[பல ஸ்ருதி #2] - ஹரிதாஸ தர்பண
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பல ஸ்ருதி #2]
எஷ்2டு ஸுந்த3ர எஷ்டு ஸொக3ஸிது3
எஷ்2டு ஸரள மத்தெஷ்டு ஸரஸவு
எஷ்2டு தோடித3ரஷ்டு தும்பு3வ ப4க்திரஸ பா4வ
நிஷ்2டெயிந்த்vஹரி தா3ஸ த3ர்பண
து1ஷ்2ட மனத3லி ஓதி3 கேளலு
இஷ்2டமூருதி கிருஷ்ணராயனு த1ட்ட1னொத3கு3வனு ||2
எஷ்டு ஸுந்தர - எவ்வளவு அழகானது; எஷ்டு ஸொகஸிது - எவ்வளவு மகிழ்ச்சி (மகிழ்ச்சியை தருகிறது); எஷ்டு ஸரள - எவ்வளவு ஸரளமாக இருக்கிறது; மத்தெஷ்டு ஸரஸவு - மேலும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது; எஷ்டு நோடிதரஷ்டு - எவ்வளவு பார்க்கிறோமோ அவ்வளவு; பக்திரஸ பாவ தும்புவ - மனதில் பக்திரஸ பாவம் நிரம்புகிறது; நிஷ்டெயிந்த - மிகவும் பக்தியுடன்; ஹரிதாஸ தர்பண - ஹரிதாஸ தர்பண என்னும் இந்த கிருதியை; துஷ்ட மனதலி - நல்ல மனநிலையில்; ஓதி கேளலு - படித்தால் / கேட்டால்; இஷ்டமூருதி - நம் இஷ்ட தெய்வமான; கிருஷ்ணராயனு - ஸ்ரீகிருஷ்ணன்; தட்டனொதகுவனு - உடனடியாக வந்து தரிசனம் அளிக்கிறான்.
பல ஸ்ருதியின் இந்த இரண்டாம் பத்யத்தில், இந்த ஹரிதாஸ தர்பணத்தின் வடிவமைப்பு, இதில் என்ன உள்ளது என்பதை விளக்கியிருக்கிறார் ஸ்ரீதிருமலேஷ ஹரிவிட்டல தாஸர்.
இந்த ஹரிதாஸ தர்பணமானது, படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. மிகவும் ஸரளமான, இனிமையாக இருக்கிறது. எவ்வளவு படிக்கிறோமோ அவ்வளவுக்கு, மனதில் பக்திரஸ பாவம் நிரம்புகிறது. இந்த கிருதியை மிகவும் பக்தியுடன், நல்ல மன நிலையில் படித்தால் / கேட்டால், நம் இஷ்ட தெய்வமான ஸ்ரீகிருஷ்ணன், உடனடியாக வந்து அருள்கிறான்.
***
No comments:
Post a Comment