[பத்யம் #17] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #17]
ஞான ப4க்தி விரக்தி மூரனு
ஸானுராக3தி3 த்3ருட3தி3 நிலிஸுத1
ஏனு மாடு3வ கர்ம ஸமுதா3யவனு ஸ்ரீஹரிகெ3 |
மாணத3லெ அர்ப்பிஸுவ வர ஸு
க்3ஞானமார்க்3க4வ இளெகெ3 தோரலு
தே4னிஸித3 ஸ்ரீநிதி4யு யோக்3யனு தே3வமுனி எந்து3 ||17
ஞான பக்தி விரக்தி மூரனு - ஞான பக்தி வைராக்யம் இந்த மூன்றையும்; ஸானுராகதி - தொடர்ந்து; த்ருடதி நிலிஸுத - திடமாக மனதில் நிறுத்தியவாறு; ஏனு மாடுவ கர்ம ஸமுதாயவனு - செய்யும் அனைத்து கர்மங்களையும்; ஸ்ரீஹரிகெ - ஸ்ரீஹரிக்கு; மாணதலெ அர்ப்பிஸுவ - கண்டிப்பாக அர்ப்பணம் செய்யும்; ஸுக்ஞான மார்க்கவ - சுக்ஞானத்தைக் கொடுக்கும்படியான வழியை; இளெகெ தோரலு - பூமியில் பக்தர்களுக்கு காட்டுவதற்கு; யோக்யனு - தகுதியானவர்; தேவமுனி - நாரதர்; எந்து - என்று; ஸ்ரீநிதியு தேனிஸித - ஸ்ரீஹரி தீர்மானித்தார்.
ஹரிதாஸ ஸாகித்யத்தை பூமியில் பரப்புவதற்கு சரியானவர் என்று ஸ்ரீஹரி நாரதரை அனுப்புகிறார் என்கிறார் ஸ்ரீதாஸர்.
ஞான பக்தி வைராக்கியம் என இந்த மூன்றினையும் திடமாக மனதில் நிறுத்தியவாறு, தான் செய்யும் அனைத்து கர்மங்களையும் ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்வதான, ஸுக்ஞானத்தைக் கொடுக்கும்படியான வழியை, பூமியில் இருக்கும் பக்தர்களுக்கு காட்டுவதற்கு, தகுதியானவர், நாரதரே என்று ஸ்ரீஹரி தீர்மானித்தார்.
ஹரிதாஸர்களின் லட்சணத்தை சுருக்கமாக சொல்லும் பத்யம் இது என்று சொல்லலாம்.
ஹரியெ முக்2ய நியாமகனு எ
ந்த3ரிது3 புண்யாபுண்ய ஹருஷா
மருஷ லாபா4லாப4 ஸுக2துக்கா2தி3 த்3வந்த்3வக3ள |
நிருத அவனங்க்ரிகெ3 ஸமர்ப்பிஸு
நரக பூ4 ஸ்வர்க்கா3பவர்க3தி3
கரண நியாமகன ஸர்வத்ரத3லி நெனெவுதிரு ||
(த்யான ப்ரக்ரிய ஸந்தி #14)
ஸ்ரீஹரியே முக்கிய நியாமகன் என்பதை அறிந்து, நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை ஸ்ரீஹரிக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீஜகன்னாத தாசர்.
நானு நன்னது3 எம்ப3 ஜட3மதி
மானவனு தி3னதிvனதி3 மாடு3வ
ஸ்னான ஜப தேvவார்ச்சனெயெ மொதvலாதv கர்மக3ள |
தா3னவரு ஸெளெதொ3ய்வரல்லதெ3
ஸ்ரீனிவாஸனு ஸ்வீகரிஸ ம
த்தானெ பக்வ கபித்த2ப2ல ப4க்ஷிஸித3வோலஹுது ||
(ஸர்வ ப்ரதீக ஸந்தி #13)
தான் செய்யும் கர்மங்களை, நானே செய்தேன், அனைத்தும் என்னுடையது என்று (எதையும் ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிக்காமல்) செய்யப்படும் ஜப, தேவார்ச்சனை ஆகியவற்றை ஸ்ரீனிவாஸன் ஏற்றுக் கொள்வதில்லை.
இப்படியாக, ஞான பக்தி வைராக்கியத்துடன் அனைத்து கர்மங்களையும் ஸ்ரீஹரிக்கே சமர்ப்பிக்க வேண்டும் என்பதான சரியான வழியை (ஹரிதாஸ மார்க்கத்தை) பூமியில் பரப்புவதற்கு நாரதரே சரியானவர் என்று ஸ்ரீஹரி தீர்மானிக்கிறார் என்கிறார் ஸ்ரீரமா காந்த விட்டல தாஸர்.
***
No comments:
Post a Comment