[பல ஸ்ருதி #3] - ஹரிதாஸ தர்பண
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பல ஸ்ருதி #3]
து3ரித1 தூ3ரவு ஹருஷ காரண
ஸாரதர ஹரிதா3ஸ த3ர்பண
த4ரெகெ3 ஸ்ரீ ரமாகாந்த தா3ஸரு மாடி3து3பகார |
ஹரிய தா3ஸரு அரிது1 படி2ஸலு
திருமலேஷ ஹரி விட்டலராயனு
கரவ பிடி3யுத கரெது3கொள்ளுவ தன்ன புரதொ3ளகெ3 ||3
துரித தூரவு - (இந்த கிருதியை படிப்பதால்) கஷ்டங்கள் விலகுகின்றன; ஹருஷ காரண - மகிழ்ச்சி கிடைக்கிறது; ஸாரதர - (ஹரிதாஸ ஸாகித்யத்தின்) ஸார ரூபமான; ஹரிதாஸ தர்பண - ஹரிதாஸ தர்பண என்னும் இந்த கிருதியை இயற்றி; ஸ்ரீரமாகாந்த தாஸரு, தரெகெ - இந்த பூமிக்கு; மாடிதுபகார - மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார்; ஹரிய தாஸரு - அனைத்து ஹரிதாஸர்களும்; அரிது படிஸலு - இதனை அறிந்து படித்தால்; திருமலேஷ ஹரி விட்டலராயனு - தாஸரின் பிம்பரூபியான திருமலேஷ ஹரி விட்டலன்; கரவ பிடியுத - அத்தகையவர்களின் கைகளைப் பிடித்து; தன்ன புரதொளகெ - தன் இருப்பிடத்திற்கு; கரெதுகொள்ளுவ - அழைத்துக் கொள்கிறான்;
மூன்றாம் மற்றும் கடைசியான இந்த பல-ஸ்ருதியில், ஸ்ரீதாஸருக்கு நன்றியைக் கூறி முடிக்கிறார் ஸ்ரீதிருமலேஷ ஹரிவிட்டல தாஸர்.
ஹரிதாஸ தர்பண என்னும் இந்த கிருதியைப் படிப்பதால், கஷ்டங்கள் விலகுகின்றன. மகிழ்ச்சி கிடைக்கிறது. ஹரிதாஸ ஸாகித்யத்தின் ஸார ரூபமான இந்த கிருதியை, ஸ்ரீரமாகாந்த தாசர், நமக்கு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார். அனைத்து ஹரிதாஸர்களும் இதனை அறிந்து படித்தால், (தாஸரின் பிம்பரூபியான) ஸ்ரீதிருமலேஷ ஹரி விட்டலன், அவர்களின் கைகளைப் பிடித்து, அவர்களை தன் இருப்பிடத்திற்கு அழைத்துக் கொள்கிறான். முக்தி கிடைக்கிறது என்பது கருத்து.
***
மிக்க நன்றி.
ReplyDeleteExcellent
ReplyDelete