Sunday, May 8, 2022

[பத்யம் #1] - ஹரிதாஸ தர்பண

[பத்யம் #1] - ஹரிதாஸ தர்பண

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #1]

ஸ்ரீமனோஹர ஸுகு3 ஸுந்த3

ஸ்வாமி வேதா3தீத விக்ரம

காமிதப்ரத3 தாமரஸப4 தி3விஜக3 ஸேவ்ய |

ஸாம கா3னவிலோல 4குதர

ஸ்தோ1 பா4ந்த3 ப்ரேம முனிமன

தா4 மங்க3ளவித்து ஸுஜனர ஸலஹு நீ ஸதத ||1 

ஸ்ரீமனோஹர - ஸ்ரீ லட்சுமியின் தலைவன்; ஸுகுண - நற்குணங்கள் நிரம்பியவன்; ஸுந்தர - அழகானவன்; ஸ்வாமி - அனைவருக்கும் தலைவன்; வேதாதீத - வேதங்கள் மூலமாக அறியப்படுபவன்; விக்ரம - வீரன்; காமிதப்ரத - விருப்பங்களை நிறைவேற்றுபவன்; தாமரஸபவ - தாமரையில் பிறந்த பிரம்மதேவர்; திவிஜகண - தேவதைகளின் கூட்டத்தால்; ஸேவ்ய - வணங்கப்படுபவன்; ஸாம கானவிலோல - ஸாம கானத்தை விரும்புபவன்; பகுதர ஸ்தோம - பக்தர்களால் புகழப்படுபவன்; பாந்தவ - அவர்களின் உறவினன்; ப்ரேம - அவர்களை விரும்புபவன்; முனிமன தாம - முனிவர்களின் மனங்களில் நிலைத்திருப்பவன்; ஸுஜனர - சஜ்ஜனர்களை; மங்களவித்து - மங்களங்களைக் கொடுத்து; நீ ஸதத - நீ எப்போதும்; ஸலஹு - அருள்வாயாக. 

ஸ்ரீரமாகாந்த விட்டல தாசர், ஹரிதாஸ தர்பண கிருதியை துவக்கும் விதமாக, இந்த பத்யத்தை, மங்களாசரண பத்யமாக இயற்றியிருக்கிறார். ஸ்ரீஹரியின் அனந்தானந்த நற்குணங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டு, வணங்கி, அனைவருக்கும் (இந்த கிருதியை சரியாக செய்து முடிக்கவும்) மங்களத்தை அருளுமாறு வேண்டிக் கொள்கிறார். 

ஸ்ரீலட்சுமியின் தலைவனே, நற்குணங்கள் நிரம்பியவனே, அழகானவனே, அனைவருக்கும் தலைவனே, வேதங்கள் மூலமாக அறியப்படுபவனே**, வீரனே, (பக்தர்களின்) விருப்பங்களை நிறைவேற்றுபவனே, தாமரையில் பிறந்த பிரம்மதேவர் மற்றும் தேவதைகளின் கூட்டத்தினால் வணங்கப்படுபவனே, ஸாம கானத்தை விரும்புபவனே, பக்தர்களால் புகழப்படுபவனே, அவர்களின் உறவினனே, பக்தர்களை விரும்புபவனே, முனிவர்களின் மனங்களில் நிலைத்திருப்பவனே, ஸஜ்ஜனர்களுக்கு மங்களங்களைக் கொடுத்து, நீ எப்போதும் அருள்வாயாக. 

ஹரிநாமதி3ந்த3லி 1த்1வேஷ மொத3லாத3

ஸுரரெல்ல வஷவாகி3 இருதிப்பரோ 

ஹரி நாமத்தைக் கொண்டாடினால், தத்வாபிமானி தேவதைகளே முதலான அனைத்து தேவதைகளும் நம் வசத்தில் இருப்பார்கள் - என்று நாம ப்ரஷம்ஸன ஸுளாதியில் ஸ்ரீவிஜயதாஸர் கூறுகிறார். இதன்படி இங்கு செய்திருக்கும் மங்களாசரணத்தினால், அத்தகைய தத்வாபிமானி தேவதைகளின் அருளையும் சேர்த்தே வேண்டியிருக்கிறார் ஸ்ரீதாசர் என்று நினைக்க வேண்டும். 

ஸ்ருதி 1திகளபி4மானி லகுமி

ஸ்துதிக3ளிகெ3 கோ3சரிஸத3ப்ரதி

ஹத மஹைஸ்வர்யாத்யகி2 ஸத்3கு3 கணாம்போ4தி3 |

ப்ரதிதி3வஸ தன்னங்க்4ரி ஸேவா

ரத மஹாத்மரு மாடு3தி1 ஸம்

ஸ்துதிகெ3 வஷனாகு3வனிவன காருண்யகேனெம்பே3 ||

(கருணா ஸந்தி #3) 

ஸ்ரீஹரியை - (ஸத்குண கணாம்போதி) ஸத்குணங்களின் கடல் - என்று ஹரிகதாம்ருத ஸாரத்தில் போற்றுகிறார் ஸ்ரீஜகன்னாததாசர். இத்தகைய மகானுபாவன், தன் பாதங்களை வணங்குபவர்களான மகாத்மர்கள் செய்யும் ஸ்தோத்திரத்திற்கு வசமாகிறான் என்றால், இவனின் கருணையை நான் என்னவென்று சொல்லி வர்ணிப்பேன்?.

***


No comments:

Post a Comment