[பத்யம் #20] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #20]
ப3ந்தகார்யவ தந்து3 மனஸிகெ3
இந்தி3ராபதி ஸேவெகெ3ய்வுத3
கெந்து3 ஸத்கு3ருக்ருபெய ப3யஸுத ப3ந்தர்ஹுடுகுத்த |
ஹிந்தெ3 க3ர்ப்ப4தொ3ளித்து3 மந்த்ரவ
பொந்தி3 நுதிஸித3 வ்யாஸராயர
முந்தெ3 நிந்துபதே3ஷபடெ3த3ரு லோகவனுஸரிஸி ||20
பந்தகார்யவ - இந்த உலகிற்கு தான் வந்த காரியத்தை; மனஸிகெ தந்து- மனதிற்குக் கொண்டு வந்து; இந்திராபதி - ஸ்ரீஹரியின்; ஸேவெகெய்வுதகெந்து - சேவை செய்வதற்காகவே என்று; ஸத்குருக்ருபெய பயஸுத - அதற்காக ஒரு ஸத்குருவின் கிருபையை விரும்பியவாறு; பந்தர்ஹுடுகுத்த - தேடியவாறு வந்தார்; ஹிந்தெ - முந்தைய பிறவியில்; கர்ப்பதொளித்து - (பிரகலாதன்) கர்ப்பத்தில் இருந்தபோது; மந்த்ரவ பொந்தி நுதிஸித - தான் மந்திரத்தை உபதேசம் செய்த; வ்யாஸராயர - (அவரே தற்போது) வ்யாஸராயராக இருக்கையில்; முந்தெ நிந்து - அவர் முன்னே நின்று; லோகவனுஸரிஸி - தற்காலத்திற்கேற்ப (வர்ணாசிரமத்திற்கேற்ப); உபதேஷ படெதரு - உபதேசம் பெற்றார்.
ஸ்ரீஹரியின் லீலையால், ஸ்ரீனிவாஸ நாயகர், நொடிப்பொழுதில் வைராக்கியம் பெற்று, அனைத்தையும் துறந்து, பின் ஸ்ரீவியாஸராயரிடம் வந்து உபதேசம் பெற்றதை இந்த பத்யத்தில் கூறியிருக்கிறார் ஸ்ரீதாஸர்.
இந்த உலகிற்கு தான் வந்த காரியத்தை, மனதிற்குக் கொண்டு வந்தார். அது ஸ்ரீஹரியின் சேவை செய்வதற்காகவே வந்திருப்பதாக அறிந்து, ஒரு தக்க குருவைத் தேடி வந்தார். முந்தைய பிறவியில், பிரகலாதன் கர்ப்பத்தில் இருந்தபோது, தான் மந்திரத்தை உபதேசம் செய்ததையும், அவரே தற்போது ஸ்ரீவ்யாஸராயராக இருப்பதையும் அறிந்து, அவர் முன்னே சென்று, தற்காலத்திற்கேற்ப, அவரிடம் உபதேசம் பெற்றார்.
ஸ்ரீனிவாஸ நாயகரை மாற்றுவதற்காக ஸ்ரீஹரி செய்த ‘மூக்குத்தி’ லீலையின் சம்பவத்தை அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்த கிருதி மிகவும் பெரிதாக நீண்டுவிடும் என்பதால், அந்த சம்பவத்தை இங்கு விளக்கவில்லை. தன்னை மாற்ற வந்தது, ஸ்ரீஹரியே என்பதை அறிந்த நாயகர், உடனடியாக நொடிப்பொழுதில் வைராக்கியம் பெற்றார். தன் மனைவி, குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியே வந்தார். தன் செல்வம் அனைத்தையும் ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்றார். ஒரு தக்க குருவைத் தேடி, விஜயநகரத்தில் ராஜகுருவாக ஸ்ரீவ்யாஸராயர் இருப்பதை அறிந்து, அவரிடம் சென்று சேர்ந்தார். குரு சிஷ்யர்களின் அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது. இவர் மூலமாகவே ஹரிதாஸ ஸாஹித்யம் துவங்கி, வளரப்போகிறது என்பதை அறிந்த ஸ்ரீவ்யாஸராஜர், நாயகருக்கு, ஹரிதாஸ தீக்ஷை அளித்து, ‘புரந்தரவிட்டலா’ என்னும் அங்கிதத்தை உபதேசம் செய்தார்.
ஜக3த3 கு3ரு வியாஸராயரலி
ப3கெ3 ப3கெ3யிந்த3லி விஷ்வாஸவன்னு இட்டு
யுக3ள கரவ முகி3து3 முத3தி3ந்த3லி
ஜக3த3பா1லக நம்ம விஜயவிட்டலன உபா
ஸிக3னாகி3 விஷயத3ல்லி ஸிக3தெ3 ஹருஷத3லி ||1
(ஸ்ரீவிஜயதாஸர் இயற்றிய ஸ்ரீபுரந்தரதாஸர் ஸுளாதி)
ஸ்ரீவ்யாஸராயரிடம் சென்று, கை குவித்து, மிகவும் மகிழ்ச்சியுடன், தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். குருகளும் நாயகரை வரவேற்று, மிகவும் சிஷ்ய வாத்ஸல்யத்துடன் ‘புரந்தரவிட்டலா’ என்னும் அங்கிதத்தை வழங்கினார்.
ஸ்ரீவ்யாஸராயரிடம் அங்கித உபதேசம் பெற்ற விஷயத்தை, ஸ்ரீபுரந்தரதாஸரே ஒரு உகாபோகத்தில் மிகவும் அழகாக விவரித்துள்ளார்.
அங்கிதவில்லத தேஹ நிஷேத்தவு
அங்கிதவில்லத காவ்ய ஷோபிசுது
அங்கிதவில்லதெ இரபாரதெந்து
சக்ராங்கிதவனு மாடி என்னங்ககெ
பங்கஜனாப ஸ்ரீபுரந்தரவிட்டலன
அங்கிதவெனகித்த குருவியாஸ முனிராய ||
தாம் இந்த உலகிற்கு வந்த நோக்கத்தை நினைவில் கொண்டு, இப்படியாக ஒரு குருவைத் தேடி, அங்கிதோபதேசம் பெற்று, ஸ்ரீபுரந்தரதாஸர் ஆனார் என்று கூறி, அடுத்த சில பத்யங்களில், ‘குரு’வின் முக்கியத்துவத்தை / சிறப்பினை விளக்குகிறார் ஸ்ரீரமா காந்த விட்டல தாஸர்.
***
No comments:
Post a Comment