Saturday, May 14, 2022

[பத்யம் #7] - ஹரிதாஸ த3ர்பண

[பத்யம் #7] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #7]

ஸுலித3 கத3ளித3 2லத3 தெரத3லி

ஒலிது3 எம்மய ஹிரிய தா3ஸரு

லலித கன்னட33ல்லி தத்வவனொரெது3 பேளிரலு |

ஸுலப43ல்லி கு3ருமுக2தி3 ஞானவ

3ளிஸி திளியதெ3 3ரிதெ3 கஷ்டதி3

ஹலுப3ல்யாதகெ இக்ஷுத3ண்ட3 ரஸவ 3யஸுத்த ||7 

எம்மய - எங்கள்; ஹிரிய தாஸரு - முன்னோர்களான தாசர்கள்; ஒலிது - வந்து; ஸுலித கதளித பலத தெரதலி - உரித்த வாழைப் பழத்தைப் போல; லலித கன்னடதல்லி - அழகான கன்னடத்தில்; தத்வவனொரெது - தத்வங்களை விளக்கி; பேளிரலு - சொல்லியிருக்கையில்; (அதை பயன்படுத்தி) ஸுலபதல்லி - மிகச் சுலபமாக; குருமுகதி - ஒரு குருவிடமிருந்து; ஞானவ களிஸி திளியதே - ஞானத்தை வேண்டி தெரிந்து கொள்ளாமல்; இஷுதண்டத ரஸவ - கரும்புச்சாறினை; பயஸுத்த - விரும்பியவாறு; பரிதெ கஷ்டதி - மிகவும் கஷ்டப்பட்டு; ஹலுபல்யாதகெ - புலம்புவது எதற்கு?. 

சுலபமாக கிடைக்கும் விஷயத்தை விட்டு, கிடைக்கக் கடினமானவற்றை தேடிச் சென்று, பின் புலம்புவது ஏன் என்பதை ஒரு அழகான உதாரணத்துடன் இங்கு விளக்குகிறார் ஸ்ரீதாசர். 

எங்களின் முன்னோர்களான தாசர்கள், தத்வங்களை, உரித்த வாழைப்பழத்தைப் போல அழகான கன்னடத்தில், விளக்கிச் சொல்லியிருக்கையில், (அதன் மூலமாக) ஒரு குருவிடமிருந்து மிகவும் சுலபமாக ஞானத்தை வேண்டிப் பெற்றுத் தெரிந்து கொள்ளாமல், மிகவும் தேடிச் சென்று, கரும்புச்சாற்றினைப் பெறுவதற்கு ஏன் கஷ்டப்பட வேண்டும் என்கிறார். 

ஹரிதாஸ ஸாகித்யமானது நமது பேசுமொழியில், எளிதாக கிடைக்ககூடிய வாழைப்பழத்தைப் போல, அருகிலேயே இருக்கையில், ஒரு தக்க குருவிடமிருந்து அதனை கற்று, ஞானத்தைப் பெற்று தெரிந்து கொள்ளாமல், எளிதாக கிடைக்காத கரும்புச்சாற்றினை தேடிச் சென்றுவிட்டு, பின் ஏன் புலம்ப வேண்டும் என்று கேட்டு, இதன் மூலம் ஹரிதாஸ ஸாகித்யத்தின் சிறப்பினை விளக்குகிறார். 

சம்ஸ்கிருத கிரந்தங்களில் இருக்கும் தத்வ சித்தாந்த ரகசியங்களையே, ஹரிதாஸர்கள் தங்கள் பத, பத்யங்களில் எளிய கன்னடத்தில் விளக்கி நமக்கு புரியவைத்திருக்கிறார்கள். இப்படி எளிமையான வழி இருக்கும்போது ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று சொல்கிறார் ஸ்ரீதாசர். (இதனால், சம்ஸ்கிருதத்தில் இருப்பதான சர்வமூல கிரந்தங்கள் மற்றும் இதர கிரந்தங்களை படிக்கத் தேவையில்லை என்று ஸ்ரீதாசர் சொல்வதாக நினைக்கக்கூடாது). 

உதாரணத்திற்கு, ஸ்ரீகிருஷ்ணாம்ருத மஹார்ணவத்தில் ஸ்ரீமதாசார்யர் இயற்றியிருக்கும் ஒரு ஸ்லோகத்தை பார்ப்போம். 

ஹ்ருதி ரூபம் முகே நாம நைவேத்யமுதரே ஹரே: |

பாதோதகம் நிர்மால்யம் மஸ்தகே யஸ்ய ஸூசௌச்யுத: || 

இதையே ஸ்ரீஜகன்னாததாசர், தனதுபலவிது பாள்துதக்கே என்னும் கிருதியில் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார். சம்ஸ்கிருதம் அறியாதவர்களுக்கு இது மிகவும் எளிமையாக புரியக்கூடிய வகையில் இருக்கிறது என்பதையே ஸ்ரீதாசர் சொல்ல வருவதாக நினைக்க வேண்டும். 

ஹ்ருத3யதி3 ரூபவு வத3னதி3 நாமவு உத3ரதி3 நைவேத்3யவு ஷிரதி3

பத3ஜல நிர்மால்யவனே 4ரிஸி கோ1வித3 ஸத3 ஹெக்க33 கா1யுவுதே3 |7| 

குருவானவர், நமது கை பிடித்து, மிகவும் அன்புடன் யதார்த்த ஞானத்தைப் போதிப்பதற்காக காத்திருக்கிறார். இத்தகைய குருவின் கருணையை நான் எப்படி வர்ணிப்பேன்? -- என்றார் ஸ்ரீஸ்ரீத விட்டலதாசர், தனது ஹரிகதாம்ருதஸார - பல ஸ்ருதியில். அது பின்வருமாறு. 

யாமயாமகெ படிசுவவர ஸு

தாமஸக கைபிடியலோஸுக

ப்ரேமதிந்தலி பேள்த குருகாருண்யகேனெம்பே ||2

***

No comments:

Post a Comment