[பத்யம் #23] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #23]
மத்தெ இதரொளகு3ண்டு கௌ3ப்யவு
சித்தவிடு3தலி கேளு நீ ஹரி
சித்த ஸெலெ ஸம்ஸ்காரப2லதி3ம் ஹலவு ஷ்ருதிததிய |
ஸத்யதி3ம் பாலிஸுத சர்யவ
ஆர்த்தி2யிந்த3லி தோரிதா3தொ3டெ3
பித்ருஹிரியர கு3ருவினந்த3தி3 ஸ்வீகரிஸி திளிதத்வ ||23
மத்தெ - மேலும்; இதரொளகுண்டு - இதில் இருக்கிறது; கௌப்யவு - ரகசியம்; சித்தவிடுதலி - மிகவும் கவனத்துடன்; நீ கேளு - நீ கேட்பாயாக; ஹரி சித்த ஸெலெ - ஸ்ரீஹரியின் சித்தத்தின்படி; ஹலவு ஷ்ருதிததிய - பல்வேறு வேத, புராணங்களின்படியான; ஸம்ஸ்காரபலதிம் - தக்க சம்ஸ்காரங்களை; ஸத்யதிம் பாலிஸுத - சரியாக விதிப்படி பின்பற்றியவாறு; ஆர்த்தியிந்தலி - மிகவும் சிறப்பாக; சர்யவ தோரிதாதொடெ - செயல்களை செய்து காட்டுபவரிடம்; பித்ருஹிரியர - (அவர்) தந்தையாகவோ, வேறு பெரியவராகவோ இருக்கலாம். அவரை, குருவினந்ததி - குருவாக; ஸ்வீகரிஸி - ஏற்றுக் கொண்டு; திளிதத்வ - தத்வங்களை அறி.
ஒரு தக்க குருவின் லட்சணங்களை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீதாஸர்.
குருவின் தகுதியைப் பற்றி சொல்கிறேன், கேளுங்கள் என்றவாறு ஸ்ரீதாஸர் இவ்வாறு கூறுகிறார். ஸ்ரீஹரியின் சித்தத்தின்படி, பல்வேறு வேத புராணங்களின்படியான தக்க சம்ஸ்காரங்களை, சரியாக விதிப்படி பின்பற்றியவாறு, மிகவும் சிறப்பாக தன் செயல்களை (கர்மானுஷ்டானங்களை) செய்து காட்டுபவரை, அவர் தந்தையாகவோ, வேறு பெரியவராகவோ இருக்கலாம் - அவரை குருவாக ஏற்றுக்கொண்டு, அவரிடமிருந்து தத்வங்களை அறிவாயாக.
இங்கு ஸ்ரீபுரந்தரதாஸர், ஸ்ரீவ்யாஸராயரை குருவாக ஏற்பதற்காக அவரை சந்திக்கச் சென்றிருப்பதால், அவரைப் பற்றி சிறிது பார்ப்போம்.
காம க்ரோதா லோப மோஹ காம
த மத்ஸரவெம்ப மஹா கள்ள பண்டர முரிதோடிஸி
நேமா மந்த்ர தந்த்ரகள படெது வேதாந்த ஷாஸ்த்ர
ஸாம்ராஜ்ய ஸம்பாதிஸித அஸஹாய ஸூரா ||
என்று ஸ்ரீவாதிராஜர், ஸ்ரீவ்யாஸராயரைப் புகழ்கிறார்.
இப்படிப்பட்ட குருவினை அடைந்த ஸ்ரீபுரந்தரதாஸரைப் போல, நாமும் ஒரு தக்க குருவைத் தேடி அவரிடம் செல்ல வேண்டும் என்பதையே ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர் வலியுறுத்துகிறார்.
***
அற்புதமான விளக்கம். வந்தனங்கள்
ReplyDelete