ஸ்லோகம் #53: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 53]
ருணியு நானிரெ நிம்ம கருணகெ மிணுகு1திருவரு க்3ரந்தசோரரு
கெணகலாரரு முந்தெ3
நிம்மய ஸஹசரரனெந்தூ3 |
க3ணிஸலாக3து3 குந்து3கொரதெய த்ருணகெ ஸமரீஜனரு நரபதி
வினயத3லி பே3ட3லு த்ரிவிக்ரமனனுஜக3த3நித்த ||53
ருணியு நானிரெ - நான் என்றைக்கும் கடன்பட்டிருக்கிறேன்; நிம்ம கருணகெ - உங்களின் கருணையைப் பெற்றவர்கள்; மிணுகுதிருவரு - ஜொலிக்கிறார்கள்; க்ரந்தசோரரு - மாயாவாதிகள்; முந்தெ - இனிமேல்; நிம்மய - உங்களின்; ஸஹசரரனு - பின்தொடர்பவர்களை; எந்தூ - என்றும்; கெணகலாரரு - எதிர்க்க மாட்டார்கள்; குந்துகொரதெய - குற்றம் குறைகளை; கணிஸலாகது - பார்க்க முடியாது; ஈ ஜனரு - இத்தகையவர்கள்; த்ருணகெ ஸமரு - புல்லிற்கு சமமானவர்கள்; நரபதி - அரசன்; வினயதலி பேடலு - பக்தி மரியாதையுடன் கேட்க; த்ரிவிக்ரமன அனுஜகெ - த்ரிவிக்ரம பண்டிதாசார்யரின் சகோதரரான சங்கர பண்டிதரிடம்; அத இத்த - அதனை (கிரந்தங்களை) மறுபடி கொடுத்தார்.
அரசன் ஜயசிம்ம பூபாலன், ஸ்ரீமதாசார்யரிடம் வேண்டிக் கொள்வதை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
நான் என்றைக்கும் கடன்பட்டிருக்கிறேன். உங்களின் கருணையைப் பெற்றவர்கள் ஜொலிக்கிறார்கள். மாயாவாதிகள் இனிமேல் உங்களை பின்தொடர்பவர்களை என்றும் எதிர்க்க மாட்டார்கள். குற்றம் குறைகளை இனிமேல் பார்க்க முடியாது. இத்தகையவர்கள் புல்லிற்கு சமானமானவர்கள். அரசன் இவ்வாறு பக்தி மரியாதையுடன் கேட்க, ஆசார்யர், அந்த கிரந்தங்களை மறுபடி த்ரிவிக்ரம பண்டிதாசார்யரின் சகோதரரான சங்கர பண்டிதரிடமே கொடுத்தார்.
மத்வ விஜய 14ம் சர்க்கத்தின் முதல் இரு ஸ்லோகங்களின் ஸாரமே இந்த ஸ்லோகம்.
பரிவ்ருட கனஸங்கே ராஜஸிம்ஹோர்ஜ ஷக்த்யா
த்யஜதி மலின பாவம் நீரஸத்வான்னிகாமம் |
ஸ்புடமுதயதி தேஜஸ்வ்யுஜ்வலே மத்வ பானௌ
ஸுஜன ஜலஜ காந்த்யை விஸ்வமாஸீன்மனோக்ஞம் ||14-1
க்ருதமபக்ருதமார்யை: க்ஷம்யதாம் க்ஷாந்தி பூஷை:
இதி ம்ருது வததாம் ச ப்ரார்த்தனாபி: ப்ரபூணாம் |
அப ஹ்ருதமபரேஷாம் மந்த்ரதோ க்ரந்த ஜாதம்
தஷ ஹ்ருதய நியோகாதக்ரஹீச்சங்கரார்ய: || 14-2
‘பூஜ்யரே! அபாரமான கருணையைக் கொண்டவரே! இவர்களை மன்னித்து விடுங்கள்’ என்று ஜயசிம்ம பூபால அரசன் கேட்டுக்கொண்டான். பத்மதீர்த்தன் களவாடிச் சென்ற கிரந்தங்களை ஜயசிம்மன் மறுபடி கொண்டு வந்து ஒப்படைத்தான். ஆசார்யர் அதனை மறுபடி சங்கர பண்டிதரிடம் கொடுத்து பாதுகாக்கும்படி சொன்னார். கிரந்தங்களை திருடியவரை பூபாலன் மற்றும் ஆசார்யர் மன்னித்தனர்.
மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தனது ஸ்ரீமத் சுமத்வ விஜய ப்ரமேய மாலிகா கிருதியில், மத்வ விஜய பதினான்காம் சர்க்கத்தின் சுருக்கத்தையும், இந்த சர்க்கத்தை படிப்பதால் வரும் பலனையும் இவ்வாறு கூறுகிறார்.
ஸதா3 ஸ்ரீஹரிபாதா3ப்3ஜ க3தமானஸ ஸம்ப்4ரம: |
ஸ்னானவ்யாக்2யா போ4ஜனாதி3 கரோத்யனுதி3னம் ஸுதீ4: ||15||
ஆசார்யர் எப்போதும், நிரந்தரமாக ஸ்ரீஹரியின் பாத கமலங்களிலேயே பக்தி கொண்டிருப்பதால், தினமும் அருணோதய காலத்திலிருந்து, இரவு வரை, விதிப்படி செய்துவரும் ஸ்னானம், பூஜை, பாட, பிரவசன, போஜன, தியான - ஆகிய செயல்களை பக்தி சிரத்தையுடன் செய்து கொண்டிருந்தார்.
அபரோக்ஷ த்3ருஷேர்விக்4ன நாஷஸ் தத்3தா3பனம் ததா2
|
மோக்ஷதா3னமிதி ப்ரோக்தம் ப2லம் ஷோட3ஷகம் பரம் ||21||
பதினான்காம் சர்க்கம் : அபரோக்ஷ ஞானத்தில் வரும் தடைகள் விலகுதல்
ஸ்ரீமதாசார்யரின் தினப்படி நடவடிக்கைகளை அடுத்த ஸ்லோகத்திலிருந்து விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment