ஸ்லோகம் #41: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 41]
பரிபரிய லீலெக3ளனீபரி சரிஸுதிரலானந்த3தீர்த்த2ரு
ப3ரனிக3ம ஸூத்ரேதிஹாஸக3ளரியலாத3ரதி3
|
நெரெதி3ருவ சிஷ்யர ஸமூஹக3ளரியுவந்த3தி3 போ4தி4ஸுத்திரெ
உரக3பதி ஸனகாதி3முனிக3ள ஸஹித கேளித3னு ||41
ஈபரி - இப்படியாக; பரிபரிய - விதம்விதமான; லீலெகளனு - லீலைகளை; ஆனந்ததீர்த்தரு - ஸ்ரீமதாசார்யர்; சரிஸுதிரலு - செய்து வந்தார்; பர நிகம - வேத; ஸூத்ர இதிஹாஸகளு - ஸூத்ர இதிகாசங்களை; அரியலு - அறிவதற்காக; ஆதரதி - பக்தி மரியாதையுடன்; நெரெதிருவ - நிறைந்திருக்கும்; சிஷ்யர - சிஷ்யர்களின்; ஸமூஹகளரியுவந்ததி - கூட்டம், அறியுமாறு; போதிஸுத்திரெ - பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில்; உரகபதி - சேஷதேவர்; ஸனகாதிமுனிகள ஸஹித - சனகாதி முனிவர்களுடன் சேர்ந்து; கேளிதனு - கேட்டார்.
ஸ்ரீமதாசார்யரின் பாடம் எடுக்கும் சிறப்பினை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
இப்படியாக விதம்விதமான லீலைகளை ஸ்ரீமதாசார்யர் செய்து வந்தார். வேத ஸூத்ர இதிகாசங்களை அறிவதற்காக, பக்தி மரியாதையுடன் நிறைந்திருக்கும் சிஷ்யர்களின் கூட்டம் அறியுமாறு, பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில், சேஷதேவர், ஸனகாதி முனிகளுடன் சேர்ந்து வந்து ஆசார்யரின் பாடம் கேட்டார்.
மத்வ விஜய பதினோறாம் சர்க்க விஷயங்கள் இங்கு துவங்குகின்றன.
ப்ரசுராந்தர ப்ரவசனம் பணிராட் உப ஷுஸ்ருவான் ஸ ஸனகாதி முனி: |
ககனேsல்ப த்ருஷ்டவபுரத்ர ஜனை: த்வரிதம் நிலீன ருசிராப பதம் ||11-1
அதி சித்ர தாம்னி நித தாம்னி ரதம் ஸ ஸஹஸ்ர மஸ்தகமனந்தமமும் |
முனயோsபி வாத்ய வினயாபரணா: வரமன்வயுஜ்ஜத ததாsர்த்தமிமம் ||11-2
ஒரு முறை ஸ்ரீமதாசார்யர், ஒரு வளர்பிறை நாளின் மாலையில், உடுப்பியில் பிரம்மசூத்ர பாஷ்யத்தின் சொற்பொழிவை செய்துகொண்டிருந்தார். சேஷதேவர், சனகாதி முனிவர்களுடன் அங்கு வந்து, ஆசார்யரின் பாஷ்யத்தைக் கேட்டு பின் தம்மிடத்திற்குத் திரும்பினார். ஆகாயத்தில் திடீரென்று தோன்று ஒரு ஒளியைக் கண்டு வியப்படைந்த சிஷ்யர்களுக்கு, அது சேஷதேவரின் ஒளி என்று ஆசார்யர் வர்ணித்தார். இவர்கள் அனைவரும் வாயுதேவரின் சேவகர் அல்லவா?.
ஸ்ரீமத் ஸுமத்வ விஜய ப்ரமேய மாலிகா என்னும் தனது கிருதியில் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், மத்வ விஜயத்தின் பதினோறாம் சர்க்கத்தின் சுருக்கத்தையும், இந்த சர்க்கத்தை படிப்பதால் வரும் பயனையும் இவ்வாறு சொல்கிறார்.
வியாக்2யான ஸமயே ப்ராப்தம் ப2ணிராஜம் ஸுபூர்ணதீ4:
|
சிஷ்யேப்4யோ த3ர்ஷயாமாஸ ஸ தத்ப2லமதா2ப்3ரவீத் ||12||
ஸ்ரீமதாசார்யர் ஸூத்ர பாஷ்ய பாடத்தை சொல்லும்போது சனகாதிகளுடன் வந்த சேஷதேவரை, சிஷ்யர்களுக்குக் காட்டினார். சனகாதிகள், சேஷதேவரிடம், பாஷ்யத்தைக் கேட்டால் என்ன பலன்? என்று கேட்டனர். பாஷ்யத்தைக் கேட்டால், மோட்சமே பலன் என்று சொல்லி, மோட்சத்தில் இருக்கும் சுக விசேஷத்தை விளக்கியவாறு, ஆசார்யரின் பாஷ்யத்தை மனோவாக் காயங்களால் திரும்பத்திரும்ப மனனம் செய்தார். இத்தகைய சிறந்த, ஸ்வரூபானந்த சுகமான மோட்சத்தை பெறுகின்றனர் என்னும் பலனை விளக்கினார்.
அபேக்ஷிதாகி2லாவாப்திர் மோக்ஷ சாஸ்த்ர ஸுலோலதா |
விக்4னனாஷ: ஸாத4னானாம் ஸ்வீயமாஹாத்ம்ய போ3த4னம் ||20||
பதினொன்றாம் சர்க்கம் : மோட்சத்திற்குக் காரணமான சாஸ்திரத்தில் சுலபமான விருப்பம்
மத்வ பிரவசனத்தை கேட்கும் பலனை சேஷதேவர் விவரிக்கும் அழகினை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment