[பத்யம் #21] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #21]
திளி மருளெ இத3ரிந்த3 த4ரெயொளு
ப3லுஹினலி கு3ருரஹித வித்4யவ
கலிது ப2ல ப3யஸுவுது3 ப3ஞ்செ3கெ3 மக்களாத3ந்தெ |
ஹலவு வித4த3லி மனவ ஹரிஸுத
நெலெயகா3ணதெ3 திருகு3தலேதகெ
வலிஸி ஸத்கு3ரு மனவ உத்தம நெலெயனாஷ்ரயிஸு ||21
இதரிந்த திளி மருளெ - இதனால் இவ்வாறு அறிந்து கொள்ளுங்கள்; தரெயொளு - இந்த பூமியில்; குருரஹித - தக்க குரு இல்லாமல்; பலுஹினலு - தன்னுடைய சொந்த சாமர்த்தியத்தினால்; வித்யவ கலிது - கல்வியைக் கற்று; பல பயஸுவுது - பலன்களைப் பெறுவது; பஞ்செகெ மக்களாதந்தெ - குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பிறப்பதைப் போல (சாத்தியம் இல்லாததாகும்); ஹலவு விததலி - பற்பல விதங்களில்; மனவ ஹரிஸுத - மனதை அலைபாய விட்டவாறு; நெலெயகாணதெ - ஒரு நிலையில் இல்லாமல்; திருகுதலேதகெ - ஏன் சுற்றித் தவிக்க வேண்டும்?; ஸத்குரு வலிஸி - ஒரு ஸத்குருவை ஏற்றுக் கொண்டு; மனவ - மனதினை; உத்தம நெலெயனாஷ்ரயிஸு - மனதினை ஒரு நல்ல நிலையில் நிறுத்தவும்.
ஒரு தக்க குருவின் முக்கியத்துவத்தையும், அவருடைய சிறப்பினையும் இங்கிருந்து சில பத்யங்களுக்கு விளக்குகிறார் ஸ்ரீதாஸர்.
இந்த பூமியில் தக்க குரு இல்லாமல், தன்னுடைய சொந்த சாமர்த்தியத்தினால், கல்வியைக் கற்று பலன்களைப் பெறுவது சாத்தியமே இல்லாததாகும். அப்படி செய்யாமல் (குருவை அடையாமல்), மனதை அலைபாய விட்டவாறு, ஒரு நிலையில் இல்லாமல் ஏன் சுற்றித் தவிக்க வேண்டும்?.
குருவின் மூலமாகவே ஞானத்தைப் பெற வேண்டும் என்று தக்க ஆதாரங்களுடன் பல ஹரிதாஸர்கள் கிருதிகளை இயற்றியிருக்கின்றனர்.
குருஹிரியனனுசரிஸி ஹரிய மனதொளகிரிஸி பரகதிய பேக சாதிசிரோ || -- என்பது ஸ்ரீவாதிராஜரின் வாக்கு. குருவை அடைந்து, அவர் கூறிய பகவத் மகிமைகளை மனதில் நிறுத்தி, முக்திக்குச் செல்லும் வழியை அடையுங்கள் என்கிறார்.
குருமுகவில்லதலெ தொரெயது ஞானமார்க்க -- என்று ஸ்ரீவிஜயதாசர் கூறியிருக்கிறார்.
குரு உபதேசவில்லத ஞானவு
குரு உபதேசவில்லத ஸ்னானவு
குரு உபதேசவில்லத த்யானவு
குரு உபதேசவில்லத ஜபவு
குரு உபதேசவில்லத தபவு
குரு உபதேசவில்லத மந்த்ர
குரு உபதேசவில்லத தந்த்ர
-- என்று வ்யாஸராய ஸ்தோத்திர ஸுளாதியில் ஸ்ரீபுரந்தரதாசர், குருவின் சிறப்பினை விளக்கியிருக்கிறார்.
’குருபிரசாதோ பலவான் ந தஸ்மாத் பலவத்தரம்’ என்று சாஸ்திரங்கள் குருவின் மகிமையை சொல்கின்றன. குருவின் அருளினாலேயே அனைத்தையும் அடைய முடியும் என்பதற்கு இதிகாசங்களில் பல உதாரணங்கள் உள்ளன. அனைத்தும் அறிந்த சர்வக்ஞனான ஸ்ரீஹரி, தர்மத்தை பின்பற்றுவதற்காக, சந்தீபினி ஆசார்யரிடம் சென்று குருசேவை செய்தான் - என்றபிறகு, ஸ்ரீஜகன்னாததாஸர் சொல்வதைப் போல நம் கதி என்ன? (நரர பாடேனு?).
குருகளின் மகிமையை அடுத்த பத்யத்திலும் தொடர்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
***
No comments:
Post a Comment