ஸ்லோகம் #65: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 65]
ப்ரசுரமதி1 விஜயக3ள ஸாரவ ரசிஸிதெ3ன்னய பரம கு3ருக3ளு
வசனஷுத்3தி4யனித்து நுடி3ஸித3 தெரதி3 நுடி3தி3ஹெனு |
ஷுசிமனதி3 ஸுஸ்வரதி3 பாட3லு ப்ரசுரவாக3லி
ஷாந்திஸுக2க3ளு
பு4ஜபிடி3து3 மேலெத்தி ஸலஹுவ கு3ருவர ப்ரஸன்ன || 65
ப்ரசுரமதி - ஸ்ரீமதாசார்யரின்; விஜயகள ஸாரவ - விஜயத்தின் ஸாரத்தை; ரசிஸிதெ - இயற்றினேன்; என்னய பரம குருகளு - என்னுடைய பரம குருகள்; வசனஷுத்தியனித்து - எனக்கு வசன ஷுத்தியைக் கொடுத்து; நுடிஸித தெரதி - இயற்ற வைத்ததைப் போல; நுடிதிஹெனு - இயற்றினேன்; ஷுசிமனதி - சுத்தமான மனதுடன்; ஸுஸ்வரதி - நல்ல ஸ்வரத்துடன்; பாடலு - இதனை பாடினால்; ஷாந்திஸுககளு - அமைதி, சுகங்கள்; ப்ரசுரவாகலி - பரவட்டும்; புஜபிடிது - தோள்களைப் பிடித்து; மேலெத்தி ஸலஹுவ - மேல்தூக்கி காப்பான்; குருவர - மிகச்சிறந்தவனான; பிரஸன்ன - ஸ்ரீபிரஸன்னனான ஸ்ரீஹரி.
ஸ்ரீபிரஸன்ன என்னும் அங்கிதத்தைக் கொண்டவரான ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர், இந்த கிருதியை இத்துடன் மங்களம் செய்கிறார்.
ஸ்ரீமதாசார்யரின் விஜயத்தின் ஸாரத்தை, என் பரமகுருகள் எனக்கு வசன ஷுத்தியைக் கொடுத்து, இயற்ற வைத்ததைப் போல இயற்றினேன். சுத்தமான மனதுடன் நல்ல ஸ்வரத்துடன் இதனை பாடினால், அமைதி சுகங்கள் பரவட்டும் (பரவும்). தோள்களைப் பிடித்து, மேல்தூக்கி காப்பான், சர்வோத்தமனான ஸ்ரீபிரஸன்னனான ஸ்ரீஹரி.
***
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment