[பத்யம் #4] - ஹரிதாஸ த3ர்பண
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #4]
பண்டி3தரு யதிவர்யரெல்லரு
ஹிண்டு3ஷாஸ்த்ர ரஹஸ்யதத்வவ
தொண்ட3ரிகெ3 போ4திஸலு ப்ராக்ருதவன்னே ப3ளிஸுவரு |
கண்ட3ரித3ரொளு ஞான முக்2ய வி
தண்ட3 வாத3வு வ்யர்த்த2 ஹட கை
கொண்டு3 ப3ளலுவுத3ல்ல ஸம்ஸ்க்ருதவெம்ப3 ஸட3க3ரதி3 ||4
பண்டிதரு - பண்டிதர்கள்; யதிவர்யரெல்லரு - யதிகள் அனைவரும்; ஹிண்டுஷாஸ்த்ர - சாஸ்திர கூட்டங்களின்; ரஹஸ்ய தத்வவ - ரகசிய தத்வங்களை; தொண்டரிகெ போதிஸலு - (ஹரி பக்தர்களுக்கு) தங்கள் சிஷ்யர்களுக்கு போதிப்பதற்கு; ப்ராக்ருதவன்னே பளிஸுவரு - பேசுமொழியையே பயன்படுத்துகின்றனர்; இதரொளு - இதில் (பேசுமொழியில்); ஞான முக்ய கண்டரு - ஞானமே (ஞானத்தை போதிப்பதே) முக்கியம் என்று கண்டனர்; ஹட கைகொண்டு - பிடிவாதமாக; ஸம்ஸ்க்ருதவெம்ப - ஸம்ஸ்க்ருதத்தை; ஸடகரதி - உற்சாகமாக (சொல்கிறேன் என்று); பளலுவுதல்ல - அவர்கள் கஷ்டப்படுவது இல்லை. விதண்டவாதவு வ்யர்த்த - (இத்தகைய) தேவையற்ற வாதம் வீணே.
பேசுமொழியின் (கன்னடத்தின்) சிறப்பு மற்றும், அதன் மூலமாக சொல்லப்படும் விஷயங்களின் ஸாரமே முக்கியம் என்பதாக இந்த பத்தியில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாசர்.
பண்டிதர்கள், யதிகள் என அனைவரும், சாஸ்திரங்களை, அவற்றில் உள்ள ரகசிய தத்வங்களை, ஹரி பக்தர்களுக்கு / தங்கள் சிஷ்யர்களுக்கு போதிப்பதற்கு, பேசுமொழியையே பயன்படுத்துகின்றனர். இப்படியாக, இதில் மொழி முக்கியம் அல்ல, சொல்லப்படும் விஷயமே (ஞானம்) முக்கியம் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். மாறாக, அனைவரிடமும் நான் சம்ஸ்கிருதத்தில்தான் விஷயங்களை விளக்குவேன் என்று அவர்கள் பிடிவாதமாக இருப்பதில்லை. அப்படி பிடிவாதம் செய்வதும் வீணே.
ஸ்ரீலட்சுமி நாராயண முனிகள் அவரது பூஜையை மிகவும் விஸ்தாரமாக செய்து முடித்து பின்னர் கன்னடத்தில் கீர்த்தனைகளை இயற்றி, அவற்றை பகவந்தனுக்கு சமர்ப்பித்து பாடினார். இந்த வேலையானது அன்றைய காலகட்டத்திற்கு பெரிய புரட்சி என்றே சொல்லலாம். சன்யாசியானவர், காலில் கெஜ்ஜெ (சலங்கை) கட்டிக் கொண்டு, தம்பூரி மீட்டியவாறு, சேவாரூபமாக கீர்த்தனைகளை ஆடிப்பாடியவாறு இருந்தார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தூய்மையான இந்த ஹரிபக்தியின் வெளிப்பாடே, கன்னட ஹரிதாச சாகித்யம் நன்கு வளர்வதற்கு முதற்படியாயிற்று எனலாம்.
ஸ்ரீவாதிராஜர், தத்வஸார கிரந்தத்தின் பல்லவியில் இந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார்.
இது3 புண்யகதெ2 லோகக்கிது3 முகுதிய பத2
இத3 கேளுவவனெ க்ருதார்த்த2 || பல்லவி
இந்த கிரந்தத்தின் விஷயம், நித்யஸுக ஸாதனத்தின் நிரூபணம் ஆகும். இந்த சிந்தனை, அஞ்ஞான நிலையில் இருக்கும் ஸஜ்ஜனர்களுக்கு மோட்ச மார்க்கத்தைக் காட்ட வல்லது. இதனை கேட்டு, நிஷ்டையைப் பெறுபவன், தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டவன் ஆகிறான்.
***
No comments:
Post a Comment