Monday, May 2, 2022

அறிமுகப் பதிவு-1: ஹரிதாஸ தர்பண

அறிமுகப் பதிவு-1: ஹரிதாஸ தர்பண

கிருதி: ஹரிதாஸ தர்பண

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

குரு: ஸ்ரீதந்தெமுத்து மோகனதாஸர்

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்


ஹரிதாஸ ஸாகித்யத்தைப் பற்றி ஒரு முழுமையான பார்வையை இந்த கிருதி கொடுக்கிறது. பாமினி ஷட்பதி நுடியில் 137 பத்யங்களைக் கொண்ட இந்த கிருதியை ஸ்ரீதாஸர் 1938ம் ஆண்டில் இயற்றி, அவரது குருவிடம் சமர்ப்பித்தார். 

கன்னடத்தில் இது வரை இந்த கிருதிக்கு விளக்கப் புத்தகம் என்று வரவில்லை. எனக்கு இதனை பாடம் சொல்லிக் கொடுத்த எனது அங்கிதோபதேஸ குருவான ஸ்ரீஜாம்பவதிப்ரிய விட்டல தாஸருக்கு, சாஷ்டாங்கமாக நமஸ்காரங்களை செய்து கொண்டு, ஹரிவாயு குருகளின் ஆசியுடன் இன்றிலிருந்து ஒரு நாளைக்கு ஒவ்வொரு பத்யமாக இதன் விளக்கத்தை தமிழில் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 

* துவக்கத்தில், 3 பதிவுகளில், கிருதிகாரரின் வாழ்க்கை வரலாறு / ஸாதனைகள்; 

* பின், ஸ்ரீதிருமலேஷ ஹரிவிட்டல தாஸர் இதற்கு எழுதிய பல-ஸ்ருதி (3 பத்யங்கள்);

* பின், ஹரிதாஸ தர்பண 137 நுடிகள்

என வரிசையாக வர வேண்டும் என்று சங்கல்பம். 

இவை நம் ப்ளாக்கில் வெளிவந்தபின், ஸ்ரீதாஸரின் அருளால் புத்தகமாகவும் வரலாம். 

இந்த பத்யங்களுக்கு ஆதாரமாக: ஹரிகதாம்ருதஸார பத்யங்கள், விஜயதாஸரின் ஸுளாதி பத்யங்கள், ஹரிதாஸர்களின் கிருதிகள் என தக்க விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

ஹரிபக்தர்கள் அனைவரும் இதனை தொடர்ந்து படித்து, நம் ஹரிதாஸ ஸாகித்யத்தின் சிறப்புகளைப் பற்றி அறிய வேண்டும் என்பது நம் விருப்பம். 

நன்றி. ஹரே ஸ்ரீனிவாஸா

சத்ய நாராயணன்

8904458276

No comments:

Post a Comment