[பத்யம் #13] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #13]
பேளலொஷவே கலிய பா3தெ4யு
லோலராத3ரு கெலரு லௌகிக
ஜாலத3லி பாண்டி3த்யமத3த3லி கெலரு மெய்மரெது3 |
தாளுதஹம்மதி ஷீலராத3ரு
கீளுக3தியனு மனகெ1 தாரதெ3
மூலதத்வவனொகெ3து3 பிvஸட1ரு காலவஷராகி3 ||13
கலிய பாதெயு - கலியின் தொந்தரவை; பேளலொஷவெ - விளக்க முடியுமா?; கெலரு - சிலர்; லௌகிக ஜாலதலி - லௌகிக விஷயங்களில்; லோலராதரு - மயங்கி ஈடுபட்டனர்; கெலரு - வேறு சிலர்; பாண்டித்ய மததலி - தங்களின் பாண்டித்யத்தின் கர்வத்தில்; மெய்மரெது - மெய் மறந்து; தாளுத - இருந்தவாறு; அஹம்மதி ஷீலராதரு - நான் சொல்வதே சரி என்று சொல்லத் துவங்கினர்; கீளுகதியனு மனகெ தாரதெ - தாங்கள் செல்லப் போகும் நரகத்தைப் பற்றி எண்ணாமல்; காலவஷராகி - கலி காலத்திற்கு வசப்பட்டு; மூலதத்வனொகெது பிஸடரு - மூலதத்வத்தை புறக்கணித்து தள்ளினர்.
ஸ்ரீமதாசார்யரின் ஸர்வமூல கிரந்தங்கள் மற்றும் பிற யதிகளின் பாஷ்ய / டீகா / டிப்பணிகள் என இவை அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால், சம்ஸ்கிருதம் அறியாத பாமர மக்கள், இந்த தத்வ விஷயங்களிலிருந்து விலகிச் செல்லத் துவங்கினர். இதனால் மத்வ ஸித்தாந்த தத்வ ரகசியங்கள் ஒரு சிலரிடம் மட்டுமே (பண்டிதர்களிடம் மட்டுமே) தங்கியிருந்தது. இதையே இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதாஸர்.
கலியின் தொந்தரவை யாராலும் விளக்க முடியுமா? சிலர் லௌகிக விஷயங்களில் ஈடுபட்டு, மயங்கியிருந்தனர். வேறு சிலர், தங்களின் பாண்டித்யத்தின் கர்வத்தில் மெய் மறந்து இருந்தவாறு, நான் சொல்வதே சரி என்று இருந்தனர். தாங்கள் செல்லப் போகும் நரகத்தைப் பற்றி எண்ணாமல், கலி காலத்திற்கு வசப்பட்டு, மூல தத்வத்தை புறக்கணித்து தள்ளினர்.
***
No comments:
Post a Comment