Thursday, May 19, 2022

[பத்யம் #12] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #12] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #12]

மத்4வராயர பா4 4ல்ல ப்ர

ஸித்34 யதி ஜயதீர்த்த2வர்யரு

உத்34ரிப ஸ்ரீ ந்யாயஸுதெ4யனு ஜக3கெ நீடி33ரு |

ஸத்க3திகெ3 ஸ்ரீபாத3ராஜரு

தித்3தி3 தோரலு முந்தெ3 ஹாதி3

4த்ரகெ3ய்த3ரு வ்யாஸராயரு ஸோதெ3 கு3ருவரரு ||12 

மத்வராயர - ஸ்ரீமதாசார்யரின்; பாவ பல்ல - சிந்தனைகளை அறிந்த; ப்ரஸித்த யதி - புகழ்பெற்ற யதியான; ஜயதீர்த்தவர்யரு - ஸ்ரீடீகாராயரான ஸ்ரீஜயதீர்த்தர்; உத்தரிப - நம்மை மேம்படுத்தும்; ஸ்ரீ ந்யாயஸுதெயனு - ஸ்ரீமன் நியாயஸுதாவை; ஜககெ நீடிதரு - உலகிற்குக் கொடுத்தார்; ஸ்ரீபாதராஜரு - ஸ்ரீபாதராஜர்; ஸத்கதிகெ - மோட்சத்திற்கான வழியை; தித்தி தோரலு - சரியாகக் காட்ட; முந்தெ ஹாதிய - முன்னர், அதே வழியை; பத்ரகெய்தரு - அப்படியே பின்பற்றினர்; வ்யாஸராயரு ஸோதெ குருவரரு - அவருடைய சிஷ்யர்களான ஸ்ரீவ்யாஸராயர் மற்றும் ஸ்ரீவாதிராஜர் இருவரும். 

ஸ்ரீஹரியின் ஆணையால், பூமிக்கு வந்து ஸ்ரீமதாசார்யரின் கிரந்தங்களுக்கு பாஷ்ய, டீகை, டிப்பணிகள் இயற்றிய யதிகளின் விவரங்களை இந்த பத்யத்தில் சொல்கிறார் ஸ்ரீதாசர். 

ஸ்ரீமதாசார்யரின் சிந்தனைகளை அறிந்த புகழ்பெற்ற யதினான ஸ்ரீடீகாராயரான ஸ்ரீஜயதீர்த்தர், நம்மை மேம்படுத்தும், ஸ்ரீமன் நியாயஸுதாவை இந்த உலகிற்குக் கொடுத்தார். மோட்சத்திற்கான வழியை ஸ்ரீபாதராஜர் சரியாகக் காட்ட, அடுத்து அதே வழியை, ஸ்ரீவ்யாஸராஜர் மற்றும் ஸ்ரீவாதிராஜர் இருவரும் அப்படியே பின்பற்றினர். 

* ஸ்ரீமதாசார்யரின் பல கிரந்தங்களுக்கு டீகை எழுதி, டீகாராயர் என்றே பெயர் பெற்ற ஸ்ரீஜயதீர்த்தர், இந்திரனின் அவதாரமாக கருதப்படுகிறார்.

* வாக்வஜ்ர என்னும் கிரந்தத்தை இயற்றிய ஸ்ரீஸ்ரீபாதராயர், த்ருவராயரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

* வ்யாஸத்ரய கிரந்தங்களை இயற்றிய ஸ்ரீவ்யாஸராயர், பிரகலாத ராயரின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

* ருக்மிணீஷ விஜய, ஸரஸபாரதி விலாஸ, பல உபநிஷத் பாஷ்யங்களுக்கு டீகை என பற்பல அற்புத கிரந்தஙளை இயற்றிய ஸ்ரீவாதிராஜர்.

 

என மத்வ யதி பரம்பரையின் சில குறிப்பிட்ட யதிகளைப் பற்றி மட்டும் விளக்கியிருக்கும் ஸ்ரீரமாகாந்த விட்டல தாசர். இத்தகைய யதிஸ்ரேஷ்டர்கள் மத்வ சித்தாந்தத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றாலும், மக்களிடையே இருந்த நிலைமையைப் பற்றி அடுத்த பத்யத்தில் விளக்குகிறார்.

 ***



No comments:

Post a Comment