்தில் தள்ளி வென்றார். தன்னிடம் இருந்த பல விதமான மகிமைகளை மக்களுக்கு காட்டினார். பாரந்தி என்னும் ஹரியின் கோயிலை சீரமத்து மறுபடி பூஜைக்கு ஏற்பாடு செய்தார்.
மத்வ விஜய 16-13 ஸ்லோகத்திலிருந்து வரும் விஷயங்களை இங்கு பார்க்கிறோம்.
சூரிய கிரகணம். கடலைவிட உயரமாக ஸ்ரீமத்வர்
ஒரு நாள் அமாவாசை. சூரிய கிரகண பர்வ காலமிருந்தது. ஸ்ரீமதாசார்யர் தமது சன்யாசி, கிருஹஸ்த என பல சிஷ்யர்களுடன் சமுத்ர ஸ்னானத்திற்காக சென்றார். ’கன கன கோஷ கோர வேஷ:’ (16-13) பெரிய பெரிய அலைகள் கடலில் எழுந்தன. சர்வக்ஞாசார்யரின் கால்களில் பட்டு, அவருக்கு சாஷ்டாங்கமாக வணங்குவதாக இருந்தது. இங்கு பண்டிதர், கடலையும் ஆசார்யரையும் ஒப்பிட்டு, இவர் கடலைவிட உயர்ந்தவர் என்று வர்ணிக்கிறார். பிறகு ஆசார்யர் தனது கம்பீரமான குரலில், ரிக் வேதத்தின் ஐதரேய பகுதியின் சூக்தங்களின் வியாக்யானத்தை பாடத் துவங்கினார். பர்வகாலத்தில், சமுத்ர ஸ்னானம் செய்து கடலுக்கு அதிக புனிதத்தைக் கொடுத்தார். அவருடன் வந்த அனைவரும் கடலில் குளித்து புனிதராயினர். கடலில் அலைகளின் வேகத்தை தாங்கமுடியாத பக்தர்களுக்கு குளிக்க முடியாமல் பிரச்னை உண்டாயிற்று. ’ஆக்ராந்தோSதிக குருணா ஸ தேன தாவத் முஞ்சன் சஞ்சலனமபூத் தடாக தேஷ்ய: ||’ (16-23) உடனே அனைத்திலும் வல்லவரான ஆசார்யர், தமது தீர்க்கமான பார்வையால், ஆர்ப்பரித்த கடலை மட்டுப்படுத்தினார்.
ஆசார்யரின் ஆணைப்படி, இருவரும் அவரின் கழுத்தினை அழுத்திப் பிடிக்க முயன்றனர். ’சங்கர்ஷாத் க்ரம பரிவர்தமான தைக்ஷ்ணம் ||’ (16-27) ஆசார்யரிடம் எந்த மாற்றமும் காணப்படாமல், கழுத்தை இன்னும் பலமாக அழுத்தினர். அப்போதும் தெளிவாக பேசிக் கொண்டிருந்த மத்வர், பீமரே ஆவாரல்லவா?
லகிமாதி வலிமையை காட்டுதல்
நிர்யத்னம் வடுமதி ருஹ்ய மந்தஹாஸி ஸ ப்ராயாதிஹ பரிதோ ந்ருசிம்ஹகேஹம் |
ஐஸ்வர்யேரிதி லகிமாதிகைருபேதோ மத்வோபூத் த்ரிபுவன சித்ரரத்ன ராஜ: || (16-30)
ஒருமுறை ஒரு சிறிவன் மேல் அமர்ந்து ஸ்ரீமதாசார்யர் ந்ருசிம்ஹ ஆலயத்தைச் சுற்றி வந்தார். இது மூன்று உலகத்தாருக்கும் வியப்பை அளித்தது. லகிமா, கரிமாதி செல்வங்களை பெற்றிருப்பவரான பூர்ணப்ரக்ஞரின் இந்த செயல், இவர் ஞானத்தில் மட்டும் வல்லவர் இல்லை; வலிமையிலும் இவர் வல்லவரே - என்ற செய்தியை தந்தது. இவரது கிரந்தங்களின் காம்பீர்யமும் இவ்வாறே இருக்கின்றன என்று அறிஞர்கள் அறிந்தனர்.
பாரந்தி கோயிலை சீர்படுத்தியது
பாரந்தி ஸுரஸதனம் விஷாலஸம்வித்
ஸம்ப்ராப்த கலு ஸுசிரான்னிவேத்ய ஹீனம் |
க்ராம்யாக்ர்ய க்ஷிதிபதிபிர் தினார்த்த மாத்ராத்
தத் பூதிர்வ்யதித ஸ பூத பல்யனல்பா: || 16-36
த்வாபரத்தில் பீமனாக இருந்தபோது, த்ரௌபதி மற்றும் சகோதரர்களுடன் ‘பாரந்தி’ என்னும் ஆலயத்தில் ஐந்து ரூபத்தில் இருந்த ஸ்ரீஹரியை வணங்கி, நித்ய பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதே இடத்திற்கு ஸ்ரீமத்வராக வந்தவர், அந்தக் கோயிலின் பூஜைகள் நின்று போயிருப்பதைக் கண்டார். உடனடியாக கிராமத்து முக்யஸ்தர்களின் முன்னிலையில், அந்த ஊரின் அரசனையும் அழைத்து, அனைத்து நியமங்களையும் மறுபடி துவக்குமாறு ஏற்பாட்டினைச் செய்தார். ஸ்ரீஹரியை பூஜித்திருந்த மற்றும் அவனின் மகிமைகளை நினைத்துக் கொண்டார். ஆசார்யரின் யோகசித்தியை பலமுறை கண்டிருந்த அவரது சிஷ்யர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமில்லை.
ஸ்ரீமதாசார்யர் நம் கண்களிலிருந்து மறைந்த சந்தர்ப்பத்தை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment