[பத்யம் #9] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #9]
த்ரிவித4 ஜீவர ஸ்ருஜிஸெ நரஹரி
க1வித3 த்ரயிகு3ணப3த்3த4ராகு3த
ப4வத3 ப3ந்த4ன காலமஹிமெகெ3 தாவு ஒளகா3கி3 |
தவகதி3ந்த3லி யோக்3யஜீவரு
ப4வணெயலி மிகெ3 நொந்து3 ஸ்ரீ ஹரி
அவதரிஸி கலியுக3தி3 தமகி3ன்னெந்து1 க3தி எனுத ||9
நரஹரி - ஸ்ரீஹரி; த்ரிவித ஜீவர ஸ்ருஜிஸெ - மூன்று வித ஜீவர்களை; ஸ்ருஜிஸெ - படைத்து; கவித - அருளினான்; த்ரயிகுண பத்தராகுத - இந்த மூன்று வித குணங்களுக்கு கட்டுப்பட்டு; காலமஹிமெகெ - காலக்கிரமத்தில்; பவத பந்தன - சம்சார சுழற்சியில்; தாவு ஒளகாகி - தாங்கள் சிக்கிக்கொண்டு; தவகதிந்தலி - மிகுந்த கவலையுடன்; பவணெயலி - தங்கள் வாழ்க்கையில் (இருக்க); யோக்யஜீவரு - இவர்களில் யோக்ய ஜீவர்கள்; மிகெ நொந்து - மிகவும் நொந்து; கலியுகதி - இந்த கலியுகத்தில்; ஸ்ரீஹரி அவதரிஸி - ஸ்ரீஹரி (எப்போது) அவதரித்து; தமகின்னெந்து கதி எனுத - தமக்கு என்ன கதி என்றவாறு (அடுத்த பத்யத்தில் தொடர்கிறது).
இந்த மற்றும் அடுத்த ஸ்லோகங்களில், ஸ்ரீமன் மத்வாசார்யரின் அவதாரம் நடந்த காலகட்டத்தில், இருந்த ஆன்மீக மக்களின் நிலையை சொல்கிறார் ஸ்ரீதாசர்.
ஸாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று வித ஜீவர்களை ஸ்ரீஹரி படைத்து அருளினான். இவர்கள் அவரவர்களின் குணங்களுக்கேற்ப, சம்சார சுழற்சியில் சிக்கிக் கொண்டு, மிகுந்த கவலையில் வாடிவந்தனர். இவர்களில் யோக்ய ஜீவர்கள், மிகவும் அதிகமாக நொந்து, இந்த கலியுகத்தில் ஸ்ரீஹரி எப்போது அவதரிப்பான்?. நமக்கு இதிலிருந்து மீள என்ன கதி? என்று சிந்திக்கத் துவங்கினர்.
ஸ்ரீமத்வ விஜயத்தில் இந்த சந்தர்ப்பம் இவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது.
விக்ஞான பானுமதி கால பலேன லீனே
துர்பாஷ்ய சந்தமஸ சந்ததிதோ ஜனேந்தே |
மார்காத்சதாம் ஸ்கலதி கின்ன ஹ்ருதோ முகுந்தம்
தேவாஸ்சதுர்முக முகா: ஷரணம் ப்ரஜக்மு: || (2-1)
உலகத்தில் சஜ்ஜனர்களின் ஞானம் என்னும் சூரியன், கலியின் பிரபாவத்தாலும், துர்பாஷ்யங்களின் துர்போதனைகளாலும் அஸ்தமனம் ஆகி, அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்து, அவர்கள் தர்மத்தின் வழியிலிருந்து பிறழத் தொடங்கினர். சுக்ஞானம் பிறந்து, அவர்கள் தர்மத்தின் வழியில் திரும்பவேண்டும் என்று பிரம்மாதி தேவதைகள் முகுந்தனை வேண்டினர்.
இதையே ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர், தனது ‘மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ’ கிரந்தத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார். நிஜமதிய தி3னகரனு முளுக3லு - உண்மையான அறிவு என்னும் சூரியன் மூழ்கத் தொடங்கியது.
ஸ்ரீஜகன்னாததாசரும், ஸ்ரீமத்வர் அவதாரம் நடப்பதற்கு முன் இருந்த சூழ்நிலையை ஹரிகதாம்ருதஸாரத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
க்ஷிதியொளகெ மணிமந்தமொதலா
ததிதுராத்மரு ஒந்ததிக விம்
ஷதி குபாஷ்யவ ரசிஸெ நடுமனெயெம்ப பிராம்மணன || (1-8).
இந்த பத்யத்தின் கருத்து, அடுத்த பத்யத்திலும் தொடர்கிறது.
****
No comments:
Post a Comment