Sunday, May 29, 2022

[பத்யம் #22] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #22] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #22]

கேளுவரு குத்ஸித1ரு கெலவரு

லாலிஸித3 பிதனெமகெ3 தா கு3ரு

மூலகு3ருமேண்மருதனிரெ மத்தொப்33 குருவேகெ |

பேள்வுதே3னித3கின்னு ஹொலஸின

பீ3ளுதேvஹகெ காரணெனிஸுவ

பேள ஜனகனு தே3வவித்4யெய கு3ருவு பேள்வந்தெ ||22 

குத்ஸிதரு கெலவரு - மந்த மதியினர் சிலர்; கேளுவரு - கேட்பார்கள்; லாலிஸித - நம்மை வளர்ந்த; பிதனெமகெ தா - தந்தையே எமக்கு; குரு - குருவாக இருக்கிறார்; மூலகுரு - மூலகுருவாக; மேண்மருதனிரெ - உத்தமனான மருதர் (வாயுதேவர்) இருக்கையில்; மத்தொப்ப - இன்னொரு; குருவேகெ - குரு எதற்கு?; ஹொலஸின பீளுதேஹகெ - மலங்களால் நிறைந்த இந்த தேகத்திற்கு; காரணெனிஸுவ - காரணமான; ஜனகனு - தந்தையானவர்; குருவு பேள்வந்தெ - ஒரு தக்க குரு சொல்வதைப் போல; பேள - சொல்ல மாட்டார்; பேள்வுதேனிதகின்னு - இதைவிட சொல்வதற்கு என்ன இருக்கிறது?. 

நம்மைப் பெற்ற தந்தைக்கு, குருவுக்குமான வேறுபாட்டினை இங்கு விளக்குகிறார் ஸ்ரீதாஸர். 

(காயத்ரி மந்திரம்) உபதேசம் செய்த நம் தந்தையே நமக்கு குருவாக இருக்கிறார். அனைத்திற்கும் மேல், மூலகுருவாக ஸ்ரீவாயுதேவர் (ஸ்ரீமதாசார்யர்) இருக்கிறார். அப்படியிருக்கையில், நமக்கு ஏன் இன்னொரு குரு தேவை? என்று சில மந்த மதியினர் கேட்பார்கள். ஆனால், நம் தேகத்திற்குக் காரணமான தந்தையானவர், ஒரு தக்க குரு சொல்வதைப் போல, ஸத்விஷயங்களை நமக்கு போதிக்க மாட்டார். -- என்கிறார் ஸ்ரீதாஸர். 

ஒரு குருவிடமிருந்து, தெளிவான ஞானத்தை, அதன் பொருள் மற்றும் அனுசந்தானத்துடன் கேட்டு அறிந்து கொள்வது ஸ்ரவணம் எனப்படுகிறது. இதுவே அனைத்து சாதனைகளுக்கும் துவக்கம். இந்த ஸ்ரவணத்தைப் பற்றி ஸ்ரீவிஜயதாசர் ஒரு சுளாதியில் இவ்வாறு சொல்கிறார்: 

ஸ்ரவணவெ மஹாமுக்ய கர்ம ஞானிகளிகெ

ஷ்ரவணவில்லதனக ஆவது தொரகது

ஷ்ரவணதிந்தலி சதத ஞான பகுதிவிரக்தி

ஸ்ரவணவெ ஸ்ரீஹரிய தாத்விக ப்ரஸா

...

ஷ்ரவணக்கெ ஒலிவ விஜயவிட்டலனங்க்ரி

நவநவநாமகள ஷ்ரவணமாடோ மனுஜ || 

குருவின குலாமனாகுவ தனக தொரெயதண்ண முகுதி - என்கிறார் ஸ்ரீபுரந்தரதாஸர். ஒரு குருவை அடைந்து, அவரின் சேவைகளை செய்து, அவர் மூலமாகப் பெறும் ஞானத்தினாலேயே முக்தி கிடைகிறது என்பது இதன் கருத்து.

***

1 comment:

  1. மிகச் சிறந்த விளக்கம். குரு என்பவர் தேவை. என் வாழ்வில் கிடைத்தற்கரிய குருவைப் பெற்றேன். அவர் தற்போது இவ்வுலகில் இல்லாவிட்டாலும் அவரது போதனைகள் விலை மதிக்கமுடியாதவை.

    ReplyDelete