Monday, May 9, 2022

[பத்யம் #2] - ஹரிதாஸ தர்பண

[பத்யம் #2] - ஹரிதாஸ த3ர்பண

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #2]

எரகி3 ஸ்ரீஹரி பாத3கமலகெ

மருத பா4ரதியரனு நமிஸுத

வரமதிய நீடெ3ந்து3 மனத3பி4மானிகெரகு3வெனு |

கரிமுக2 ஸத்க்ருபெய பே3டு3

பரம ஸ்ரீகு3ருசரண 3லதி3ம்

3ரெயலெத்னவகெ3ய்வெனீ ப்ராக்ருதத3 பத்3யக3 ||2 

ஸ்ரீஹரி பாதகமலகெ - ஸ்ரீஹரியின் பாத கமலங்களை; எரகி - வணங்கி; மருத பாரதியரனு - பாரதிதேவி, முக்யபிராணர்களை; நமிஸுத - வணங்கியவாறு; வரமதிய நீடெந்து - நற்புத்தியைக் அருளுங்கள் என்று; மனதபிமானிகெ - மனதிற்கு அபிமானியானவரை (ருத்ரதேவரை); எரகுவேனு - வணங்குகிறேன்; கரிமுகன ஸத்க்ருபெய பேடுத - கணபதியின் நல்லருளை வேண்டியவாறு; பரம ஸ்ரீகுருசரண பலதிம் - சிறந்தவரான குருகளின் பாதங்களின் அருளால்; ப்ராக்ருதத பத்யகள - இந்த பேசுமொழியிலான பத்யங்களை; பரெயலு - எழுதுவதற்கு; எத்னவகெய்வனு - எழுத முயல்கிறேன். 

ஸ்ரீஹரியை வணங்கியபின், தாரதம்யத்தின்படி தேவதைகளை சுருக்கமாக வணங்கி, கிரந்தத்தை துவக்குகிறார் ஸ்ரீதாசர். 

ஸ்ரீஹரியின் பாத கமலங்களை வணங்கி, பாரதிதேவி முக்யபிராணர்களை வணங்கியவாறு, நற்புத்தியை அருளுங்கள் என்று மனோபிமானியான ருத்ரதேவரை வணங்குகிறேன். பின், கணபதியின் நல்லருளை வேண்டியவாறு, சிறந்தவரான குருகளின் பாதங்களின் அருளால், பேசுமொழியில் உள்ள இந்த பத்யங்களை எழுத முயல்கிறேன். 

ஸ்ரீஹரிவாயுகுருகளின் அருளை வேண்டியவாறு, விக்னங்களை தடுப்பவரான விக்னேஷ்வரனையும், தாரதம்யத்தின்படி சுருக்கமாக வணங்கியவாறு, அடுத்த ப்ராக்ருத (கன்னட) மொழியின் சிறப்புகளை அடுத்த பத்யங்களில் விளக்கத் துவங்குகிறார் ஸ்ரீரமா காந்த விட்டல தாசர்.

***


No comments:

Post a Comment