[பத்யம் #10] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #10]
தொளலுதிரெ பூ4தளகெ1 இளித3ரு
ஜலஜனாப4ன ப்ரீதிபாதரு
பொளெவ வர மத்4வாபி4தா4னதி3 ஸுஜனபோஷகரு |
கலுஷ வர்ஜித ஸுகு3ணபூர்ணன
வலிஸி மோக்ஷவ படெ3வ ஸுபத4தி3
ப3லித1 கலியந்த4வனு களெத3ரு தத்வதீ3ப்தியலி ||10
தொளலுதிரெ - சிந்தித்துக் கொண்டிருக்க; ஜலஜனாபன ப்ரீதிபாதரு - ஸ்ரீஹரிக்கு மிகவும் பிடித்தவரானவர்; பொளெவ - ஒளிர்பவரான; வர - சிறந்தவரான; ஸுஜனபோஷகரு - சஜ்ஜனர்களை காப்பவரான - மத்வாபிதானதி - மத்வ என்னும் பெயரில்; பூதளகெ இளிதரு - இந்த பூமிக்கு இறங்கினார்; கலுஷ வர்ஜித - தோஷங்கள் அற்றவரான; ஸுகுணபூர்ணன - நற்குணங்கள் நிறைந்தவரான (ஸ்ரீஹரியை); வலிஸி - மகிழ்வித்து, தரிசனம் செய்து ; மோக்ஷவ படெவ ஸுபததி - மோட்சத்தை அடையும் வழியில்; பலித - சென்றார்; தத்வதீப்தியலி - (தன்னுடைய சர்வமூலங்கள் என்னும்) தத்வ கிரந்தங்களின் ஒளியில்; கலியந்தவனு - கலி என்னும் இருளை; களெதரு - நீக்கினார்.
ஸ்ரீமத்வ அவதாரம் இங்கு சொல்லப்பட்டுள்ளது.
(யோக்ய ஜீவர்கள்) இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்க, ஸ்ரீஹரிக்கு மிகவும் பிடித்தமானவரான, ஒளிர்பவரான, சிறந்தவரான, ஸஜ்ஜனர்களை காப்பவரான வாயுதேவர், மத்வ என்னும் பெயரில் இந்த பூமிக்கு வந்து இறங்கினார். தோஷங்கள் அற்றவரான, நற்குணங்கள் நிறைந்தவரான ஸ்ரீஹரியை மகிழ்வித்து, தரிசனம் செய்து, மோட்சத்தை அடையும் வழியில் சென்றார். தன்னுடைய ஸர்வமூலங்கள் என்னும் தத்வ கிரந்தங்களின் ஒளியில், கலி என்னும் இருளை நீக்கினார்.
ஸ்ரீமத்வரின் அவதார சந்தர்ப்பத்தை, ஸ்ரீஸ்ரீபாதராஜர், மத்வ நாமாவில் இவ்வாறு கூறுகிறார்.
ஞானி தா பவமான பூதளதொளுத்பவிஸி
மானநிதி மத்வாக்ய நெந்தெனிஸித ||23
ஹரிகதாம்ருதஸாரத்தில், ஸ்ரீஜகன்னாததாசர் இதனை இவ்வாறு விளக்கியுள்ளார்.
சதிய ஜடரதொளவதரிஸி பா
ரதிரமண மத்வாபிதானதி
சதுரதஷ லோகதொலி மெரெதப்ரதிமகொந்திசுவெ ||8
மணிமந்தன் முதற்கொண்டு தமோ யோக்யரான தைத்யர்கள் பூமியில் பிறந்து, பிரம்மசூத்திரத்திற்கு 21 குபாஷ்யங்களை இயற்ற, பாரதிபதியான வாயுதேவர், மத்யகேஹ பட்டர் என்னும் பிராமணரின் மனைவியின் வயிற்றில் பிறந்த குழந்தையின் தேகத்தில் பிரவேசித்து, மத்வாசார்யர் என்னும் பெயரால் 14 உலகங்களிலும் புகழடைந்தார். ஒப்புமை இல்லாத (அவரை) வணங்குகிறேன்.
மத்வ விஜய ஸார ஸங்க்ரஹத்தில், ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் ஸ்ரீமத்வாவதாரத்தை விளக்கும் விதம் இவ்வாறு:
நிஜமதிய தி3னகரனு முளுக3லு அஜிதனாக்3ஞெய படெ3த3 மருதனு
ருஜுதபக3ளாசரிஸி பரம விஷுத்3த4ராகித்3த3 |
ஸஜனஷேக2ர மத்4யகே3ஹ த்3விஜவரன ஸதியுத3ரத3லி தா
பி3ஜயகெ3ய்த3னு ஹொரகெ3ட3ஹி பே3ரொந்த3னாக்ஷணதி3 ||5
உண்மையான அறிவு என்னும் சூரியன் மூழ்கத் தொடங்க, ஸ்ரீஹரியின் ஆணையைப் பெற்ற ஸ்ரீவாயுதேவர், ஜப தபங்களை சரிவர செய்து, பரம தூய்மையானவராக இருந்த, சஜ்ஜனர்களில் சிறந்தவரான, மத்யகேஹ என்னும் பிராமண ஸ்ரேஷ்டரின் மனைவியின் வயிற்றில், அந்த சமயத்தில் அந்த கர்ப்பத்தில் இருந்த வேறொரு ஜீவனை வெளியே இழுத்து, தான் அங்கு உள்ளே பிரவேசித்தார்.
இவ்வாறு அவதரித்த ஸ்ரீமத்வர், மாயையில் / அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த மக்களை, ஸத்மார்க்கத்தில் வழிநடத்துவதற்காக, ஸர்வமூல கிரந்தங்களை இயற்றினார் என்று கூறி, இதையே அடுத்த பத்யத்திலும் தொடர்கிறார், ஸ்ரீரமாகாந்த விட்டல தாசர்.
***
No comments:
Post a Comment