Wednesday, April 20, 2022

ஸ்லோகம் #57: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #57: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 57]

ஹரியு கு3ணக3ணநிலய ஸகலவ நரித1வனு 233ளனு ஸ்ருஜிஸுவ

பரிய தோருவ பா4ஷ்யபா4வவ விவரிஸுத்திரலு |

உருதரத3 பாண்டித்யமத3தி3ந்த3 4ரெதலதி3 ப்ரக்2யாதரிஹ ஒன்

தெ3ரடு3 விக்ரம நாமகரு கேளித3ரு ப்ரவசனவ ||57 

ஹரியு - ஸ்ரீஹரி; குணகணநிலய - அனந்த கல்யாண குண பரிபூர்ணன்; ஸகலவனரிதவனு - அனைத்தையும் அறிந்தவன்; கககளனு ஸ்ருஜிஸுவ - சூரியன் முதலான அனைத்தையும் படைப்பவன்; பரிய தோருவ - இப்படியான கருத்துக்களை சொல்லும்; பாஷ்யபாவவ - தன் பாஷ்யத்தின் அர்த்தத்தை; விவரிஸுத்திரலு - உபன்யாசம் செய்து கொண்டிருக்க; உருதரத - மிகச்சிறந்ததான; பாண்டித்யமததிந்த - பாண்டித்யத்தின் கர்வத்தினால்; தரெதலதி - பூமியெங்கும்; ப்ரக்யாதரிஹ - புகழ்பெற்றவரான; ஒந்தெரடு விக்ரம நாமகரு - த்ரிவிக்ரம பண்டிதாசார்யர்; ப்ரவசனவ - ஆசார்யரின் பிரவசனத்தை; கேளிதரு - கேட்டார். 

ஸ்ரீமதாசார்யரின் உபன்யாஸ விஷயத்தை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

ஸ்ரீஹரி அனந்த கல்யாண குண பரிபூர்ணன். அனைத்தையும் அறிந்தவன். சூரியன் முதலான அனைத்தையும் படைப்பவன். இப்படியான கருத்துக்களை சொல்லும் தன் பாஷ்யத்தின் அர்த்தத்தை ஸ்ரீமதாசார்யர் உபன்யாஸம் செய்து கொண்டிருக்க, மிகச் சிறந்ததான பாண்டித்யத்தின் கர்வத்தினால், பூமியெங்கும் புகழ்பெற்றவரான த்ரிவிக்ரம பண்டிதாசார்யர், ஆசார்யரின் பிரவசனத்தை கேட்டார். 

மத்வ விஜய பதினைந்தாம் சர்க்கத்தில் முதல் ஸ்லோகத்திலிருந்தே ஸ்ரீமதாசார்யரின் பிரவசன சிறப்புகளை பார்க்கலாம். 

பூயோ போதஸ்ததோ பூயோ வ்யாசக்யௌ பாஷ்யமத்புதம் |

க்ராமே க்ராமீண ஸாமான்யே வசம்ஸ்தத்ராமராலயே || 15-1 

ஸ்ரீமதானந்ததீர்த்தர் அமராலயத்தில் தம் அற்புத நடையில் சூத்ரபாஷ்ய பிரவசனத்தைத் துவக்கினார். அங்கிருந்த புகழ்பெற்ற அத்வைத பண்டிதரும், கூர்மையான அறிவுடையவரும், சாஸ்திரங்களைக் கற்றவருமான த்ரிவிக்ரம பண்டிதாசார்யரைக் கண்டார். 

பரபக் ரதாரூடம் கர தர்க மஹாயுதம் |

த்ரிவிக்ரமார்யம் சோSபஷ்யத் ப்ரதி வீரமிவாக்ரத: || (15-2) 

இங்கு நாராயண பண்டிதர், ஸ்ரீமதாசார்யரின் உபன்யாச நடையை கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார். 

நாத்யத்வரா நாதிரயா ஸ்கலந்தி நிரந்தரா |

அனனா வயவேத்ய தவீயோபி: ப்ரதர்கிதா || (15-4) 

மத்வரின் சொற்பொழிவு, காலாட்படையின் நடையைப் போல மெதுவாக இருந்தாலும், ஒரு சீராக இருந்தது. ஆசார்யரின் சொற்பொழிவினால் பாற்கடலைக் கடைந்தபோது வந்த லட்சுமியைப் போல இப்போது இன்னொரு லட்சுமிதேவி வந்துவிட்டாளோ என்று தோன்றியது. அவரது நடை கங்கைப் பிரவாகத்தைப் போலவும் தோன்றியது. நாராயண பண்டிதாசார்யர், ஆசார்யரின் சொற்பொழிவை இப்படியாகக் கூறி முடிக்கிறார். 

நாராயணோ அனந்தகுணோ பிரம்மாக்யோ வேதவேதித: |

விஷ்வகர்தேதி விஷ்வக்ஞ: ஸ்ருத்யா யுக்த்யாSப்யசேஷதத் || (15-8) 

நாராயணன் அனந்தகுண பரிபூர்ணன். வேதங்களால் புகழப்படுபவன். பிரம்மன் என்ற சொல்லிற்கு உரியவன். உலகத்தில் அனைத்தின் படைத்தலுக்கும் காரணமானவன். பூர்ணப்ரக்ஞர் துர்மதங்களான நிரீஷ்வர சாங்க்ய, பாஸ்கர, பாசுபத, வைஷேஷிக, சூன்யவாத, மாயாவாத, சார்வாக, பௌத்த ஆகிய மதங்களின் தோஷங்களை நிரூபித்து நிராகரித்து, த்வைத சித்தாந்தத்தின் சிறப்புகள் மோட்சத்திற்கான வழியாக இருப்பதை விளக்கினார். இங்கு நாராயண பண்டிதர், அனைத்து மதங்களைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியிருப்பது, அவரது புலமைக்கு ஒரு சான்றாக இருக்கிறது. 

இத்யாதீன் தர்ஷயந்த்யர்த்தான் வ்யாக்யோபன்யாஸ ஸம்யுதா |

த்ரிவிக்ரமார்யேண ததா விஷ்வாபிக்ஞஸ்ய ஸுஸ்ருவே || 15-64 

இப்படியாக ஸ்ரீமதாசார்யர் செய்த உபன்யாஸங்களை, த்ரிவிக்ரமாசார்யர் மிக கவனத்துடன் கேட்டார்.           

மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தனது ஸ்ரீமத் சுமத்வ விஜய ப்ரமேய மாலிகா கிருதியில், மத்வ விஜய பதினைந்தாம் சர்க்கத்தின் சுருக்கத்தையும், இந்த சர்க்கத்தை படிப்பதால் வரும் பலனையும் இவ்வாறு கூறுகிறார். 

வியாக்2யாத்ரா பி3ரம்மஸூத்ராணாம் பூர்ணப்ரக்ஞேன வாத3: |

ஜிதஸ்தச் சிஷ்யதாம் ப்ராப்ய ஸோsகரோத் தத்வதீ3பிகாம் ||16|| 

த்ரிவிக்ரம பண்டிதாசார்யர், ஸ்ரீமதாசார்யருடன், 15 நாட்கள் வாதம் செய்தார். ஸ்ரீவேதவியாச தேவரின் பிரம்ம ஸூத்ரத்திற்கு வியாக்யானம் செய்யும் ஆசார்யருடன் வாதம் செய்து, அதில் தோற்றார். ஆனால், பக்தியுடன் ஆசார்யரின் சிஷ்யத்வத்தைப் பெற்று, ஆசார்யரிடமிருந்து சாஸ்திர, ஸ்ரவணம் செய்து, பாஷ்யத்திற்குதத்வதீபிகாஎன்னும் டீகையை இயற்றினார். 

அபரோக் த்3ருஷேர்விக்4 நாஷஸ் தத்3தா3பனம் ததா2 |

மோக்ஷதா3னமிதி ப்ரோக்தம் 2லம் ஷோட3ஷகம் பரம் ||21|| 

பதினைந்தாம் சர்க்கம் : அபரோக் ஞானம் அடைதல் 

த்ரிவிக்ர பண்டிதாசார்யர், ஸ்ரீமதாசார்யருடன் செய்த வாதத்தை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

No comments:

Post a Comment