ஸ்லோகம் #61: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 61]
ஸ்மரணமாத்ரதி3 ஸகல து3ரிதவ தரிது3
ஷுப4க3ளனீவ சரிதெய
பரிபரிய வித4க3ளலி ப4குதரு வர்ணிஸுத்திரலு |
து3ருள வ்ருஷல நராதி4பனு ப3லு
க3ருவதி3ந்த3 தூ3ஷிஸலு வேத3வ
கரதலதி3 தோரித3ரு நிக3மப்ரமாண வசனவ ||61
ஸ்மரணமாத்ரதி - நினைத்த மாத்திரத்திலேயே; துரிதவ தரிது - கஷ்டங்களை நீக்கி; ஷுபகளனீவ - நலன்களைக் கொடுப்பதான; சரிதெய - சரித்திரத்தை; பகுதரு - பக்தர்கள்; பரிபரிய விதகளலி - பற்பல விதங்களில்; வர்ணிஸுத்திரலு - வர்ணித்துக் கொண்டிருந்தனர்; துருள - கெட்டவனான; வ்ருஷல - நீசனான; நராதிபனு - அரசன்; பலு கருவதிந்த - மிக்க கர்வத்துடன்; வேதவ - வேதங்களை; தூஷிஸலு - திட்டத் துவங்கினான்; நிகமபிரமாண வசனவ - அந்த வேத பிரமாண வசனத்தை; கரதலதி - தன் உள்ளங்கையில்; தோரிதரு - நிரூபித்துக் காட்டினார்.
மத்வ விஜய கடைசி சர்க்கமான பதினாறாம் சர்க்க விஷயங்களை இந்த ஸ்லோகத்திலிருந்து விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
நினைத்த மாத்திரத்திலேயே கஷ்டங்களை நீக்கி, நலன்களைக் கொடுப்பதான சரித்திரத்தை, பக்தர்கள் பற்பல விதங்களில் வர்ணித்துக் கொண்டிருந்தனர். நீசனான ஒரு அரசன், மிக்க கர்வத்துடன் வேதங்களை திட்டத் துவங்கினான். அந்த வேத பிரமாண வசனத்தை, ஸ்ரீமதாசார்யர் தன் உள்ளங்கையில் நிரூபித்துக் காட்டினார்.
மத்வ விஜய 16-1 ஸ்லோகத்தில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸாதுப்யோ மது மதனாங்க்ரி பக்தி பாக்ப்ய:
ஸ்ரௌதேப்யோ விதத மதேர்மஹானு பாவம் |
வேதாந்தம் ஸ்வயமிவ பந்த மோக்ஷ மூலம்
வ்யாசஷ்ட ஸ்புடமத கோsபி கோவிதோsத்ர || 16-1
ஒரு முறை பல அறிஞர்கள் கூடிய சபை ஒன்று நடந்தது. ஸ்ரீமதாசார்யரின் மேல் அதிக பக்திகொண்ட சிஷ்யர் ஒருவர், மோட்சத்திற்கான வழியான, ஆனந்ததீர்த்தரின் பரமோத்ஸவமான மகிமைகளை தெளிவாக விளக்கத் துவங்கினார்.
வேதங்களின் நிலையை நிரூபித்தல்
கோமத்யாஸ்தட நிகடேsச்ச கீர்த்தி சந்த்ரம்
விஷ்வக்ஞம் க்ஷிதி பதிரந்த்ய வர்ண ஜன்மா |
வித்வேஷ்டா ஸ்ருதி குண ஸாதகம் ஸ்ருதீனாம்
வாசாலோ வசனமுவாச வாக்மிவர்யம் || 16-2
கோமதி நதிதீரத்தில் ஒரு அரசன். அதிகமாகப் பேசக்கூடியவன். அங்கு பயணத்தில் வந்த ஸ்ரீமதாசார்யரைக் கண்டான். வேதங்களை நிரூபிக்கக்கூடிய, நிலவைப் போல ஒளிர்ந்த, அனைத்தையும் அறிந்த ஸ்ரீமதானந்த தீர்த்தரைக் கண்டு பேசத் துவங்கினான். ’வேத வாக்கியத்தின் பலன் கிடைக்கவில்லையெனில், வேத வாக்கியங்கள் மது குடித்தவன் பேசுவதைப் போலாகும்; அவை நிரூபிக்க முடியாதவை’ என்றான். ‘மந்திர சித்திக்கு தகுதி தேவை’ என்றார் ஸ்ரீமதாசார்யர்.
வேதோக்தம் பலமலமாப்யதேsதிகாராத்
இத்யக்தோsதனு மனஸாsம்பதத்த தூர்த்த: |
யோக்யத்வே ஸதி ந ஹி த்ருஷ்யதேsதிகாரி
நாத: ஸ்யாத் ஸ கர விஷாணவத் ஸதேதி || 16-4
ஆக்ஷேபம் தமஸஹமான உச்சமான:
ஸத்யோsஸௌ நிஜகர பல்லவத்வயேன |
ஆதாய வ்யதனுத பீஜமோஷதீனாம்
ஸூக்தேனாங்குர தல புஷ்ப பீஜ ஸ்ருஷ்டிம் ||16-5
இதை ஒப்புக்கொள்ளாத அந்த ராஜனுக்கு பாடம் புகட்ட வேண்டி, சர்வக்ஞரான ஆசார்யர், ஒரு தானியத்தின் விதையை தம் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ‘யா ஔதீ: பூர்வஜாதா தேவேப்ய:’ என்ற சூக்தத்தை கூறினார். என்ன ஆச்சரியம்! உடனே, அதிலிருந்து இலை, பூ ஆகியவை வளர்ந்ததைக் காட்டினார். வேத பிரமாண்யத்தை நேரடியாக நிரூபித்தார்.
மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தனது ஸ்ரீமத் சுமத்வ விஜய ப்ரமேய மாலிகா கிருதியில், மத்வ விஜய பதினாறாம் சர்க்கத்தின் சுருக்கத்தையும், இந்த சர்க்கத்தை படிப்பதால் வரும் பலனையும் இவ்வாறு கூறுகிறார்.
ஸம்பாதி3தஸ்வகார்யேsஸ்மின் ஸர்வக்ஞே ஸர்வதே3வதா: |
வவ்ருஷு: புஷ்பவாரம் கே2 ஸ்தி2தா: ஸ்துதிபரா முதா3 ||17||
சர்வக்ஞரான ஸ்ரீமதாசார்யர் தமது நோக்கமான, பகவந்தனின் சர்வோத்தமத்வம் முதலான காரியங்களை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, ஐதரேய உபநிஷத்தினை பாடம் சொல்லும் சமயத்தில், தேவதைகள் வானில் நின்று, ஸ்ரீமதாசார்யரின் குணகானங்களை செய்தவாறு, நந்தவனத்தின் புஷ்பங்களை அவர்மேல் தூவினர். அந்த புஷ்பக் குவியலில் ஸ்ரீமதாசார்யர் நம் கண்களிலிருந்து மறைந்தார்.
அபரோக்ஷ த்3ருஷேர்விக்4ன நாஷஸ் தத்3தா3பனம் ததா2
|
மோக்ஷதா3னமிதி ப்ரோக்தம் ப2லம் ஷோட3ஷகம் பரம் ||21||
பதினாறாம் சர்க்கம் : சாட்சாத் மோட்சத்தையே அடைதல்
ஸ்ரீமதாசார்யரின் மகிமைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment