Thursday, May 5, 2022

[பல ஸ்ருதி #1] - ஹரிதாஸ தர்பண

[பல ஸ்ருதி #1] - ஹரிதாஸ தர்பண

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பல ஸ்ருதி #1]

ஓது3வவரிகெ3 மோத3 தருவுது3

பா3தி4ஸுவ யமபா3தெ4 களெவுது3

பது3மனாப4 பாத3 4ஜனெகெ3 மனஸு திருகு3வுது3 |

பே43வெணிஸதெ3 கேளுவவரிகெ3

ஸாத4னத3 ஹெத்3தா3ரி ஸிகு3வுது3

ஸ்ரீத3னொலிமெகெ3தா3 3ர்பண ஸுலப4 ஸாத4னவு ||1 

ஓதுவவரிகெ - (இந்த கிருதியை) படிப்பவர்களுக்கு; மோத தருவுது - மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; பாதிஸுவ யமபாதெ களெவுது - பாதிப்பதான யம பயத்தைப் போக்குகிறது; பதுமனாபன - ஸ்ரீஹரியின்; பாத பஜனெகெ - பாதங்களை வணங்குவதில்; மனஸு திருகுவுது - மனம் விரும்பிச் செல்கிறது; பேதவெணிஸதெ - வர்ணாசிரம பேதம் இல்லாமல் (யாராக இருந்தாலும்); கேளுவவரிகெ - இதனை கேட்பவர்களுக்கு; ஸாதனத - அவர்களின் ஸாதனையின்; ஹெத்தாரி ஸிகுவுது - வழி புலப்படுகிறது; ஸ்ரீதனொலிமெகெ - ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெறுவதற்கு; தாஸ தர்பண - ஹரிதாஸ தர்பண என்னும் கிருதி; ஸுலப ஸாதனவு - மிகச் சுலபமான ஸாதனம் ஆகும். 

ஹரிதாஸ தர்பண என்னும் கிருதியின் பல-ஸ்ருதியை எழுதியவர் ஸ்ரீதிருமலேஷ ஹரிவிட்டல தாஸர் (திரு.ஜெயஸிம்மா) அவர்கள். இவர் ஸ்ரீகுருகோவிந்த விட்டல தாஸரிடம் அங்கிதம் பெற்று, பல ஆண்டுகளாக ஹரிதாஸ ஸாகித்ய சேவை செய்து வருபவர். பற்பல ஹரிதாஸர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் கிருதிகளின் தொகுப்பு, ஹரிதாஸ ஆராதனைகள் என தொடர்ந்து ஸாதனை செய்து வருபவர். 137 பத்யங்களைக் கொண்ட இந்த ஹரிதாஸ தர்பணத்திற்கு, அதே பாமினி ஷட்பதியில் மூன்று பத்யங்களில் பல ஸ்ருதியை இயற்றியிருக்கிறார் ஸ்ரீதிருமலேஷ ஹரிவிட்டல தாஸர். 

பல ஸ்ருதியின் இந்த முதல் பத்யத்தில், இந்த கிரந்தத்தைப் படிப்பதனால் உண்டாகும் பலன்களைக் கூறுகிறார். 

ஹரிதாஸ தர்பண என்னும் இந்த கிருதி, படிப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அவர்களுக்கு வரக்கூடியதான யம பயத்தினை போக்குகிறது. ஸ்ரீஹரியின் பாதங்களை வணங்குவதில் அவர்களது மனம் விரும்பிச் செல்கிறது. வர்ணாசிரம பேதங்கள் இல்லாமல், இதனை யார் கேட்டாலும், அவர்களின் ஸாதனையின் வழி புலப்படுகிறது. ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெறுவதற்கு, ஹரிதாச தர்பண என்னும் இந்த கிருதி, மிகச் சுலபமான ஸாதனம் ஆகும். 

பிம்பரூப தரிசனம் பெறுவதற்கான வழியையும், அந்த தரிசனத்தையும் பெற்றுத் தருவதாக இந்த கிருதி இருக்கிறது என்பது கருத்து.

****

No comments:

Post a Comment