Friday, April 22, 2022

ஸ்லோகம் #59: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #59: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 59]

மத்4வதீர்த்தரனுக்ஞெ படெ3யுத ஷுத்34தத்வக3ளன்னு தோரலு

மத்4 பா4ஷ்யகெ டீகெ தத்வப்ரதீ3 ரசிஸித3ரு |

ஷுத்34ஸித்தாந்தக3 ந்யாயத3 பத்த3தி43ளனு பி3ச்சி தோரி ப்ர

ஸித்34தமரெந்தெ3னிஸித3ரு வ்யாக்2யான ரசிஸித3ரு ||59 

மத்வதீர்த்தர - ஸ்ரீமதாசார்யரின்; அனுக்ஞெ படெயுத - ஆணையைப் பெற்றவாறு; ஷுத்த தத்வகளன்னு - யதார்த்த தத்வங்களை; தோரலு - வெளிப்படுத்த; மத்வ பாஷ்யக்கெ - மத்வரின் பிரம்மஸூத்ர பாஷ்யத்திற்கு; தத்வபிரதீப டீகை - தத்வபிரதீப என்னும் டீகையை; ரசிஸிதரு - இயற்றினார். ஷுத்த ஸித்தாந்தகள - பவித்ரமான சித்தாந்தத்தின்; நியாயத பத்ததிகளனு - நியாய பத்ததிகளை; பிச்சி தோரி - நன்றாக விளக்கி; பிரஸித்ததம - தான் சர்வக்ஞர்; எந்து எனிஸிதரு - என்று அழைக்கப்பட்டார்; வ்யாக்யான - அனுவியாக்யான; ரசிஸிதரு - இயற்றினார். 

ஸ்ரீமதாசார்யரின் ஆணைக்கேற்ப, த்ரிவிக்ரம பண்டிதாசார்யர், தத்வபிரதீப கிரந்தத்தை இயற்றும் விஷயத்தை இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

ஸ்ரீமதாசார்யரின் ஆணையைப் பெற்றவாறு, யதார்த்த தத்வங்களை வெளிப்படுத்த, மத்வரின் பிரம்மஸூத்ர பாஷ்யத்திற்கு, தத்வபிரதீப என்னும் டீகையை (த்ரிவிக்ரம பண்டிதாசார்யர்) இயற்றினார். பவித்ரமான சித்தாந்தத்தின் நியாய பத்ததிகளை நன்றாக விளக்கி, தான் சர்வக்ஞர் என்று அழைக்கப்பட்டார். அனுவியாக்யான கிரந்தத்தை இயற்றினார். 

த்ரிவிக்ரம பண்டிதாசார்யர் தத்வ பிரதீப இயற்றியது மத்வ விஜய (15-72) ஸ்லோகத்திலும், ஆசார்யர் அனுவியாக்யான இயற்றியது மத்வ விஜய (15-88) ஸ்லோகத்திலும் விளக்கப்பட்டுள்ளது. 

குர்வாக்ஞா கௌரவாட்டீகாம் குர்வன் பாஷ்யஸ்ய துஷ்கராம் |

ஷடர்த்த விக்ரமார்யோsஸௌ மஹாசார்யமபாஷத || 15-72 

ஸ்ரீமத்வாசார்யர் தமது பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு வியாக்யானம் எழுதுவதற்கு ஆணையிட்டார். தங்கள் சித்தம் என்று கூறி த்ரிவிக்ரம பண்டிதர்தத்வப்ரதீபாஎன்னும் உத்தமமான வியாக்யானத்தை எழுதினார். 

க்ரந்தேப்ய எம்போsகாதேப்யோ யுக்தயோ நோ துருத்தரா: |

மனோ மாந்த்யாத் ததோ கிரந்தம் வ்ய்க்த தர்க ததிம் குரு || (15-87) 

அறிந்து கொள்ளப்படமுடியாத ஆழமான இந்த கிருதிகளில் வந்த யுக்திகளை, எடுத்து அறிவது எங்கள் மந்த மதிகளால் முடியவில்லை. ஆகையால், அந்த தர்க்கங்களை விடுவித்துக் காட்டும் ஒரு கிரந்தம் தங்களிடமிருந்து வரவேண்டும். (என்றார் த்ரிவிக்ரம பண்டிதாசார்யர்). 

இத்யர்த்திதோ வ்யதான்மத்வ: ஸோsனு வ்யாக்யாம் ஸதாம் ஸுதாம் |

துர்வாதி கர்வாத்ரி பவிம் மாயி த்வாந்த ரவித்யுதிம் ||15-88 

இப்படியாக கேட்டுக் கொண்டதால், ஸ்ரீமதாசார்யர் தமது அனுவியாக்யான கிரந்தத்தை இயற்றினார். மாயாவாதிகளின் அறியாமையை சுடும் சூரியனாக இருக்கிறது இந்த கிரந்தம். 

ஷோபன பட்டர், ஸ்ரீபத்மனாப தீர்த்தர் ஆகும் படலத்தை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

No comments:

Post a Comment