[பத்யம் #6] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #6]
தே3வபா4ஷெய ஸர்வமான்யதெ
கா3வகாலகு குந்து3 ப3ரது3 ப
ராவரேஷன ஞான போ3தி4ஸெ தே3ஷபா4ஷெயனு |
கோவித3ரு ஸத்ஸாத4னா பர
ஜீவிக3ளனுத்3த4ரிஸலோஸுக3
பா4வதி3ந்த3லி ப3ளஸி வெக்3க3ளிஸித3ரு ஜக3த3ல்லி ||6
பராவரேஷன - உத்தமரான ரமா பிரம்மாதிகளுக்கும், நீசரான கலி முதலானவர்களுக்கும் ஈசனான (தலைவனான) ஸ்ரீபரமாத்மனின்; ஞான போதிஸெ - ஞானத்தை போதிப்பதற்காக; ஸத்ஸாதனா பர - சாதனைகளை செய்ய வேண்டும் என்று அதில் ஈடுபட்டிருக்கும்; ஜீவகளனு - ஜீவர்களை; உத்தரிஸலோஸுக - உத்தரிப்பதற்காக; தேஷபாஷெயனு - நாட்டில் உள்ள பிற மொழிகளை; கோவிதரு - பண்டிதர்கள்; பாவதிந்தலி - மிகுந்த மகிழ்ச்சியுடன்; வெக்களிஸிதரு - அதிகமாக பளஸி - பயன்படுத்தினர்; ஜகதல்லி - உலகத்தில்; தேவபாஷெய - தேவபாஷையான சம்ஸ்கிருதத்தின்; ஸர்வமான்யதெகெ - சிறப்புத்தன்மைக்கு; ஆவகாலகு - எந்த காலத்திலும்; குந்து பரது - எவ்வித குறைகளும் வராது.
கன்னடத்தின் கிருதிகளைப் பற்றிய சிறப்புகளை தொடர்ந்து இந்த பத்யத்திலும் தொடர்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாசர்.
உத்தமர்களான ரமா பிரம்மாதிகளுக்கும் மற்றும் நீசரான கலி முதலானவர்களுக்கும் தலைவனான ஸ்ரீபரமாத்மனைப் பற்றிய ஞானத்தை போதிப்பதற்காக; மற்றும், ஸாதனைகளை செய்ய வேண்டும் என்று அதற்கான வழிகளில் ஈடுபட்டிருக்கும் ஜீவர்களை அருள்வதற்காக, நாட்டில் உள்ள பல்வேறு பேசுமொழிகளை பண்டிதர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தினர். (இப்படி பேசுமொழிகளை பயன்படுத்துவதால்), தேவபாஷையான சம்ஸ்கிருதத்தின் சிறப்பிற்கு, எந்த காலத்திலும், எவ்வித குறைகளும் வராது.
ஸ்ரீஸ்ரீபாதராஜர், ஸ்ரீவ்யாஸராஜர், ஸ்ரீவாதிராஜரே முதலான பல்வேறு யதிஸ்ரேஷ்டர்கள், யதார்த்த ஞானத்தை போதிப்பதற்காக மற்றும் ஞான பக்தி வைராக்கியங்களின் சிறப்புகள் பாமர மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, பேசுமொழியான கன்னடத்தில் கிருதி, பத, பத்யங்களை இயற்றி, ஸ்ரீபுரந்தரதாசர் முதலான ஹரிதாசர்களையும் இப்படியாக தொடரும்படி ஊக்குவித்தனர். இப்படி ஸத்விஷயங்களை கன்னடத்தில் சொல்வதால், சம்ஸ்கிருதத்திற்கு எவ்வித பிரச்னைகளும் வராது என்று அவர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா? இதையே ஸ்ரீதாசரும் இந்த பத்யத்தில் மேலும் தெளிவுபடுத்துகிறார்.
***
No comments:
Post a Comment