Sunday, May 15, 2022

[பத்யம் #8] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #8] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #8]

4னமஹிம தா நிந்து ப்ரேரிஸி

அனுனயதொ3ளீக்ருதிய 3ரெஸிரெ

எணிஸலாக3து3 இத3கெ யதிக3 ப்ராஸதோ3ஷக3 |

வினியதி3ம் பிvன்னயிஸி பே3டு3வெ

கு3ணயுதரு ஸம்பன்ன 4க்தரு

ஜனனி அணுக3 நுடி3கெ3 ஸுகி2ஸுவ தெரதி3 ஆலிபுது3 ||8 

கனமஹிம - சர்வோத்தமனான ஸ்ரீஹரி; தா நிந்து ப்ரேரிஸி - தானே இருந்து தீர்மானித்து; அனுனயதொளு - நடத்தியதால்; க்ருதிய பரெஸிரெ - இந்த கிருதியை எழுதியிருக்கிறேன்; யதிகண - யதிகள், கற்றரிந்தவர்கள்; இதகே - இந்த கிருதியில்; ப்ராஸதோஷகள - எதுகை மோனை தோஷங்களை; எணிஸலாகது - கவனத்தில் கொள்ளக் கூடாது; வினினதிம் - பக்தி மரியாதையுடன்; பின்னயிஸி பேடுவெ - வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்; குணயுதரு - நற்குணங்களைக் கொண்டவர்கள்; ஸம்பன்ன பக்தரு - சிறந்த பக்தர்கள்; ஜனனி - தாயானவள்; அணுகன நுடிகெ - தன் குழந்தையின் மழலைப் பேச்சுக்கு; ஸுகிஸுவ தெரதி - மகிழ்வதைப் போல; ஆலிபுது - (இந்த கிருதிக்கும்) ஆதரவு அளிக்கட்டும். 

இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட பேசுமொழியில், இத்தகைய கிருதியை இயற்றவிருக்கிறேன். இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்கட்டும் என்று இந்த பத்யத்தில் வேண்டிக் கொள்கிறார் ஸ்ரீதாசர். 

ஸர்வோத்தமனான ஸ்ரீஹரி, எனக்குள் தானே நின்று நடத்தியதால், இந்த கிருதியை எழுதியிருக்கிறேன். யதிகள், கற்றறிந்த ஞானிகள் ஆகியோர் இந்த கிருதியில் ஏதேனும் எதுகை மோனை தோஷங்கள் இருந்தால், அவற்றை கவனத்தில் கொள்ளக்கூடாது என பக்தி மரியாதையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தாயானவள், தன் குழந்தையின் மழலைப் பேச்சுக்கு மகிழ்வதைப் போல, நற்குணங்களைக் கொண்டவர்கள், சிறந்த பக்தர்கள் ஆகியோர், இந்த கிருதிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுக்கட்டும். 

இதே உதாரணத்தை ஸ்ரீஜகன்னாததாசர், ஹரிகதாம்ருதசாரத்தில் பயன்படுத்தியிருப்பதை பார்த்திருக்கிறோம். 

பாலகன கலபாஷெ ஜனனியு

கேளி சுகபடுவந்தெ லகுமி

லோல பகுதரு மாடுதிஹ சம்ஸ்துதிகெ ஹிக்குவனு | 

குழந்தையின் மழலைச் சொற்களை பெற்ற தாய் கேட்டு மகிழ்வதைப் போல, பக்தர்கள் செய்யும் ஸ்தோத்திரத்திற்கு ஸ்ரீஹரி மகிழ்கிறான். 

அஸுபதி ஸ்ரீரமணகெ3 ஸம

ர்ப்பிஸிதெ3 ஸஜ்ஜனரித3னு ஸந்தோ

ஷிஸலி தோ3ஷக3ளெணிஸத3லெ காருண்யத3லி நித்ய ||

(ப்ருஹத் தாரதம்ய ஸந்தி #54) 

ப்ராணபதியான ஸ்ரீமன் நாராயணனுக்கு (இந்த கிரந்தமான ஹரிகதாம்ருதஸாரத்தை) சமர்ப்பித்தேன். அறிஞர்கள், இதில் உள்ள தோஷங்களை கவனிக்காமல், கருணையுடன் தினம்தோறும் இதைப் பார்த்து மகிழட்டும். 

ஸ்ரீஜகன்னாத தாசர் கூறியிருப்பதைப் போலவே, நம் ஸ்ரீதாசரும் -- அப்படிப்பட்ட கருணாளுவான ஸ்ரீஹரியே எனக்குள் நின்று இந்த கிருதியை எழுதவைத்திருக்கிறான். ஆகவே, கற்றறிந்தவர்கள் இவற்றில் எதுகை, மோனை போன்ற தோஷங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை கவனித்தில் கொள்ளாமல், இதில் உள்ள விஷயத்தை மட்டும் படித்து அறிந்து கொள்ள வேண்டும் - என்று பிரார்த்திக்கிறார்.

***

No comments:

Post a Comment